ஆரோக்கிய தாஸ் இயக்கத்தில் காமெடி நடிகர் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் படம் 49 ஓ.
இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் கவுண்டமணியுடன், எம்.எஸ்.பாஸ்கர்,மயில்சாமி, ஜான் விஜய், விடிவி.கணேஷ், சோமசுந்தரம், திருமுருகன், விருமாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே 18 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதை தொடர்ந்து இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட உள்ளனர்.
|