LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

மாசே துங்

மக்களுக்காக வாழ்ந்தவர்களின் மரணம்

இமயமலையைவிடக் கனமானது .

பிற்போக்காளர்களின் மரணமோ ,

இறகைவிட லேசானது .


மக்கள் சீனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் மாசே துங் ( Mao Tse-tung ) ஆவார் . இவர் சீனாவில் ஹூனான் மகாணத்தில் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று பிறந்தார் . ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் . பகலில் பள்ளிக்குச் சென்றுவிட்டு அதிகாலையிலும் , இரவிலும் விவசாய வேலையில் ஈடுபட்டார் . படிப்பை முடித்ததும் பள்ளிக்கூட ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார் . பீகிங் பல்கலைக்கழக நூலகத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தபோது கம்யூனிஸக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார் . சீனப் பொதுவுடமைக் கட்சியை தோற்றுவித்த 12 தலைவர்களில் ஒருவராக மாசே துங் இருந்தார் .1935 ஆம் ஆண்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் .

சீனாவில் நடந்த கம்யூனிசப் புரட்சியையும் , அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார் . மாசே துங் தன் புரட்சி படையினருடன் நீண்ட நடைப்பயணத்தை ( Long March ) மேற்கொண்டார் . இப்படையில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர் . அவர் பயணம் செய்த தூரம் 8 ஆயிரம் மைல்கள் . இந்த மகத்தான சாதனையால் மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார் .1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று சீன மக்கள் குடியரசை நிறுவினார் . சீன வரலாற்றையே மாற்றி அமைத்ததால் இவரை நவ சீனத்தின் சிற்பி என்று அழைத்தனர் . இவர் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.