LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-72

3.072.திருமாகறல் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர். 
தேவியார் - புவனநாயகியம்மை. 
3570 விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி
நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே
3.072.1
 நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க, மேகத்தைத்தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும். 
3571 கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
யாடல்கவி னெய்தியழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள்
வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல
னேந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
யேத்தவினை யகலுமிகவே
3.072.2
வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும், பெண்களின் பாடல், ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர, அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசை செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். இலைபோன்ற அமைப்புடைய வேலையும், கூர்மையான நுனியுடைய சூலத்தையும், வலக்கையிலே ஏந்தி, நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும். 
3572 காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்க
ளேத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
யேத்தவினை பறையுமுடனே
3.072.3
துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து, அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி, அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான். அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க, உடனே வினையாவும் நீங்கும். 
3573 இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக
ளுந்தியெழின் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னுபுன
லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக வேத்திவழி
பாடுநுகரா வெழுமினே
3.072.4
ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக. 
3574 துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி
தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கண்ட
மாடமலி மாகறலுளான்.
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
வானொர்மழு வாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி 
யாரைநலி யாவினைகளே
3.072.5
நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து, இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன. நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன. அருகிலுள்ள, மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன. இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் வஞ்ச முடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான். ஒப்பற்ற மழுப்படையை உடையவன். நஞ்சை யுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன். அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா. 
3575 மன்னுமறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை
யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் 
கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர்
வானுலக மேறலௌதே
3.072.6
 என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும், பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும், கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான். அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க, உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர். 
3576 வெய்யவினை நெறிகள்செல வந்தணையு
மேல்வினைகள் விட்டலுறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி
மாகறலு ளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடை
யாவினைக ளகலுமிகவே
3.072.7
கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும், இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன். யாவர்க்கும் தலைவனான அப்பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும். 
3577 தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு
தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க
ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை
நிற்றலில போகுமுடனே
3.072.8
பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப் பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத, பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன். திருவெண்ணீற்றைப் பூசியவன். அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும். 
3578 தூயவிரி தாமரைக ணெய்தல்கழு
நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு
மோசைபயின் மாறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன
தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை
யாயினவு மகல்வதௌதே
3.072.9
தூய்மையான தாமரை, நெய்தல், கழுநீர், குவளை போன்ற மலர்கள் விரிய, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன். அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும். 
3579 காலினல பைங்கழல்க ணீண்முடியின்
மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி
யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
யாரையடை யாவினைகளே
3.072.10
பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான். உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும், தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும், அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா. 
3580 கடைகொணெடு மாடமிக வோங்குகமழ்
வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி
கூடுசம் பந்துனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின்
மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
தொல்வினைக ளொல்குமுடனே
3.072.11
வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும், நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும், நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும். 
திருச்சிற்றம்பலம்

3.072.திருமாகறல் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர். தேவியார் - புவனநாயகியம்மை. 

3570 விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்பாடல்விளை யாடலரவம்மங்குலொடு நீள்கொடிகண் மாடமலிநீடுபொழின் மாகறலுளான்கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்திங்களணி செஞ்சடையினான்செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்தீவினைகள் தீருமுடனே3.072.1
 நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க, மேகத்தைத்தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும். 

3571 கலையினொலி மங்கையர்கள் பாடலொலியாடல்கவி னெய்தியழகார்மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள்வீசுமலி மாகறலுளான்இலையின்மலி வேல்நுனைய சூலம்வலனேந்தியெரி புன்சடையினுள்அலைகொள்புன லேந்துபெரு மானடியையேத்தவினை யகலுமிகவே3.072.2
வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும், பெண்களின் பாடல், ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர, அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசை செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். இலைபோன்ற அமைப்புடைய வேலையும், கூர்மையான நுனியுடைய சூலத்தையும், வலக்கையிலே ஏந்தி, நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும். 

3572 காலையொடு துந்துபிகள் சங்குகுழல்யாழ்முழவு காமருவுசீர்மாலைவழி பாடுசெய்து மாதவர்களேத்திமகிழ் மாகறலுளான்தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்நாகமசை யாவழகிதாப்பாலையன நீறுபுனை வானடியையேத்தவினை பறையுமுடனே3.072.3
துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து, அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி, அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான். அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க, உடனே வினையாவும் நீங்கும். 

3573 இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகளுந்தியெழின் மெய்யுளுடனேமங்கையரு மைந்தர்களு மன்னுபுனலாடிமகிழ் மாகறலுளான்கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணிசெஞ்சடையி னானடியையேநுங்கள்வினை தீரமிக வேத்திவழிபாடுநுகரா வெழுமினே3.072.4
ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக. 

3574 துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளிதோன்றுமது வார்கழனிவாய்மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கண்டமாடமலி மாகறலுளான்.வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்வானொர்மழு வாளன் வளரும்நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே3.072.5
நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து, இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன. நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன. அருகிலுள்ள, மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன. இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் வஞ்ச முடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான். ஒப்பற்ற மழுப்படையை உடையவன். நஞ்சை யுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன். அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா. 

3575 மன்னுமறை யோர்களொடு பல்படிமமாதவர்கள் கூடியுடனாய்இன்னவகை யாலினிதி றைஞ்சியிமையோரிலெழு மாகறலுளான்மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவேஉன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர்வானுலக மேறலௌதே3.072.6
 என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும், பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும், கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான். அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க, உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர். 

3576 வெய்யவினை நெறிகள்செல வந்தணையுமேல்வினைகள் விட்டலுறுவீர்மைகொள்விரி கானன்மது வார்கழனிமாகறலு ளானெழிலதார்கையகரி கால்வரையின் மேலதுரிதோலுடைய மேனியழகார்ஐயனடி சேர்பவரை யஞ்சியடையாவினைக ளகலுமிகவே3.072.7
கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும், இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன். யாவர்க்கும் தலைவனான அப்பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும். 

3577 தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடுதோய்வனபொன் மாடமிசையேமாசுபடு செய்கைமிக மாதவர்களோதிமலி மாகறலுளான்பாசுபத விச்சைவரி நச்சரவுகச்சையுடை பேணியழகார்பூசுபொடி யீசனென வேத்தவினைநிற்றலில போகுமுடனே3.072.8
பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப் பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத, பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன். திருவெண்ணீற்றைப் பூசியவன். அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும். 

3578 தூயவிரி தாமரைக ணெய்தல்கழுநீர்குவளை தோன்றமதுவுண்பாயவரி வண்டுபல பண்முரலுமோசைபயின் மாறலுளான்சாயவிர லூன்றியவி ராவணனதன்மைகெட நின்றபெருமான்ஆயபுக ழேத்துமடி யார்கள்வினையாயினவு மகல்வதௌதே3.072.9
தூய்மையான தாமரை, நெய்தல், கழுநீர், குவளை போன்ற மலர்கள் விரிய, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன். அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும். 

3579 காலினல பைங்கழல்க ணீண்முடியின்மேலுணர்வு காமுறவினார்மாலுமல ரானுமறி யாமையெரியாகியுயர் மாகறலுளான்நாலுமெரி தோலுமுரி மாமணியநாகமொடு கூடியுடனாய்ஆலும்விடை யூர்தியுடை யடிகளடியாரையடை யாவினைகளே3.072.10
பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான். உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும், தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும், அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா. 

3580 கடைகொணெடு மாடமிக வோங்குகமழ்வீதிமலி காழியவர்கோன்அடையும்வகை யாற்பரவி யரனையடிகூடுசம் பந்துனுரையால்மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின்மாகறலுளா னடியையே உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்தொல்வினைக ளொல்குமுடனே3.072.11
வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும், நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும், நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.