LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

இல்லாள் என்பதற்கு ஆண்பால் சொல் என்ன?

இல்லாள் என்பது இல்லத்தை நிர்வகிப்பவளாகிய பெண்ணைக் குறிக்கிறது. இல்லத்தாள். இல் ஆள். இல்லத்தை ஆள்பவள் என்று நாம் கவித்துவமாக விளக்கம் கொடுப்பது வேறுவகை. அதன் நேரடி ஆண்பால் சொல்லான ‘இல்லான்’ என்பது இல்லாதவனையே குறிக்கிறது.

இல்லான் என்றால் இல்லத்தை உடைய ஆடவன் என்று முதற்கண் கருதப்படுவதில்லை. ஏழை என்றே கருதப்படும். ஆனால், இல்லாள் இருக்கும்போது ஆண்பால் இருந்தே ஆகவேண்டும் அல்லவா ? ஆண்பால் சொல் இல்லை என்றால் பண்பாடே கேள்விக்குறியாகிறதே. ஊன்றித் தேடியதில் ‘இல்லாளன்’ என்ற சொல் இருக்கிறது.

இல்லாளன் வைக்கவெனத் தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிக ளிரண்டினிலொன் றைக்கொண்டு
- என்று திருத்தொண்டர் புராணம் நவில்கிறது.

இந்தச் சொல்லின் நுண்மையான பொருள் ‘இல்லாள் உடையவன்’ என்பதாகும். இல்லான்’ என்பதுகூட ‘இல்லத்தை உடையவன்’ என்று வெறுமையாகப் பொருள் தருகிறது. அதில் திருமணமானவன் என்ற குறிப்பு இல்லை. ‘இல்லாளன்’ என்பதில் இல்லமும் இருக்கிறது. இல்லத்தரசியும் இருக்கிறாள் !

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  2 Comments
Tags: Illaal   இல்லாள்                 
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்... தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
காலாவை முந்துமா விஸ்வரூபம் 2? காலாவை முந்துமா விஸ்வரூபம் 2?
பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்... பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்
தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்) தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்... காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...
கருத்துகள்
12-Nov-2016 06:20:01 யோ. பொருநன் said : Report Abuse
இல்லாள் என்பது இல் + ஆள் எனில், அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பட்டமாகவே கொள்ளவேண்டும். மனைவி, கணவனுக்கு இல்லாள் (spouse); கணவன், மனைவிக்கு இல்லாள் (spouse)! அதனாலேயே இல்லாள் என்ற சொல்லுக்கு ஆண்பால் இல்லை. மொத்தத்தில் இல்லாள் என்ற சொல் பெண்பால் சொல்லே அல்ல! அது வேலையாள் என்ற சொல்போன்று இருபால் சொல். வேலையாள் என்ற சொல்லுக்கு ஆண்பால் சொல்லைத் தேடுவது போன்றதுதான் இல்லாள் என்ற சொல்லுக்கு ஆண்பால் சொல் தேடுவதும்!
 
04-Nov-2016 12:39:59 N .Karunanithi said : Report Abuse
OK
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.