LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய 10 இந்து கோயில்களின் பட்டியல் இதோ.. இதில் தமிழகத்தில் மட்டுமே 7 கோயில்கள் உள்ளன.

 

இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்துக் கோவில்கள் பிரம்மாண்டமாகவும், அற்புத கட்டிடக்கலையுடன் கட்டப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட இந்தக் கோவில்களில் எந்தவித இயந்திரப் பயன்பாடும் இல்லாமல் கட்டப்பட்டன.

 

அக்ஷர்தாம் கோயில், டெல்லி

 

சுவாமிநாரயண் கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 10,000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரம், ஆன்மீகத்தைக் கட்டிடக்கலை சித்தரிக்கிறது. இந்த கோயில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

 

ஆங்கோர் வாட் கோயில், கம்போடியா

 

 கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வாட் கோயில் வளாகம் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலாகும். சிம்ரிப் நகரில் மீகாங் ஆற்றின் கரையில் கட்டப்பட்ட இந்தக் கோயில், கெமர் கட்டிடக்கலையின் பழமையைக் காட்டுகிறது. இந்தக் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

 

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

 

அண்ணாமலையார் கோயில் 1,01,171 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவில் இந்தியாவின் மிகப்பெரிய இந்துக் கோவில்களில் ஒன்றாகும்.

 

பேலூர் மடம், மேற்கு வங்கம்

 

ஹூக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பேலூர் மடம் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது. இது நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

 

 

பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சை

 

1000 ஆண்டு பழமையான தஞ்சை பெரியகோவில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கு கட்டப்பட்ட மிகப்பெரிய இந்துக் கோவில். கிரானைட் கல்லினால் கட்டப்பட்ட இந்தக் கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜம்புகேஷ்வர் கோவில், திருச்சி

 

திருச்சி திருவானைக்காவல் கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில். ஆறாம் நூற்றாண்டில் இந்த திருத்தலம் கட்டப்பட்டுள்ளது.

 

ஏகாம்பரேஸ்வர கோவில், காஞ்சிபுரம்

 

காஞ்சி ஏகாம்பரேஸ்வர கோவில் பிரசித்திபெற்ற சிவன் கோவில். இந்த கோவில் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

 

 

நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி

 

திருநெல்வேலியில் அமைந்துள்ள இந்த கோவில் சுமார் 71,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவின் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

 

தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்

 

 சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படும் நடராஜர் கோயில் சிவபெருமானின் முக்கிய கோயில்களில் ஒன்றாகும். 1,06,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, நடராஜராக சிவனின் தனித்துவமான வடிவம் கோயிலின் முதன்மை தெய்வம் மற்றும் அவர் கோயிலின் ஒவ்வொரு கல் மற்றும் தூணிலும் காணப்படுகிறார்.

 

ஸ்ரீரங்கம், திருச்சி

 

 பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. ஸ்ரீரங்கம் இந்தியாவில் மிகப்பெரிய கோயிலாகும், உலகின் இராண்டவது பெரிய கோயிலாகவும் உள்ளது.

by Kumar   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.