LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-65

3.065.திருக்கச்சிநெறிக்காரைக்காடு 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காரைத்திருநாதஈசுவரர். 
தேவியார் - காரார்குழலியம்மை. 
3492 வாரணவு முலைமங்கை பங்கினரா
யங்கையினில்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண்
பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற
கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்
காட்டாரே
3.065.1
சிவபெருமான் கச்சு அணிந்த மெல்லிய முலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். அழகிய கையில் போருக்குரிய மழுவை ஏந்தியவன். திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன். மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளையும், பிரளயகாலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுமுடைய காஞ்சியில், நீர் நிரம்பிய மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றான். 
3493 காரூரு மணிமிடற்றார் கரிகாட
ருடைதலைகொண்
ஊரூரன் பலிக்குழல்வா ருழைமானி
னுரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி
மாநகர்வாய்
நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்
காட்டாரே
3.065.2
சிவபெருமான் கார்மேகம் போன்ற நீலநிறமுடைய கண்டத்தார். கொள்ளிகள் கரிந்த சுடு காட்டிலிருப்பவர், பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சை எடுத்துத் திரிவார். மான்தோலை ஆடையாக உடுத்தவர். அப்பெருமான் தேரோடும் நீண்ட வீதிகளையுடைய செழிப்புடைய திருக்கச்சிமாநகரில் நீர் நிறைந்த, மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக் காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 
3494 கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே 
லிளமதியோ
டாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தா
ரான்வெள்ளை 
ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார் 
வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே 3.065.3
ஒலிநிறைந்த திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கொடிபோன்ற இடையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர். குளிர்ந்த சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு, கங்கை, பாம்பு இவற்றை அணிந்து மகிழ்ந்தவர். வெற்றிக் கொடியில் வெண்ணிற இடபத்தைக் கொண்டுள்ளார். மலைபோன்ற மார்பில் எலும்பு மாலையை அணிந்துள்ளார். திருநீற்றையும் அணிந்துள்ளார். 
3495 பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப்
பூதங்கள்
மறைநவின்ற பாடலோ டாடலராய்
மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த்
தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே
3.065.4
பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம் தொங்க, பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப் பாடலும், ஆடலும் கொண்டு மழுப்படை ஏந்திச் சிவபெருமான் விளங்குகின்றார். அப்பெருமான் சிறகுகளையுடைய வண்டுகள் இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி உண்ட மகிழ்ச்சியில் இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந் தருளுகின்றார். 
3496 அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த
வருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ
நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில்
வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் 
காட்டாரே
3.065.5
சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர், குன்றாத வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு, கொல்லும் தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி, பகையசுரர்களின் முப்புரங்களை மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர். அப்பெருமான் ஒலிமிகுந்த திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 
3497 பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் 
பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்று
மொருநொடியில்
வின்மலையி னாண்கொளுவி வெங்கணையா
லெய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே
3.065.6
தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின் திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க, நன்மைபுரியாது தீமை செய்த வலிய அசுரர்களின் மூன்று நகரங்களையும், ஒரு நொடியில், மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து அழித்த, இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 
3498 புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை
மதமத்தம்
எற்றொழியா வலைபுனலோ டிளமதிய
மேந்துசடைப்
பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார்
கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே
3.065.7
சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும், கொன்றை மலரையும், ஊமத்தை மலரையும் அணிந்து, ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு, பிறைச்சந்திரனையும் தாங்கிய சடையையுடையவர். தம் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டவர். நெற்றிக்கண்ணையுடையவர். அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 
3499 ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
யெழில்வரைவாய்த்
தாழ்விரலா லூன்றியதோர் தன்மையினார்
நன்மையினார்
ஆழ்கிடங்குங் சூழ்வயலு மதில்புல்கி
யழகமரும்
நீண்டமறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே
3.065.8
ஏழுகடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனை அழகிய கயிலையின் கீழ் நொறுங்கும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி வலியழித்த தன்மையுடையவர் சிவபெருமான். அவர் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்வார். அப்பெருமான் ஆழ்ந்த அகழியும், சுற்றிய வயல்களும், மதில்களும் நிறைந்த அழகுடன் திகழும், நீண்ட வீதிகளையுடைய ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 
3500 ஊண்டானு மொலிகடனஞ் சுடைதலையிற்
பலிகொள்வர்
மாண்டார்தம் மெலும்பணிவர் வரியரவோ
டெழிலாமை
பூண்டாரு மோரிருவ ரறியாமைப்
பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே
3.065.9
சிவபெருமானின் உணவு ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சு. உடைந்த தலையாகிய பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவார். இறந்த தேவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர். வரிகளையுடைய பாம்போடு, அழகிய ஆமையோட்டையும் அணிந்தவர். திருமால், பிரமன் இருவரும் அறியா வண்ணம் ஓங்கிய நெருப்புப் பிழம்பாய் நின்றவர். அப் பெருமான் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 
3501 குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை
மெய்போர்த்து 
மிண்டாடித் திரிதருவா ருரைப்பனகண்
மெய்யல்ல
வண்டாருங் குழலாளை வரையாகத்
தொருபாகம்
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே
3.065.10
விதண்டாவாதம் பேசி நல்லூழ் இல்லாமையால் சமண சமயம் சார்ந்தோரும், மஞ்சள் காவியாடையை உடம்பில் போர்த்திய வலிய உரைகளைப் பேசித் திரியும் புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள். ஆதலால் அவர்கள் பேசுவதை விடுத்து, வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் மலை போன்ற திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு கண்டவர்கள் மகிழும்படி ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்குங்கள். 
3502 கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான
தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான
சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத்
திருப்பாரே
3.065.11
கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும், தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தி, குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக பதவியை அடைவர். 
திருச்சிற்றம்பலம்

3.065.திருக்கச்சிநெறிக்காரைக்காடு 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காரைத்திருநாதஈசுவரர். தேவியார் - காரார்குழலியம்மை. 

3492 வாரணவு முலைமங்கை பங்கினராயங்கையினில்போரணவு மழுவொன்றங் கேந்திவெண்பொடியணிவர்காரணவு மணிமாடங் கடைநவின்றகலிக்கச்சிநீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே3.065.1
சிவபெருமான் கச்சு அணிந்த மெல்லிய முலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். அழகிய கையில் போருக்குரிய மழுவை ஏந்தியவன். திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன். மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளையும், பிரளயகாலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுமுடைய காஞ்சியில், நீர் நிரம்பிய மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றான். 

3493 காரூரு மணிமிடற்றார் கரிகாடருடைதலைகொண்ஊரூரன் பலிக்குழல்வா ருழைமானினுரியதளர்தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சிமாநகர்வாய்நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே3.065.2
சிவபெருமான் கார்மேகம் போன்ற நீலநிறமுடைய கண்டத்தார். கொள்ளிகள் கரிந்த சுடு காட்டிலிருப்பவர், பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சை எடுத்துத் திரிவார். மான்தோலை ஆடையாக உடுத்தவர். அப்பெருமான் தேரோடும் நீண்ட வீதிகளையுடைய செழிப்புடைய திருக்கச்சிமாநகரில் நீர் நிறைந்த, மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக் காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 

3494 கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே லிளமதியோடாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தாரான்வெள்ளை ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார் வரைமார்பில்நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டாரே 3.065.3
ஒலிநிறைந்த திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கொடிபோன்ற இடையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர். குளிர்ந்த சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு, கங்கை, பாம்பு இவற்றை அணிந்து மகிழ்ந்தவர். வெற்றிக் கொடியில் வெண்ணிற இடபத்தைக் கொண்டுள்ளார். மலைபோன்ற மார்பில் எலும்பு மாலையை அணிந்துள்ளார். திருநீற்றையும் அணிந்துள்ளார். 

3495 பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப்பூதங்கள்மறைநவின்ற பாடலோ டாடலராய்மழுவேந்திச்சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த்தேன்கதுவும்நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டாரே3.065.4
பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம் தொங்க, பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப் பாடலும், ஆடலும் கொண்டு மழுப்படை ஏந்திச் சிவபெருமான் விளங்குகின்றார். அப்பெருமான் சிறகுகளையுடைய வண்டுகள் இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி உண்ட மகிழ்ச்சியில் இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந் தருளுகின்றார். 

3496 அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்தவருளாளர்குன்றாத வெஞ்சிலையிற் கோளரவநாண்கொளுவிஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில்வெந்தவியநின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே3.065.5
சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர், குன்றாத வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு, கொல்லும் தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி, பகையசுரர்களின் முப்புரங்களை மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர். அப்பெருமான் ஒலிமிகுந்த திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 

3497 பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்சநன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றுமொருநொடியில்வின்மலையி னாண்கொளுவி வெங்கணையாலெய்தழித்தநின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டாரே3.065.6
தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின் திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க, நன்மைபுரியாது தீமை செய்த வலிய அசுரர்களின் மூன்று நகரங்களையும், ஒரு நொடியில், மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து அழித்த, இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 

3498 புற்றிடை வாளரவினொடு புனைகொன்றைமதமத்தம்எற்றொழியா வலைபுனலோ டிளமதியமேந்துசடைப்பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார்கண்ணமரும்நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டாரே3.065.7
சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும், கொன்றை மலரையும், ஊமத்தை மலரையும் அணிந்து, ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு, பிறைச்சந்திரனையும் தாங்கிய சடையையுடையவர். தம் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டவர். நெற்றிக்கண்ணையுடையவர். அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 

3499 ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானையெழில்வரைவாய்த்தாழ்விரலா லூன்றியதோர் தன்மையினார்நன்மையினார்ஆழ்கிடங்குங் சூழ்வயலு மதில்புல்கியழகமரும்நீண்டமறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டாரே3.065.8
ஏழுகடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனை அழகிய கயிலையின் கீழ் நொறுங்கும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி வலியழித்த தன்மையுடையவர் சிவபெருமான். அவர் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்வார். அப்பெருமான் ஆழ்ந்த அகழியும், சுற்றிய வயல்களும், மதில்களும் நிறைந்த அழகுடன் திகழும், நீண்ட வீதிகளையுடைய ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 

3500 ஊண்டானு மொலிகடனஞ் சுடைதலையிற்பலிகொள்வர்மாண்டார்தம் மெலும்பணிவர் வரியரவோடெழிலாமைபூண்டாரு மோரிருவ ரறியாமைப்பொங்கெரியாய்நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டாரே3.065.9
சிவபெருமானின் உணவு ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சு. உடைந்த தலையாகிய பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவார். இறந்த தேவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர். வரிகளையுடைய பாம்போடு, அழகிய ஆமையோட்டையும் அணிந்தவர். திருமால், பிரமன் இருவரும் அறியா வண்ணம் ஓங்கிய நெருப்புப் பிழம்பாய் நின்றவர். அப் பெருமான் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார். 

3501 குண்டாடிச் சமண்படுவார் கூறைதனைமெய்போர்த்து மிண்டாடித் திரிதருவா ருரைப்பனகண்மெய்யல்லவண்டாருங் குழலாளை வரையாகத்தொருபாகம்கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டாரே3.065.10
விதண்டாவாதம் பேசி நல்லூழ் இல்லாமையால் சமண சமயம் சார்ந்தோரும், மஞ்சள் காவியாடையை உடம்பில் போர்த்திய வலிய உரைகளைப் பேசித் திரியும் புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள். ஆதலால் அவர்கள் பேசுவதை விடுத்து, வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் மலை போன்ற திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு கண்டவர்கள் மகிழும்படி ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்குங்கள். 

3502 கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டுறையும்பெண்ணாருந் திருமேனிப் பெருமானதடிவாழ்த்தித்தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞானசம்பந்தன்பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத்திருப்பாரே3.065.11
கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும், தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தி, குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக பதவியை அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.