|
||||||
பலவகை கிழங்குகளும் அதன் மருத்துவ குணமும் !! |
||||||
சர்க்கரை வள்ளிக் கிழங்கு:
சத்துக்குறைவான உணவை உண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு வாதத் தொல்லைகளை ஏற்படுத்தும்.
கருணைக் கிழங்கு:
அஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும். மற்றும் வாதசூலை , குன்மநோய், கிருமிகள், வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.
அமுக்கிரா கிழங்கு:
கட்டிகளின் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குணப்படுத்தும். இதை பாலில் நன்கு வேகவைத்து உலர்த்தி பின் இடித்து அத்துடன் கற்கண்டு சேர்த்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தாது புஷ்டி ஏற்படும்.
தாமரைக் கிழங்கு:
கண்களின் தோன்றும் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகிறது. தவளைச்சொறி, உடல்வலி, பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தவல்லது.
முள்ளங்கிக் கிழங்கு:
இருமல், ஜலதோஷம், தலைவலி, கபம், சுவாசக் கோளாறு, குன்மம், பல்நோய், மூலக்கடுப்பு போன்ற குறைபாடுகளை குணமாக்கும்.
பனங்கிழங்கு:
பித்தமேகம், அஸ்திசூடு, ஆகியவற்றை நன்கு குணமாக்கும். உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.
சின்னக் கிழங்கு:
இருதய நோய், ஆஸ்துமா போன்ற பிணிகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
வெற்றிலைவள்ளிக் கிழங்கு:
நல்ல ஊட்டச் சத்தை உடலுக்கு தரக்கூடியது. பாண்டு ரோகம் குணமாகும். சிலருக்கு இக்கிழங்கு வாய்வுக் கோளாறுகளை மிகுதியாக்கக் கூடும். |
||||||
by Swathi on 25 Dec 2013 0 Comments | ||||||
Tags: கிழங்குகள் கிழங்குகளின் பயன்கள் Tubers Benefits Benefits of Tubers Types of Tubers Health Benefits of Tubers | ||||||
Disclaimer: |
||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|