LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-69

3.069.திருக்காளத்தி 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காளத்திநாதர். 
தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை. 
3537 வானவர்கள் தானவர்கள் வாதைபட
வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
மேவுமலை தன்னைவினவில்
ஏனமிள மானினொடு கிள்ளைதினை
கொள்ளவெழி லார்கவணினால்
கானவர்த மாமகளிர் கனகமணி
விலகுகா ளத்திமலையே
3.069.1
தேவர்களும், அசுரர்களும் வருந்தித் துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விடத்தை, தான் அமுது போன்று உண்டு அருள் செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால், பன்றிகள், இளமான்கள், கிளிகள் இவை தினைகளைக்கவர வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும், இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய திருக்காளத்திமலையாகும். 
3538 முதுசினவி லவுணர்புர மூன்றுமொரு
நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்
விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய வெழுபொறிகள்
சிதறவெழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிக ளிருளகல
நிலவுகா ளத்திமலையே
3.069.2
மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான். அவர் சந்திரனைத் தரித்த சடையையுடையவர். எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்பவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை, எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப் பொறிகளாலும், பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி மலையாகும். 
3539 வல்லைவரு காளியைவ குத்துவலி
யாகிமிகு தாரகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன்
மேவுமலை கூறிவினவில்
பல்பலவி ருங்கனி பருங்கிமிக
வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை
யாடுகா ளத்திமலையே
3.069.3
தாரகன் இழைத்த துன்பம் கண்டு, விரைந்து நீக்கவரும் காளியை நோக்கி, “வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ கொல்வாயாக” என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் மலை, பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை அருந்தி, ஒரே கூட்டமாய் மொய்த்து, மலை அதிரும்படி கருங்குரங்குகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும். 
3540 வேயனைய தோளுமையொர் பாகமது
வாகவிடை யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடினட
மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெய்யும்
வேடன்மல ராகுநயனம்
காய்கணை யினாலிடந் தீசனடி
கூடுகா ளத்திமலையே
3.069.4
மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தில் ஏறி, சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி,சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர், தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி, இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும். 
3541 மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொரு
மதகரியை மழைபொலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன்
மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புன லருவிபல சுனைகள்வழி
யிழியவய னிலவுமுதுவேய் 
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை
சிந்துகா ளத்திமலையே
3.069.5
மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற, அதனைக் கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து, பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய, அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன், கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும். 
3542 பாரகம் விளங்கிய பகீரத
னருந்தவ முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை
யேற்றவரன் மலையைவினவில்
வாரத ரிருங்குறவர் சேவலின் 
மடுத்தவ ரெரித்தவிறகில்
காரகி லிரும்புகை விசும்புகமழ்
கின்றகா ளத்திமலையே
3.069.6
பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் மன்னன், பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர, அவனுக்கு அருள்செய்து, பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நெடிய வழிகளையுடைய கானக் குறவர்கள் தங்கள் குடிசையில் அடுப் பெரித்த, கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும். 
3543 ஆருமெதி ராதவலி யாகிய
சலந்தரனை யாழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவ
னிருந்தமலை தன்னைவினவில்
ஊருமர வம்மொளிகொண் மாமணி
யுமிழ்ந்தவை யுலாவிவரலால்
காரிருள் கடிந்துகன கம்மென
விளங்குகா ளத்திமலையே
3.069.7
தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும் வாராத, வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்து சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று, பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும். 
3544 எரியனைய சுரிமயி ரிராவணனை
யீடழிய எழில்கொள்விரலால்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
மேவுமலை பெற்றிவினவில் 
வரியசிலை வேடுவர்க ளாடவர்க
ணீடுவரை யூடுவரலால்
கரியினொடு வரியுழுவை யரியினமும்
வெருவுகா ளத்திமலையே
3.069.8
நெருப்புப்போல் சிவந்த சுருண்ட முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு, தன் அழிகிய காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி, பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால், யானைகளும், வரிகளையுடைய புலிகளும், சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும். 
3545 இனதளவி லிவனதடி யிணையுமுடி
யறிதுமென விகலுமிருவர்
தனதுருவ மறிவரிய சகலசிவன்
மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு
மைந்தரு மணம்புணருநாள்
கனகமென மலர்களணி வேங்கைக
ணிலாவுகா ளத்திமலையே
3.069.9
குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள்
3546 நின்றுகவ ளம்பலகொள் கையரொடு
மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன்
மேவுமலை நாடிவினவில்
குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர்
சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
யாடுகா ளத்திமலையே
3.069.10
 நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும் சமணர்களும், உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும். 
3547 காடதிட மாகநட மாடுசிவன் 
மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைக ணீடுவளர்
கொச்சைவய மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம் 
பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்க
ணல்லர்பர லோகமௌதே
3.069.11
சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி, மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்தள்ள கொச்சைவயம் என்னும் சீகாழியின் நிலைபெற்ற தலைவனும், பலநாடுகளிலும் பரவிய புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர். அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும். 
திருச்சிற்றம்பலம்

3.069.திருக்காளத்தி 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காளத்திநாதர். தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை. 

3537 வானவர்கள் தானவர்கள் வாதைபடவந்ததொரு மாகடல்விடம்தானமுது செய்தருள் புரிந்தசிவன்மேவுமலை தன்னைவினவில்ஏனமிள மானினொடு கிள்ளைதினைகொள்ளவெழி லார்கவணினால்கானவர்த மாமகளிர் கனகமணிவிலகுகா ளத்திமலையே3.069.1
தேவர்களும், அசுரர்களும் வருந்தித் துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விடத்தை, தான் அமுது போன்று உண்டு அருள் செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால், பன்றிகள், இளமான்கள், கிளிகள் இவை தினைகளைக்கவர வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும், இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய திருக்காளத்திமலையாகும். 

3538 முதுசினவி லவுணர்புர மூன்றுமொருநொடிவரையின் மூளவெரிசெய்சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்விரும்புமலை தன்னைவினவில்எதிரெதிர வெதிர்பிணைய வெழுபொறிகள்சிதறவெழி லேனமுழுதகதிர்மணியின் வளரொளிக ளிருளகலநிலவுகா ளத்திமலையே3.069.2
மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான். அவர் சந்திரனைத் தரித்த சடையையுடையவர். எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்பவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை, எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப் பொறிகளாலும், பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி மலையாகும். 

3539 வல்லைவரு காளியைவ குத்துவலியாகிமிகு தாரகனைநீகொல்லென விடுத்தருள் புரிந்தசிவன்மேவுமலை கூறிவினவில்பல்பலவி ருங்கனி பருங்கிமிகவுண்டவை நெருங்கியினமாய்க்கல்லதிர நின்றுகரு மந்திவிளையாடுகா ளத்திமலையே3.069.3
தாரகன் இழைத்த துன்பம் கண்டு, விரைந்து நீக்கவரும் காளியை நோக்கி, “வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ கொல்வாயாக” என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் மலை, பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை அருந்தி, ஒரே கூட்டமாய் மொய்த்து, மலை அதிரும்படி கருங்குரங்குகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும். 

3540 வேயனைய தோளுமையொர் பாகமதுவாகவிடை யேறிசடைமேல்தூயமதி சூடிசுடு காடினடமாடிமலை தன்னைவினவில்வாய்கலச மாகவழி பாடுசெய்யும்வேடன்மல ராகுநயனம்காய்கணை யினாலிடந் தீசனடிகூடுகா ளத்திமலையே3.069.4
மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தில் ஏறி, சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி,சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர், தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி, இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும். 

3541 மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொருமதகரியை மழைபொலலறக்கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன்மேவுமலை கூறிவினவில்அலைகொள்புன லருவிபல சுனைகள்வழியிழியவய னிலவுமுதுவேய் கலகலென வொளிகொள்கதிர் முத்தமவைசிந்துகா ளத்திமலையே3.069.5
மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற, அதனைக் கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து, பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய, அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன், கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும். 

3542 பாரகம் விளங்கிய பகீரதனருந்தவ முயன்றபணிகண்டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடையேற்றவரன் மலையைவினவில்வாரத ரிருங்குறவர் சேவலின் மடுத்தவ ரெரித்தவிறகில்காரகி லிரும்புகை விசும்புகமழ்கின்றகா ளத்திமலையே3.069.6
பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் மன்னன், பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர, அவனுக்கு அருள்செய்து, பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நெடிய வழிகளையுடைய கானக் குறவர்கள் தங்கள் குடிசையில் அடுப் பெரித்த, கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும். 

3543 ஆருமெதி ராதவலி யாகியசலந்தரனை யாழியதனால்ஈரும்வகை செய்தருள் புரிந்தவனிருந்தமலை தன்னைவினவில்ஊருமர வம்மொளிகொண் மாமணியுமிழ்ந்தவை யுலாவிவரலால்காரிருள் கடிந்துகன கம்மெனவிளங்குகா ளத்திமலையே3.069.7
தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும் வாராத, வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்து சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று, பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும். 

3544 எரியனைய சுரிமயி ரிராவணனையீடழிய எழில்கொள்விரலால்பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்மேவுமலை பெற்றிவினவில் வரியசிலை வேடுவர்க ளாடவர்கணீடுவரை யூடுவரலால்கரியினொடு வரியுழுவை யரியினமும்வெருவுகா ளத்திமலையே3.069.8
நெருப்புப்போல் சிவந்த சுருண்ட முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு, தன் அழிகிய காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி, பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால், யானைகளும், வரிகளையுடைய புலிகளும், சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும். 

3545 இனதளவி லிவனதடி யிணையுமுடியறிதுமென விகலுமிருவர்தனதுருவ மறிவரிய சகலசிவன்மேவுமலை தன்னை வினவில்புனவர்புன மயிலனைய மாதரொடுமைந்தரு மணம்புணருநாள்கனகமென மலர்களணி வேங்கைகணிலாவுகா ளத்திமலையே3.069.9
குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள்

3546 நின்றுகவ ளம்பலகொள் கையரொடுமெய்யிலிடு போர்வையவரும்நன்றியறி யாதவகை நின்றசிவன்மேவுமலை நாடிவினவில்குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர்சந்தின்முறி தின்றுகுலவிக்கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளையாடுகா ளத்திமலையே3.069.10
 நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும் சமணர்களும், உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும். 

3547 காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையைமாடமொடு மாளிகைக ணீடுவளர்கொச்சைவய மன்னுதலைவன்நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்பாடலொடு பாடுமிசை வல்லவர்கணல்லர்பர லோகமௌதே3.069.11
சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி, மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்தள்ள கொச்சைவயம் என்னும் சீகாழியின் நிலைபெற்ற தலைவனும், பலநாடுகளிலும் பரவிய புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர். அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.