|
||||||
ராஜேந்திர சோழன் நாணயத்தில் சிறப்புகள் என்னென்ன? |
||||||
![]()
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த நாணயம் ரூ.1,000 மதிப்பைக் கொண்டது. அதன் முன்புறம், இந்தியாவின் இறையாண்மையை அடையாளப்படுத்தும் வகையில், தமிழில், வாய்மையே வெல்லும் எனப் பொருள்படும் வகையில், தமிழில், வாய்மையே வெல்லும் எனப் பொருள்படும் வகையிலான சத்யமேவ ஜெயதே எனப் பொறிக்கப்பட்டு உள்ளது.
அதன் மேல், அசோகச் சின்னம் உள்ளது. இடதுபுறத்தில், தேவநாகரியில் பாரத் என்றும் வலதுபுறத்தில், ஆங்கிலத்தில் இந்தியா என்றும் பதிக்கப்பட்டு உள்ளது. அசோகா தூணுக்குக் கீழே, ரூபாய்க்கான அடையாளமும், ஆயிரம் என்ற எண்ணும் பொறிக்கப்பட்டு உள்ளன.
நாணயத்தின் பின்புறம், பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் கடற்படையைக் காட்சிப்படுத்தும் வகையில், நாணயத்தின் மையத்தில் உருவம் பதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் ஆயிரம் ஆண்டுகள் கடற்படை பயணம் என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகரியில் வரி வடிவில் பொறிக்கப்பட்டு உள்ளது. வட்ட வடிவில் 44 மி.மீ. விட்டம் கொண்ட இந்த நாணயம் 99.9 சதவீதம் தூய வெள்ளியால் உருவானது. 40 கிராம் எடை கொண்டது.
|
||||||
by hemavathi on 28 Jul 2025 0 Comments | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|