LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-120

3.120.திருஆலவாய் 
பண் - புறநீர்மை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. 
தேவியார் - மீனாட்சியம்மை. 
4090 மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த
ஆலவா யாவது மிதுவே
3.120.1
மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி. கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர். தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசி. சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் தன்மையுடையவர். அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடைய தூய உருவினர். உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். அப்பெருமான் அங்கயற்கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும். 
4091 வெற்றவே யடியா ரடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய
குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ
னுலகினி லியற்கையை யொழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற
வாலவா யாவது மிதுவே
3.120.2
பற்றற்ற உள்ளத்தோடு, சிவனடியார்களைக் காணும்போது கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கும் பக்தியுடையவரும், திருவெண்ணீறு திருஞானசம்பந்தரால் பூசப்பெறும் புண்ணியப் பேறுடையவனாகிய பாண்டிய மன்னனுக்கு அமைச்சருமாகிய குலச்சிறை நாயனார் மகிழ்வோடு வணங்கித் துதிக்கும் சிவபெருமான் ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். தேவர்களின் தலைவர். உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும். 
4092 செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
சிவன்றிரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
பணிசெயப் பாரிட நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்
தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே
3.120.3
மங்கையர்க்கரசியார் சிவந்த பவளம் போன்ற வாயையுடையவர். சேல் மீன் போன்ற கண்களை உடையவர். சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர். விரல்நுனி பந்து போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு செய்ய, உலகில் சிறந்த நகராக விளங்குவதும், அழகிய முத்துக்கள், பாம்பு, கங்கை, ஊமத்தை, குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர், வன்னிமலர், மாலைநேரத்தில் தோன்றும் பிறைச்சந்திரன் இவற்றை சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும். 
4093 கணங்களாய் வரினுந் தமியராய் வரினு
மடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்
கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்
வன்னிவன் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே
3.120.4
சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும், தனியராக வந்தாலும், அவர்களைக் காணும்போது அவர்களின் குணச்சிறப்புக்களைக் கூறி, வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார் வழிபாடு செய்யும், கோபுரங்கள் சூழ்ந்த அழகிய கோயிலைக் கொண்டதும், மணம் கமழும் கொன்றை, பாம்பு, சந்திரன், வன்னி, வில்வம், கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும். 
4094 செய்யதா மரைமே லன்னமே அனைய
சேயிழை திருநுதற் செல்வி
பையரா வல்குற் பாண்டிமா தேவி
நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசமங் குசமான்
விரிகதிர் மழுவுடன் றரித்த
ஐயனா ருமையோ டின்புறு கின்ற
வாலவா யாவது மிதுவே
3.120.5
சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமி போன்று அழகுடையவரும், சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவரும், அழகிய நெற்றியையும், பாம்பின் படம் போன்ற அல்குலையும் உடையவருமான பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்ற, வேல், சூலம், பாசம், அங்குசம், மான், மழு ஆகியவற்றைத் தாங்கியுள்ள சிவபெருமான் உமாதேவியோடு இன்புற்று வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே. 
4095 நலமில ராக நலமதுண் டாக
நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத்
தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன்
கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே
3.120.6
நல்ல குணங்களை உடையவராயினும், அவை இல்லாதவராயினும், எந்த நாட்டவராயினும், நாடறிந்த உயர்குடியிற் பிறந்தவராயினும், பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர் குலச்சிறையார். அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற, மான் ஏந்திய கையினரும், மூவிலைச் சூலத்தவரும், வேலரும், யானைத் தோலைப் போர்த்த நீலகண்டரும், கங்கையைத் தாங்கிய சடை முடியை உடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே. 
4096 முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு
நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனா ருமையோ டின்புறு கின்ற
வாலவா யாவது மிதுவே
3.120.7
முத்துமாலையும், சந்தனக் குழம்பும், திருநீறும் தம் மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார் வழிபடுகின்ற, தூய பளிங்குமலை போன்ற சிவபெருமானும், சுடர்விடு மரகதக் கொடி போன்ற உமாதேவியும் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திரு ஆலவாய் இதுவே. 
4097 நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி
நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற்
றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ
ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே
3.120.8
நாவிற்கு அழகு செய்யும் இயல்பினதாகிய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராய், நல்லியல்புகளை அளிக்கும் கோவணம், விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவர் குலச்சிறை நாயனார். அவர் வழிபாடு செய்கின்ற, பகைவரது அம்புகள் பணிந்து அப்பாற் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவபக்தனாகும்படி செய்தருளிய சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே. 
4098 மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு
மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி
பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுலா ரிருவர் கீழொடு மேலு
மளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலா ருமையோ டின்புறு கின்ற
வாலவா யாவது மிதுவே
3.120.9
உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி நிகழ் மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார், மங்கையர்க்கரசியார். பண்ணிசை போன்ற மொழியுடையவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார். அத்தேவியார் அன்போடு வழிபாடு செய்து போற்றுகின்ற, விண்ணிலுள்ள திருமாலும், பிரமனும் கீழும் மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே. 
4099 தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்
தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோறு மின்புறு கின்ற
குலச்சிறை கருதி நின்றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்
குறியின்க ணெறியிடை வாரா
அண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த
வாலவா யாவது மிதுவே
3.120.10
சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும் சிவபெருமானைத் தொழுது, அவர் அருட்குணத்தைப் போற்றி, அருட்செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும் தன்மையுடையவர் குலச்சிறையார். அவர் பக்தியுடன் வழிபடுகின்ற, புத்த, சமணத்தைப் பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண் அடங்காத நெறியுடைய, இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தலம் இதுவேயாகும். 
4100 பன்னலம் புணரும் பாண்டிமாதேவி
குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீ ராலவா யீசன்
றிருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுண் ஞான
சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவ ரிமையோ
ரேத்தவீற் றிருப்பவ ரினிதே
3.120.11
பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையார் என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர் பணிகளையும் ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன் திருவடிகளைப் போற்றி, கருப்பங் கழனிகளையுடைய சீகாழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப்பதிகத்தை இன்னிசையோடு ஓதவல்லவர்கள் தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர். 
திருச்சிற்றம்பலம்

3.120.திருஆலவாய் 
பண் - புறநீர்மை 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை. 
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி. தேவியார் - மீனாட்சியம்மை. 

4090 மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவைவரிவளைக் கைம்மட மானிபங்கயச் செல்வி பாண்டிமா தேவிபணிசெய்து நாடொறும் பரவப்பொங்கழ லுருவன் பூதநா யகன்நால்வேதமும் பொருள்களும் அருளிஅங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்தஆலவா யாவது மிதுவே3.120.1
மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி. கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர். தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசி. சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் தன்மையுடையவர். அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடைய தூய உருவினர். உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். அப்பெருமான் அங்கயற்கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும். 

4091 வெற்றவே யடியா ரடிமிசை வீழும்விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் றனக்கு மந்திரி யாயகுலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவனுலகினி லியற்கையை யொழித்திட்டற்றவர்க் கற்ற சிவனுறை கின்றவாலவா யாவது மிதுவே3.120.2
பற்றற்ற உள்ளத்தோடு, சிவனடியார்களைக் காணும்போது கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கும் பக்தியுடையவரும், திருவெண்ணீறு திருஞானசம்பந்தரால் பூசப்பெறும் புண்ணியப் பேறுடையவனாகிய பாண்டிய மன்னனுக்கு அமைச்சருமாகிய குலச்சிறை நாயனார் மகிழ்வோடு வணங்கித் துதிக்கும் சிவபெருமான் ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். தேவர்களின் தலைவர். உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும். 

4092 செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்சிவன்றிரு நீற்றினை வளர்க்கும்பந்தணை விரலாள் பாண்டிமா தேவிபணிசெயப் பாரிட நிலவும்சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்தண்ணெருக் கம்மலர் வன்னிஅந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணலாலவா யாவது மிதுவே3.120.3
மங்கையர்க்கரசியார் சிவந்த பவளம் போன்ற வாயையுடையவர். சேல் மீன் போன்ற கண்களை உடையவர். சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர். விரல்நுனி பந்து போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு செய்ய, உலகில் சிறந்த நகராக விளங்குவதும், அழகிய முத்துக்கள், பாம்பு, கங்கை, ஊமத்தை, குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர், வன்னிமலர், மாலைநேரத்தில் தோன்றும் பிறைச்சந்திரன் இவற்றை சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும். 

4093 கணங்களாய் வரினுந் தமியராய் வரினுமடியவர் தங்களைக் கண்டால்குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்கோபுரஞ் சூழ்மணிக் கோயில்மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்வன்னிவன் கூவிள மாலைஅணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணலாலவா யாவது மிதுவே3.120.4
சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும், தனியராக வந்தாலும், அவர்களைக் காணும்போது அவர்களின் குணச்சிறப்புக்களைக் கூறி, வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார் வழிபாடு செய்யும், கோபுரங்கள் சூழ்ந்த அழகிய கோயிலைக் கொண்டதும், மணம் கமழும் கொன்றை, பாம்பு, சந்திரன், வன்னி, வில்வம், கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும். 

4094 செய்யதா மரைமே லன்னமே அனையசேயிழை திருநுதற் செல்விபையரா வல்குற் பாண்டிமா தேவிநாடொறும் பணிந்தினி தேத்தவெய்யவேற் சூலம் பாசமங் குசமான்விரிகதிர் மழுவுடன் றரித்தஐயனா ருமையோ டின்புறு கின்றவாலவா யாவது மிதுவே3.120.5
சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமி போன்று அழகுடையவரும், சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவரும், அழகிய நெற்றியையும், பாம்பின் படம் போன்ற அல்குலையும் உடையவருமான பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்ற, வேல், சூலம், பாசம், அங்குசம், மான், மழு ஆகியவற்றைத் தாங்கியுள்ள சிவபெருமான் உமாதேவியோடு இன்புற்று வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே. 

4095 நலமில ராக நலமதுண் டாகநாடவர் நாடறி கின்றகுலமில ராகக் குலமதுண் டாகத்தவம்பணி குலச்சிறை பரவும்கலைமலி கரத்தன் மூவிலை வேலன்கரியுரி மூடிய கண்டன்அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணலாலவா யாவது மிதுவே3.120.6
நல்ல குணங்களை உடையவராயினும், அவை இல்லாதவராயினும், எந்த நாட்டவராயினும், நாடறிந்த உயர்குடியிற் பிறந்தவராயினும், பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர் குலச்சிறையார். அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற, மான் ஏந்திய கையினரும், மூவிலைச் சூலத்தவரும், வேலரும், யானைத் தோலைப் போர்த்த நீலகண்டரும், கங்கையைத் தாங்கிய சடை முடியை உடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே. 

4096 முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்புநீறுந்தன் மார்பினின் முயங்கப்பத்தியார் கின்ற பாண்டிமா தேவிபாங்கொடு பணிசெய நின்றசுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனேசுடர்மர கதமடுத் தாற்போல்அத்தனா ருமையோ டின்புறு கின்றவாலவா யாவது மிதுவே3.120.7
முத்துமாலையும், சந்தனக் குழம்பும், திருநீறும் தம் மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார் வழிபடுகின்ற, தூய பளிங்குமலை போன்ற சிவபெருமானும், சுடர்விடு மரகதக் கொடி போன்ற உமாதேவியும் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திரு ஆலவாய் இதுவே. 

4097 நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதிநல்லராய் நல்லியல் பாகும்கோவணம் பூதி சாதனங் கண்டாற்றொழுதெழு குலச்சிறை போற்றஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோளிருபது நெரிதர வூன்றிஆவணங் கொண்ட சடைமுடி யண்ணலாலவா யாவது மிதுவே3.120.8
நாவிற்கு அழகு செய்யும் இயல்பினதாகிய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராய், நல்லியல்புகளை அளிக்கும் கோவணம், விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவர் குலச்சிறை நாயனார். அவர் வழிபாடு செய்கின்ற, பகைவரது அம்புகள் பணிந்து அப்பாற் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவபக்தனாகும்படி செய்தருளிய சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே. 

4098 மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னுமணிமுடிச் சோழன்றன் மகளாம்பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவிபாங்கினாற் பணிசெய்து பரவவிண்ணுலா ரிருவர் கீழொடு மேலுமளப்பரி தாம்வகை நின்றஅண்ணலா ருமையோ டின்புறு கின்றவாலவா யாவது மிதுவே3.120.9
உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி நிகழ் மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார், மங்கையர்க்கரசியார். பண்ணிசை போன்ற மொழியுடையவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார். அத்தேவியார் அன்போடு வழிபாடு செய்து போற்றுகின்ற, விண்ணிலுள்ள திருமாலும், பிரமனும் கீழும் மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே. 

4099 தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்தொழுதுதன் குணத்தினைக் குலாவக்கண்டுநா டோறு மின்புறு கின்றகுலச்சிறை கருதி நின்றேத்தக்குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்குறியின்க ணெறியிடை வாராஅண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்தவாலவா யாவது மிதுவே3.120.10
சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும் சிவபெருமானைத் தொழுது, அவர் அருட்குணத்தைப் போற்றி, அருட்செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும் தன்மையுடையவர் குலச்சிறையார். அவர் பக்தியுடன் வழிபடுகின்ற, புத்த, சமணத்தைப் பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண் அடங்காத நெறியுடைய, இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தலம் இதுவேயாகும். 

4100 பன்னலம் புணரும் பாண்டிமாதேவிகுலச்சிறை யெனுமிவர் பணியும்அந்நலம் பெறுசீ ராலவா யீசன்றிருவடி யாங்கவை போற்றிக்கன்னலம் பெரிய காழியுண் ஞானசம்பந்தன் செந்தமி ழிவைகொண்டின்னலம் பாட வல்லவ ரிமையோரேத்தவீற் றிருப்பவ ரினிதே3.120.11
பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையார் என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர் பணிகளையும் ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன் திருவடிகளைப் போற்றி, கருப்பங் கழனிகளையுடைய சீகாழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப்பதிகத்தை இன்னிசையோடு ஓதவல்லவர்கள் தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.