உடலில் எட்டு நாகங்களோடு கருடாழ்வார் காட்சி தருவது சிறப்பு.காஞ்சியில் பெரிய ஆலயம் கொண்டு, வரம் தருவதே எமது வாடிக்கை; அது தவிர வேறொன்றும் அறியேன் என்று சொல்லி அமர்ந்தார் வரதாஜப் பெருமான். தான் வருவதற்கு முன்னரே தனது அம்ச மூர்த்தியை பல்வேறு தலங்களில் நிலைநிறுத்திக் கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருந்தது. அவற்றில் ஒன்றாக நல்லாத்தூரிலும் ஆட்சி கொண்டார்.
ராவணனை வீழ்த்திய பின் பாரத தேசத்தின் அனைத்து மக்களையும் காண்பதற்காக, சிறு கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை சீதாப்பிராட்டியோடு ராமர் திருவலம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தார். மக்கள் அனைவரும் ராமநாமம் சொல்லி அவரை வரவேற்றனர். தங்களின் திருப்பாதங்களைப் பதித்து விட்டு செல்லுங்கள். அனுதினமும் அதைப் பூஜித்து ஆனந்தமடைவோம் என அன்புடன் கேட்டுக் கொண்டனர். ராமரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றார். |