LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-115

3.115.திருஆலவாய் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. 
தேவியார் - மீனாட்சியம்மை. 
4035 ஆலநீழ லுகந்த திருக்கையே
யானபாட லுகந்த திருக்கையே
பாலினேர்மொழி யாளொரு பங்கனே
பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே
கோதிலார்மன மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே
யாலவாயுறை யண்டர் களத்தனே
3.115.1
சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர். அவருக்கு விருப்பமான பாடல் இருக்குவேதமாகும். அவர் பால் போன்று இனிய மொழி பேசும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். தம் திருவடிகளைப் போற்றாத அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர். அழகிய திருநீற்றைப் பூசிய சிறந்த பூதகணங்களைப் படையாக உடையவர். குற்றமற்றவர்கனின் உள்ளத்தில் தங்கிய உயிர்க்கு உயிரானவர். ஆலகால விடமுண்ட கண்டத்தையுடையவர். தேவர்கட்கெல்லாம் தலைவரான அவர் திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 
4036 பாதியாவுடன் கொண்டது மாலையே
பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையே
கோதினீறது பூசிடு மாகனே
கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதனாடொறு மாடுவ தானையே
நாடியன்றுரி செய்தது மானையே
வேதநூல்பயில் கின்றது வாயிலே
விகிர்தனூர்திரு வாலநல் வாயிலே
3.115.2
சிவபெருமான் தம் உடம்பில் பாதியாகக் கொண்டது திருமாலை. பாம்பும், கொன்றை மலரும் அவருக்கு நன்மாலைகளாகும். குற்றமற்ற திருநீறு பூசிய மார்பை உடையவர். இடத் திருக்கரத்தில் மானை ஏந்தியுள்ளவர். அவர் நாள்தோறும் அபிடேகம் கொள்வது பஞ்ச கவ்வியத்தால். அவர் உரித்தது யானையை. வேத நூல்களை அருளுவது அவரது திருவாய். விகிர்தரான அவர் விரும்பி வீற்றிருந்தருளுவது திரு ஆலவாய். 
4037 காடுநீட துறப்பல கத்தனே
காதலால்நினை வார்தம கத்தனே
பாடுபேயொடு பூதம சிக்கவே
பல்பிணத்தசை நாடிய சிக்கவே
நீடுமாநட மாடவி ருப்பனே
நின்னடித்தொழ நாளுமி ருப்பனே
ஆடனீள்சடை மேவிய வப்பனே
யாலவாயினின் மேவிய வப்பனே
3.115.3
இறைவர், பெரிய சுடுகாட்டில் எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயிருப்பவர். தம்மைப் பத்தியால் நினைவார்தம் உள்ளத்தில் இருப்பவர். பாடுகின்ற பேய், மற்றும் பூதகணங்களுடன் குழைந்திருப்பவர். அக்கணங்கள் பிணத்தசைகளை விரும்பியுண்ண நடனம் ஆடுபவர். திரு வடிகளைத் தொழுபவர்கட்கு நாளும் அருள்புரிபவர். அசைகின்ற சடைமீது கங்கையைத் தாங்கியுள்ளவர். திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தந்தை அவரே. 
4038 பண்டயன்றலை யொன்று மறுத்தியே
பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே
தூயவெள்ளெரு தேறியி ருத்தியே
கண்டுகாமனை வேவ விழித்தியே
காதலில்லவர் தம்மை யிழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே
யாலவாயினின் மேவிய கண்டனே
3.115.4
முற்காலத்தில் நீர் பிரமனின் தலை ஒன்றை அறுத்தீர்.உம் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் பாவங்களை அறுப்பீர். பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்துள்ளீர். தூய வெண்ணிற இடபத்தின் மீது இருப்பீர். மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தீர். அன்பில்லாதவரை இகழ்வீர். தேவர் 
4039 சென்றுதாதை யுகுத்தனன் பாலையே
சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே
வீழவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால்
நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே
யாலவாயர னாகத் தடவியே
3.115.5
தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்குரிய பாலைக் கவிழ்த்துவிட, புதல்வராகிய விசாரசருமர் சினந்து அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச அது மழுவாக மாறித் தந்தையின் முன்காலை வெட்டிற்று. ஆங்குச் சிவபூசை ஆற்றிய பிரமசாரியான அவ்விசார சருமருக்குக் கங்கை முதலானவற்றை அணிந்த திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான். அப்பெருமான், தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின் பாவத்தைப் போக்கித் தம் திருக்கையால் வருடிச் சிவசாரூபம் பெறத்தடவிச் சண்டீச பதம் தந்து அருளினர். அப்பெருமான் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரன் ஆவார். 
4040 நக்கமேகுவர் நாடுமோ ரூருமே
நாதன்மேனியின் மாசுண மூருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே
தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் றேவிக் கணியையே
மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கல னோடுமே
யாலவாயர னாருமை யோடுமே
3.115.6
சிவபெருமான் நாடுகளிலும், ஊர்தோறும் ஆடையில்லாக் கோலத்தோடு பிச்சைக்குச் செல்வார். அவர் திருமேனியில் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணரை அழைத்து வரும்படி அடியார்களுக்குக் கனவில் ஏவ, அவ்வாறே வந்து அப்பாணர் பாடும்போது பொற்பலகை அருளி அமரச் செய்தார். தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு மங்கலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர். திருத்தொண்டர்க்கு அண்மையாய் விளங்குபவர். எலும்புமாலை அணிந்துள்ளவர். மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டவர். அப்பெருமான் திருஆலவாயில் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார். 
4041 வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே
வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே
யன்பினால்நினை வார்க்கருண் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே
வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே
யாலவாயரன் கையது வீணையே
3.115.7
சிவபெருமான் சூரியனுடைய பல்லை உதிர்த்து கையால் குட்டி. அவர் கையிலிருப்பது கொடிய கண்களையுடைய பாம்புக்குட்டி. அவரே தலைவர். அனலில் ஆடும் திருமேனியுடையவர். அன்பால் நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அருள் வழங்கும் மெய்யர். உலகமுய்ய அன்று அவர் உண்டது விடமே. வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலான அவர் கையில் விளங்குவது எலும்புக்கூடே. அவர் பிச்சை ஏற்பதாக உலகோர் உரைப்பது வீண் ஆகும். திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனார் கையிலுள்ளது வீணையே. 
4042 தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே
தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்க னிலத்துக் களித்துமே
வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே
நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ
வாலவாயர னுய்த்தது மெய்கொலோ
3.115.8
வாளைக் கையிலேந்திய இராவணன் தன் இருபது தோள்களின் வலிமையையும் சேர்த்துக் கொண்டு திக்குவிசயம் செய்து, தன்னை எதிர்க்க வந்த தேவர்களின் வலிமையை மயங்கச் செய்து, இப்பூவுலகில் களித்து நிற்க, தன் தேரைத் தடுத்த கயிலை மலையைக்கண்டு வெகுண்டு பாய்ந்து சென்று அதனைப் பெயர்த்து எடுத்து உன்மத்தன் ஆயினன். அந்நிலையில் இறைவர் தம் திருப்பாத விரலை ஊன்ற, இராவணனின் தலை நெரிய, அவன் செருக்கு அழிந்தவன் ஆயினான். உலகனைத்தும் ஆளுகின்ற முதல்வராகிய தாம் அவ்வரக்கனின் உடலை முறியச் செய்தது மெய்கொல்? திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனே! பின்னர் அவனது பாடலைக் கேட்டு அருள்செய்ததும் உண்மையான வரலாறு தானோ? 
4043 பங்கயத்துள நான்முகன் மாலொடே
பாதநீண்முடி நேடிட மாலொடே
துங்கநற்றழ லின்னுரு வாயுமே
தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கணி னாரிடு பிச்சையே
சென்றுகொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத்திகழ் விப்ப திடக்கையே
யாலவாயர னார திடக்கையே
3.115.9
செந்தாமலை மலரில் வீற்றிருக்கும் பிரமன் திருமாலோடு இறைவனின் அடியையும், முடியையும் தேட, அவர்கள் மயங்க, உயர்ந்த நல்ல அக்கினி உருவாய் நின்றான். பின்னர்த் தங்கள் பிழைகளை மன்னித்து அருளுமாறு தூய பாடல்களைப் பாடின, அவர்கள் வாய். சிவந்த கயல்மீன்கள் போன்ற கண்களையுடைய முனிபத்தினிகள் இறைவருக்கு இட்டது பிச்சையே. அதனை ஏற்று அவர் உரைசெய்தது அவர்கட்குப் பித்து உண்டாகும் வண்ணமே. அவர் நெருப்பேந்தியுள்ளது இடத் திருக்கரத்திலே. திருஆலவாய் சிவபெருமான் திடமாக வீற்றிருந்தருளும் இடம் ஆகும். 
4044 தேரரோடம ணர்க்குநல் கானையே
தேவர்நாடொறுஞ் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே
கொண்டநீள்கழல் புண்டரி கத்தையே
நேரிலூர்க ளழித்தது நாகமே
நீள்சடைத்திகழ் கின்றது நாகமே
ஆரமாக வுகந்தது மென்பதே
யாலவாயர னாரிட மென்பதே
3.115.10
சிவபெருமான் தம்மைப் போற்றாத புத்தர்கட்கும், சமணர்கட்கும் அருள்புரியாதவர். தேவர்கள் நாள்தோறும் சென்று வணங்குவது அவர் எழுந்தருளியிருக்கும் கடம்பவனத்தை. அவர் வெற்றிகொண்டு வீழ்த்தியது புலியையே. திருமால் இறைவனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரை மலர் போன்ற கண்ணையே. பகைமை கொண்ட மூன்று புரங்களை அழித்தது மேருமலை வில்லே. பெருமானின் நீண்ட சடைமுடியில் விளங்குவது நாகமே. இறைவன் மாலையாக விரும்பி அணிவது எலும்பே. அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருஆலவாய் என்பதே. 
4045 ஈனஞானிக டம்மொடு விரகனே
யேறுபல்பொருண் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுண் ஞானசம்பந்தனே
யாலவாயினின் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினு ளத்தனே
யன்பரானவர் வாயினு ளத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே
வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே
3.115.11
தேவர்களால் துதிக்கப்படும் தலைவரே. அடியவர்களின் இனிய உள்ளத்தில் இருப்பவரே! நல்லறிவு அற்றவர்கள்பால் பொருந்தாத கொள்கையுடையவரே. பல பொருள்களை அடக்கிய, முத்தமிழ் விரகரான சீகாழியுள் அவதரித்த ஞான சம்பந்தர், திருஆலவாய் இறைவரிடம் உரிமையுடையவராய் அவரைப் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் ஓதவல்லவர்கட்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். 
திருச்சிற்றம்பலம்

3.115.திருஆலவாய் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. தேவியார் - மீனாட்சியம்மை. 

4035 ஆலநீழ லுகந்த திருக்கையேயானபாட லுகந்த திருக்கையேபாலினேர்மொழி யாளொரு பங்கனேபாதமோதலர் சேர்புர பங்கனேகோலநீறணி மேதகு பூதனேகோதிலார்மன மேவிய பூதனேஆலநஞ்சமு துண்ட களத்தனேயாலவாயுறை யண்டர் களத்தனே3.115.1
சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர். அவருக்கு விருப்பமான பாடல் இருக்குவேதமாகும். அவர் பால் போன்று இனிய மொழி பேசும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். தம் திருவடிகளைப் போற்றாத அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர். அழகிய திருநீற்றைப் பூசிய சிறந்த பூதகணங்களைப் படையாக உடையவர். குற்றமற்றவர்கனின் உள்ளத்தில் தங்கிய உயிர்க்கு உயிரானவர். ஆலகால விடமுண்ட கண்டத்தையுடையவர். தேவர்கட்கெல்லாம் தலைவரான அவர் திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 

4036 பாதியாவுடன் கொண்டது மாலையேபாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையேகோதினீறது பூசிடு மாகனேகொண்டநற்கையின் மானிட மாகனேநாதனாடொறு மாடுவ தானையேநாடியன்றுரி செய்தது மானையேவேதநூல்பயில் கின்றது வாயிலேவிகிர்தனூர்திரு வாலநல் வாயிலே3.115.2
சிவபெருமான் தம் உடம்பில் பாதியாகக் கொண்டது திருமாலை. பாம்பும், கொன்றை மலரும் அவருக்கு நன்மாலைகளாகும். குற்றமற்ற திருநீறு பூசிய மார்பை உடையவர். இடத் திருக்கரத்தில் மானை ஏந்தியுள்ளவர். அவர் நாள்தோறும் அபிடேகம் கொள்வது பஞ்ச கவ்வியத்தால். அவர் உரித்தது யானையை. வேத நூல்களை அருளுவது அவரது திருவாய். விகிர்தரான அவர் விரும்பி வீற்றிருந்தருளுவது திரு ஆலவாய். 

4037 காடுநீட துறப்பல கத்தனேகாதலால்நினை வார்தம கத்தனேபாடுபேயொடு பூதம சிக்கவேபல்பிணத்தசை நாடிய சிக்கவேநீடுமாநட மாடவி ருப்பனேநின்னடித்தொழ நாளுமி ருப்பனேஆடனீள்சடை மேவிய வப்பனேயாலவாயினின் மேவிய வப்பனே3.115.3
இறைவர், பெரிய சுடுகாட்டில் எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயிருப்பவர். தம்மைப் பத்தியால் நினைவார்தம் உள்ளத்தில் இருப்பவர். பாடுகின்ற பேய், மற்றும் பூதகணங்களுடன் குழைந்திருப்பவர். அக்கணங்கள் பிணத்தசைகளை விரும்பியுண்ண நடனம் ஆடுபவர். திரு வடிகளைத் தொழுபவர்கட்கு நாளும் அருள்புரிபவர். அசைகின்ற சடைமீது கங்கையைத் தாங்கியுள்ளவர். திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தந்தை அவரே. 

4038 பண்டயன்றலை யொன்று மறுத்தியேபாதமோதினர் பாவ மறுத்தியேதுண்டவெண்பிறை சென்னி யிருத்தியேதூயவெள்ளெரு தேறியி ருத்தியேகண்டுகாமனை வேவ விழித்தியேகாதலில்லவர் தம்மை யிழித்தியேஅண்டநாயக னேமிகு கண்டனேயாலவாயினின் மேவிய கண்டனே3.115.4
முற்காலத்தில் நீர் பிரமனின் தலை ஒன்றை அறுத்தீர்.உம் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் பாவங்களை அறுப்பீர். பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்துள்ளீர். தூய வெண்ணிற இடபத்தின் மீது இருப்பீர். மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தீர். அன்பில்லாதவரை இகழ்வீர். தேவர் 

4039 சென்றுதாதை யுகுத்தனன் பாலையேசீறியன்பு செகுத்தனன் பாலையேவென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையேவீழவெட்டிடக் கண்டுமுன் காலையேநின்றமாணியை யோடின கங்கையால்நிலவமல்கி யுதித்தன கங்கையால்அன்றுநின்னுரு வாகத் தடவியேயாலவாயர னாகத் தடவியே3.115.5
தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்குரிய பாலைக் கவிழ்த்துவிட, புதல்வராகிய விசாரசருமர் சினந்து அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச அது மழுவாக மாறித் தந்தையின் முன்காலை வெட்டிற்று. ஆங்குச் சிவபூசை ஆற்றிய பிரமசாரியான அவ்விசார சருமருக்குக் கங்கை முதலானவற்றை அணிந்த திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான். அப்பெருமான், தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின் பாவத்தைப் போக்கித் தம் திருக்கையால் வருடிச் சிவசாரூபம் பெறத்தடவிச் சண்டீச பதம் தந்து அருளினர். அப்பெருமான் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரன் ஆவார். 

4040 நக்கமேகுவர் நாடுமோ ரூருமேநாதன்மேனியின் மாசுண மூருமேதக்கபூமனைச் சுற்றக் கருளொடேதாரமுய்த்தது பாணற் கருளொடேமிக்கதென்னவன் றேவிக் கணியையேமெல்லநல்கிய தொண்டர்க் கணியையேஅக்கினாரமு துண்கல னோடுமேயாலவாயர னாருமை யோடுமே3.115.6
சிவபெருமான் நாடுகளிலும், ஊர்தோறும் ஆடையில்லாக் கோலத்தோடு பிச்சைக்குச் செல்வார். அவர் திருமேனியில் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணரை அழைத்து வரும்படி அடியார்களுக்குக் கனவில் ஏவ, அவ்வாறே வந்து அப்பாணர் பாடும்போது பொற்பலகை அருளி அமரச் செய்தார். தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு மங்கலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர். திருத்தொண்டர்க்கு அண்மையாய் விளங்குபவர். எலும்புமாலை அணிந்துள்ளவர். மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டவர். அப்பெருமான் திருஆலவாயில் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார். 

4041 வெய்யவன்பல் லுகுத்தது குட்டியேவெங்கண்மாசுணங் கையது குட்டியேஐயனேயன லாடிய மெய்யனேயன்பினால்நினை வார்க்கருண் மெய்யனேவையமுய்யவன் றுண்டது காளமேவள்ளல்கையது மேவுகங் காளமேஐயமேற்ப துரைப்பது வீணையேயாலவாயரன் கையது வீணையே3.115.7
சிவபெருமான் சூரியனுடைய பல்லை உதிர்த்து கையால் குட்டி. அவர் கையிலிருப்பது கொடிய கண்களையுடைய பாம்புக்குட்டி. அவரே தலைவர். அனலில் ஆடும் திருமேனியுடையவர். அன்பால் நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அருள் வழங்கும் மெய்யர். உலகமுய்ய அன்று அவர் உண்டது விடமே. வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலான அவர் கையில் விளங்குவது எலும்புக்கூடே. அவர் பிச்சை ஏற்பதாக உலகோர் உரைப்பது வீண் ஆகும். திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனார் கையிலுள்ளது வீணையே. 

4042 தோள்கள்பத்தொடு பத்து மயக்கியேதொக்கதேவர் செருக்கை மயக்கியேவாளரக்க னிலத்துக் களித்துமேவந்தமால்வரை கண்டு களித்துமேநீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனேநின்விரற்றலை யான்மத மத்தனேஆளுமாதி முறித்தது மெய்கொலோவாலவாயர னுய்த்தது மெய்கொலோ3.115.8
வாளைக் கையிலேந்திய இராவணன் தன் இருபது தோள்களின் வலிமையையும் சேர்த்துக் கொண்டு திக்குவிசயம் செய்து, தன்னை எதிர்க்க வந்த தேவர்களின் வலிமையை மயங்கச் செய்து, இப்பூவுலகில் களித்து நிற்க, தன் தேரைத் தடுத்த கயிலை மலையைக்கண்டு வெகுண்டு பாய்ந்து சென்று அதனைப் பெயர்த்து எடுத்து உன்மத்தன் ஆயினன். அந்நிலையில் இறைவர் தம் திருப்பாத விரலை ஊன்ற, இராவணனின் தலை நெரிய, அவன் செருக்கு அழிந்தவன் ஆயினான். உலகனைத்தும் ஆளுகின்ற முதல்வராகிய தாம் அவ்வரக்கனின் உடலை முறியச் செய்தது மெய்கொல்? திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனே! பின்னர் அவனது பாடலைக் கேட்டு அருள்செய்ததும் உண்மையான வரலாறு தானோ? 

4043 பங்கயத்துள நான்முகன் மாலொடேபாதநீண்முடி நேடிட மாலொடேதுங்கநற்றழ லின்னுரு வாயுமேதூயபாடல் பயின்றது வாயுமேசெங்கயற்கணி னாரிடு பிச்சையேசென்றுகொண்டுரை செய்வது பிச்சையேஅங்கியைத்திகழ் விப்ப திடக்கையேயாலவாயர னார திடக்கையே3.115.9
செந்தாமலை மலரில் வீற்றிருக்கும் பிரமன் திருமாலோடு இறைவனின் அடியையும், முடியையும் தேட, அவர்கள் மயங்க, உயர்ந்த நல்ல அக்கினி உருவாய் நின்றான். பின்னர்த் தங்கள் பிழைகளை மன்னித்து அருளுமாறு தூய பாடல்களைப் பாடின, அவர்கள் வாய். சிவந்த கயல்மீன்கள் போன்ற கண்களையுடைய முனிபத்தினிகள் இறைவருக்கு இட்டது பிச்சையே. அதனை ஏற்று அவர் உரைசெய்தது அவர்கட்குப் பித்து உண்டாகும் வண்ணமே. அவர் நெருப்பேந்தியுள்ளது இடத் திருக்கரத்திலே. திருஆலவாய் சிவபெருமான் திடமாக வீற்றிருந்தருளும் இடம் ஆகும். 

4044 தேரரோடம ணர்க்குநல் கானையேதேவர்நாடொறுஞ் சேர்வது கானையேகோரமட்டது புண்டரி கத்தையேகொண்டநீள்கழல் புண்டரி கத்தையேநேரிலூர்க ளழித்தது நாகமேநீள்சடைத்திகழ் கின்றது நாகமேஆரமாக வுகந்தது மென்பதேயாலவாயர னாரிட மென்பதே3.115.10
சிவபெருமான் தம்மைப் போற்றாத புத்தர்கட்கும், சமணர்கட்கும் அருள்புரியாதவர். தேவர்கள் நாள்தோறும் சென்று வணங்குவது அவர் எழுந்தருளியிருக்கும் கடம்பவனத்தை. அவர் வெற்றிகொண்டு வீழ்த்தியது புலியையே. திருமால் இறைவனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரை மலர் போன்ற கண்ணையே. பகைமை கொண்ட மூன்று புரங்களை அழித்தது மேருமலை வில்லே. பெருமானின் நீண்ட சடைமுடியில் விளங்குவது நாகமே. இறைவன் மாலையாக விரும்பி அணிவது எலும்பே. அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருஆலவாய் என்பதே. 

4045 ஈனஞானிக டம்மொடு விரகனேயேறுபல்பொருண் முத்தமிழ் விரகனேஆனகாழியுண் ஞானசம்பந்தனேயாலவாயினின் மேயசம் பந்தனேஆனவானவர் வாயினு ளத்தனேயன்பரானவர் வாயினு ளத்தனேநானுரைத்தன செந்தமிழ் பத்துமேவல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே3.115.11
தேவர்களால் துதிக்கப்படும் தலைவரே. அடியவர்களின் இனிய உள்ளத்தில் இருப்பவரே! நல்லறிவு அற்றவர்கள்பால் பொருந்தாத கொள்கையுடையவரே. பல பொருள்களை அடக்கிய, முத்தமிழ் விரகரான சீகாழியுள் அவதரித்த ஞான சம்பந்தர், திருஆலவாய் இறைவரிடம் உரிமையுடையவராய் அவரைப் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் ஓதவல்லவர்கட்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.