|
|||||
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். |
|||||
அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெறும் FIDE WorldCup 2023 உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். அஜர்பைஜானில் நடந்த போட்டியின் அரை இறுதிப் போட்டியின் முதல் காயை பிரக்ஞானந்தா Praggnanandhaa R. அவர் விருப்பப்படி நகர்த்தி தொடங்கிவைத்தார் அசர்பைஜான் நாட்டின் இந்தியத் தூதர் திரு.ஸ்ரீதரன் மதுசூதனன். பிரக்யானந்தாவின் வயது 17, இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த அவர் உலக அரங்கில் புகழ்பெற்ற செஸ் ஆட்டக்காரராக வலம் வந்து கொண்டிருக்கும் நேரம் இந்த வாய்ப்பினை பெற்றிருக்கின்றார். இன்று இறுதிபோட்டியில் அவர் நார்வேவின் 32 வயதான அந்த மேக்னஸ் கார்லெஸை சந்திக்கின்றார், கார்லெஸ் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் பெற்றவர். இவர் பிற ஆட்டங்களில் இதே பிரக்ஞானந்தாவிடம் 3 முறை தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக இளம் வயதிலே அந்த உலக சாம்பியனை மும்முறை வென்றவர் பிரக்யானந்தா என்பதால் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உண்டு. இவருடைய ஆட்டம் உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது. செஸ் என்பது அறிவால் கணக்கிட்டு விளையாடும் கணித விளையாட்டு, அது விளையாட கணிப்பிடும் திறனும், கணக்கீடும் அவசியம், மூளை பலத்தால் விளையாடும் விளையாட்டு அது, மனோசக்தி அதிகம் வேண்டும் வெற்றிவாகை சூடி வர வாழ்த்துவோம்..
|
|||||
by Swathi on 22 Aug 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|