சுவாமி சன்னதி முன் அர்த்தமண்டபத்தில் வானர ஆஞ்சநேயர் இருக்கிறார். இவர் தலையில் கிரீடம் இல்லாமல், ராமபிரானுக்கு உதவி செய்தபோது இருந்த அமைப்பில், வானரம் போலவே இருக்கிறார். ஏகதள விமானத்தின் கீழ், வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சுவாமி சன்னதி முன் அர்த்தமண்டபத்தில் வானர ஆஞ்சநேயர் இருக்கிறார்.
இவர் தலையில் கிரீடம் இல்லாமல், ராமபிரானுக்கு உதவி செய்தபோது இருந்த அமைப்பில், வானரம் போலவே இருக்கிறார். கூப்பிய இரு கைகளுக்கு நடுவே ஜபமாலை வைத்திருக்கிறார். சுவாமி எதிரேயுள்ள மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். இங்கு பெருமாளின் தசாவதார ஓவியங்களும், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களும் தொகுப்பாக எழுதப்பட்டுள்ளது.
வேண்டும் வரங்களைத் தருபவர் என்பதால் இவருக்கு, "வரம் தரும் வரதராஜர்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவரை வணங்கினாலே வாழும் காலத்தில் சொர்க்கமும், வாழ்க்கைக்குப் பின் மோட்சமும் கிடைக்குமென்பது ஐதீகம். எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி சன்னதிக் கதவையே சொர்க்கவாசலாகத் திறக்கின்றனர். |