|
|||||
குழந்தை இலக்கியத்துக்கான சாகித்திய அகாடமி விருது பெறுகிறார் விஷ்ணுபுரம் சரவணன் |
|||||
![]()
சாகித்திய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்குப் பால சாகித்திய புரஸ்கார் விருதும், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளைப் பெறும் எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழில் இந்த ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது, 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழங்கப்படுகிறது.
கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் இவர்.
வாத்து ராஜா, கதை கதையாம் காரணமாம், வானத்துடன் டூ, வித்தைக்காரச் சிறுமி, நீலப்பூ, கயிறு உள்ளிட்ட கதைகளை எழுதியிருக்கிறார். சிறார்கள், இளையோரிடையே சாதி, ஏற்றத் தாழ்வுகள், சமத்துவம், சமூகம் குறித்து விழிப்புணர்வையும், கலந்துரையாடலையும் எழுத்தின் வழியே நிகழ்த்துவதில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
இந்தாண்டுக்கான யுவ புரஸ்கார் விருது 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் பணியாற்றிவரும் இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.
|
|||||
by hemavathi on 18 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|