LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்) பெற விண்ணப்பிப்பது எப்படி ? என்னென்ன சான்றுகளை சமர்பிக்க வேண்டும் ?

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதை ஒரு பெரிய விஷயமாக காட்டி ஏராளமான ஏமாற்று நிறுவனங்கள் பொது மக்களிடையே ஏராளமான பணத்தை பிடுங்கி வருகின்றன. இது போன்ற நிறுவனங்களிடம் நீங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான் இந்த விழிப்புணர்வு கட்டுரை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில வழிமுறைகளை நீங்கள் தெரிந்து கொண்டு சென்றால் நிச்சயமாக நீங்கள் ஓட்டுனர் உரிமத்தை விரைவாகவும், எளிமையாகவும் பெற முடியும். 

 

பழகுனர் உரிமம்(எல்எல்ஆர்) :

 

ஓட்டுனர் உரிமம்(டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுனர் உரிமம் பெறுவதுதான். எல்எல்ஆர் எடுப்பது பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம். 

 

வயது தகுதி : 

 

50 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மொபட் ஓட்டுவதற்கு -  16 முதல் 18 நிரம்பியவர்கள் 

 

கியர் கொண்ட அனைத்து இருசக்கர மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு - 18 வயது நிரம்பியவர்கள் 

 

கனரக வாகனங்களுக்கு - 20 வயது பூர்த்தியடைந்தோர் 

 

சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் : 

 

முதலில் எல்எல்ஆர் வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை பார்க்கலாம். எல்எல்ஆர் விண்ணப்பிக்க செல்லும்போது கீழ்க்கண்ட ஆவணங்களில் இருப்பிட மற்றும் வயதுச் சான்றுகளாக எடுத்துச் செல்வது அவசியம்.

 

இருப்பிட சான்றாக கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம். 

 

ரேஷன் கார்டு 

 

பாஸ்போர்ட் 

 

எல்ஐசி பாலிசி 

 

வாக்காளர் அடையாள அட்டை 

 

டெலிபோன் பில் 

 

மின்கட்டண ரசீது 

 

குடிநீர் கட்டண ரசீது 

 

சாதிச் சான்று மற்றும் தாசில்தாரால் வழங்கப்பட்ட வருமானச் சான்று 

 

அரசு ஊழியர்களின் வருமானச் சான்று 

 

வயதை நிரூபிப்பதற்கான சான்றுகளாக கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் 

 

பள்ளிச் சான்று 

 

பிறப்பு சான்று 

 

பான் கார்டு 

 

சிவில் சர்ஜன் தகுதியுடைய டாக்டர்கள் வழங்கும் வயது சான்று 

 

நீதிமன்றத்தால் வழங்கப்படும் வயது சான்று 

 

இவற்றில் இரண்டு ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லுங்கள். அங்கு எல்எல்ஆருக்கு வழங்கப்படும் படிவம் 1 மற்றும் 2 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட ஆவணங்களை இணைத்து 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை இணைத்து துணை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

 

கட்டணம் எவ்வளவு : 

 

இருசக்கர வாகனம் அல்லது காருக்கு மட்டும் என்றால் ரூ.60 கட்டணமாகவும், இரண்டும் சேர்த்து எடுக்கும்போது ரூ.90 கட்டணமாகவும் செலுத்த வேண்டும். 

 

இதைத்தொடர்ந்து, விண்ணப்பதாரருக்கு தேர்வு நடத்தப்படும். எஸ்எஸ்எல்சி என்று கூறப்படும் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு எழுத்து தேர்வும், பத்தாவது படிக்காதவர்களுக்கு வாய்மொழியாக பதில் அளிக்கும் தேர்வும் நடத்தப்படும். 

 

மோட்டார் வாகன சட்டத்தின் 118 பிரிவின்படி போக்குவரத்து விதிகள், சமிக்ஞைகள் மற்றும் இதர சாலை நடைமுறைகளை பற்றி விண்ணப்பதாரருக்கு தெரிகிறதா என்பதற்காகத்தான் இந்த தேர்வு. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அன்றைய தினமே எல்எல்ஆர் கைக்கு கிடைத்துவிடும். இது தற்காலிகமாக நீங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு கிடைக்கும் லைசென்ஸ்தான். 

 

எல்எல்ஆர் செல்லுபடியாகும் காலம் :

 

எல்எல்ஆர் பெற்று 30 நாட்களுக்கு பிறகு நிரந்தர லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், எல்எல்ஆர் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் இதை வைத்து நிரந்தர லைசென்ஸ் பெற முடியும். இந்த எல்எல்ஆர் காலாவதியானால் நீங்கள் புதிதாக எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான். 

 

எல்எல்ஆர்யை ஆன்-லைனில் விண்ணப்பிக்க :

 

ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்: எல்எல்ஆர் பெறுவதற்கு இப்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியும் இருக்கிறது. கீழ்க்கண்ட இணையதள முகவரியில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

 http://transport.tn.nic.in/transport/appointment.do?_tq=f3e7c83b223cfeedbc12422fa73b307e 

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அனைத்து விபரங்களையும் கொடுத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் முன்பதிவு பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த குறி்ப்பிட்ட தேதியில் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காட்ட வேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால் அன்றைய தினமே எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்) வழங்கப்பட்டு விடும். 

 

அடுத்த கட்டுரையில் ஓட்டுனர் உரிமம் பெறுவது பற்றி காண்போம்....

by Swathi   on 21 Jan 2014  8 Comments
Tags: LLR   How to Apply LLR   Apply LLR Online   Learner Licence   Driving Licence Apply   LLR Application   எல்எல்ஆர்  
 தொடர்புடையவை-Related Articles
எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்) பெற விண்ணப்பிப்பது எப்படி ? என்னென்ன சான்றுகளை சமர்பிக்க வேண்டும் ? எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்) பெற விண்ணப்பிப்பது எப்படி ? என்னென்ன சான்றுகளை சமர்பிக்க வேண்டும் ?
கருத்துகள்
15-Feb-2021 01:03:55 Anantharaj said : Report Abuse
எனுடை பிறந்த தேதி 08/05/2003 apply செய்யலாமா
 
04-Oct-2020 06:10:47 K jothika said : Report Abuse
Super
 
14-Aug-2020 09:28:42 M.Abdul hakkim said : Report Abuse
llr appliy in online
 
17-May-2020 16:00:32 dhinesh said : Report Abuse
தேவை
 
21-Jan-2020 04:26:24 Hari said : Report Abuse
Doctor certificate compulsory venuma??... Age 23
 
10-Aug-2015 20:50:38 R.Suresh said : Report Abuse
Good
 
21-Jan-2014 09:25:17 baka said : Report Abuse
very very nice
 
21-Jan-2014 04:13:08 GANESHKUMAR said : Report Abuse
நல்ல இன்பிர்மடிஒன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.