ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தால் ஆன டாய்லெட் பேப்பரை தயாரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்த, டாய்லெட் பேப்பர் மேன் என்ற நிறுவனம், சமீபத்தில், 22 காரட் தங்கத்தை வைத்து டாய்லெட் பேப்பரை தயாரிக்க திட்டமிட்டது. இதன் தொடக்கமாக, 22 காரட் தங்க டாய்லெட் பேப்பர் ரோலை தயாரித்துள்ளது. இந்த ரோலின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.4 கோடி($ 1,376,900 million) ஆகும். தங்கத்தால் ஆன இந்த டாய்லெட் பேப்பர் பயன்படுத்த ஏதுவானது மற்றும் பாதுகாப்பானது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த டாய்லெட் பேப்பர் ரோலை ஆடர் செய்தால், அதை அழகாக கிப்ட் பேக் செய்து, இலவசமாக ஷேம்பெய்ன் பாட்டலுடன் உங்களின் வீட்டுக்கு வந்து டெலிவரி செய்வார்கள். துபாயில் தங்கத்தால் ஆன டாய்லெட் சீட்டுகள் தயாரிக்கப்பட்டதை பார்த்து தான், இப்படி ஒரு டாய்லெட் பேப்பரை தயாரித்துள்ளதாக டாய்லெட் பேப்பர் மேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
|