LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சுகாதாரத்தில் வாரணாசி முதலிடம் - தமிழரான ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

உத்தரப்பிரதேசத்தின் சுகாதார தரவரிசை மாவட்டங்கள் பட்டியலில் மீண்டும் வாரணாசி முதல் இடம் பெற்றுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம்.ஐஏஎஸ் தான் இதற்குக் காரணம் என தமிழரான அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
*********************************************
பாஜக ஆளும் உ.பி.யில் ஒவ்வொரு வருடமும் அதன் மாவட்டங்களின் சுகாதார தரவரிசை பட்டியலிடப்படுகிறது. இம்மாநிலத்தின் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நிலைகளில் ஆய்வுசெய்து இந்த தேர்வு செய்யப்படுகிறது.
***********************************
இந்த வருடம் வெளியான சுகாதார மாவட்டங்கள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் வாரணாசி முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில், 85 சதவிகிதம் சிறந்த சுகாதார செயல்பாடுகளை கொண்டதாக வாரணாசி விளங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*********************************
இதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியின் ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம்,ஐஏஎஸ் தமிழர் இருந்துள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவியத் துவங்கி உள்ளன. கடந்த வருடமும் உபியின் சிறந்த சுகாதார மாவட்டங்கள் தரவரிசை பட்டியலில் வாரணாசி முதல் இடம் பெற்றிருந்தது. திருநெல்வேலியின் கடையநல்லூரைச் சேர்ந்த இவர், 2009-ம் ஆண்டு ஐஏஎஸ் பெற்று உ.பி மாநில அதிகாரியானவர்.
*******************************************
இது குறித்து வாரணாசி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர்.சந்தீப் சவுத்ரி கூறும்போது, "இம்மாவட்டவாசிகளின் மருத்துவ நலம் காப்பதில் தொடர்ந்து நம் ஆட்சியர் ராஜலிங்கத்தின் ஆலோசனை பெற்று செய்து வருகிறோம். குறிப்பாக இதில் கருவுறும் பெண்கள் மீதான எச்ஐவி பரிசோதனை மற்றும் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகளை அளிப்பதில் 100 சதவீதம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலவற்றில் இரண்டாவது நிலையையும் நமது மாவட்டம் பெற்றுள்ளது. இதற்கு நமது ஆட்சியர் நேரம் ஒதுக்கி ஆலோசனை அளித்ததுடன் உடனுக்குடன் நம் தேவைகளைப் பூர்த்தி செய்து உற்சாகப்படுத்தி வருவதும் முக்கியக் காரணம்" எனத் தெரிவித்தார்.
****************************************
இலவச கண்புரை அறுவை சிகிச்சை 

தனது தொகுதியான வாரணாசியில் எவருக்கும் பார்வையில் கண்புரை இருக்கக் கூடாது என பிரதமர் விரும்பியுள்ளார். இவரது விருப்பத்தை நிறைவேற்ற உபியின் புந்தேல்கண்ட் பகுதியிலுள்ள சித்ரகுட்டின் ஸ்ரீசத்குரு சேவா சங் அறக்கட்டளையின் மருத்துவமனை முன்வந்தது. இவர்களது மருத்துவர்கள் குழு, வாரணாசியின் அறுபது வயதிற்கும் மேற்பட்டசுமார் எழுபதாயிரம் பேர்களின் கண்களை இதுவரை பரிசோதனை செய்துள்ளது.
***********************************
பிரதமரின் நோக்கமாக உள்ளது
********************************** 
இதில் கண்புரை உள்ளவர்களுக்கு சித்ரகுட் அழைத்துச் சென்று அங்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக அவர்களை அழைத்துச்சென்று திரும்பி கொண்டுவந்து விடுவது வரை பயணச்செலவையும் இந்த அறக்கட்டளை மருத்துவமனையே ஏற்கிறது. இதுகுறித்து வாரணாசி ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, "வாரணாசி வாசிகளில் கண்புரை விழிப்புணர்வு இல்லாதவர் உள்ளிட்ட அனைவருக்கும் படிப்படியாக கண் பரிசோதனை செய்து குளிர்காலங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரையும் சிகிச்சை பெற்ற சுமார் 5,000 பேர்களில் சிலரை அழைத்து பிரதமர் தனது சமீபத்திய வாரணாசி விஜயத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்த நோயானது அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்புள்ளது என்றாலும், இன்னும் 2 வருடங்களில் வாராணாசியில் கண்புரையுடன் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்பது பிரதமரின் நோக்கமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நாம் சுகாதார விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

by Kumar   on 05 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.