LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-74

3.074.திருத்தேவூர் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தேவகுருநாதர். 
தேவியார் - தேன்மொழியம்மை. 
3592 காடுபயில் வீடுமுடை யோடுகலன்
மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு
வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி
கோடல்கைம் மறிப்பநலமார்
சேடுமிகு பேடையன மூடிமகிழ்
மாடமிடை தேவூரதுவே
3.074.1
சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும். முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும். அவனது ஆடை புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும் பிச்சையாகும். இத்தகைய கோலமுடைய, வேதத்தை அருளிச் செய்த வேதப்பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட, வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய இளம் பெண் அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு ஊடி, பின் ஊடல் நீங்கி மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த திருத்தேவூர் என்பதாகும். 
3593 கோளரவு கொன்றைநகு வெண்டலையெ
ருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு
செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள்
குங்குமம் விரைக்குமணமார்
தேளரவு தென்றறெரு வெங்குநிறை
வொன்றிவரு தேவூரதுவே
3.074.2
கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி பொருந்திய பாம்பு, குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை குலவுகின்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை உடைய, கணவரோடு கூடிய இள மங்கையர்கட்குக் குங்கும குழம்பின் மணத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து பெருகும் திருத்தேவூர் ஆகும். 
3594 பண்டடவு சொல்லின்மலை வல்லியுமை
பங்கனெமை யாளுமிறைவன்
எண்டடவு வானவரி றைஞ்சுகழ
லோனினிதி ருந்தவிடமாம்
விண்டடவு வார்பொழி லுகுத்தநற
வாடிமலர் சூடிவிரையார்
செண்டடவு மாளிகை செறிந்துதிரு
வொன்றிவளர் தேவூரதுவே
3.074.3
பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள் தன் திருவடிகளை வணங்க இனிது வீற்றிருந்தருளும் இடம், வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும் தேன்துளிக்கும் மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும் திருத்தேவூர் ஆகும். 
3595 மாசின்மன நேசர்தம தாசைவளர்
சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி யாடிமிகு
பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமு
மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது
வீதிநிறை தேவூரதுவே
3.074.4
சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய அடியார்கள் தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக விளங்குபவன். சூலப்படையை ஏந்தியவன். வானுலகிலுள்ள தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி வேதப்பொருளாயும் விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன். வெற்றிதரும் பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான் இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை மூக்கால் கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை போன்று பேசுகின்ற பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள் இறைவனைப் புகழும் ஒலியும் நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருத்தேவூர் ஆகும். 
3596 கானமுறு மான்மறிய னானையுரி
போர்வைகன லாடல்புரிவோன்
ஏனவெயி றாமையிள நாகம்வளர்
மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
மாதவி பலாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
பாடிவரு தேவூரதுவே
3.074.5
சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற மான்கன்றைக் கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை மார்பில் அணிந்தவன். தேவர்களின் தலைவன். அவன் உகந்தருளிய திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு, வரிகளையுடைய வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர் ஆகும். 
3597 ஆறினொடு கீறுமதி யேறுசடை
 யேறனடை யார்நகர்கடான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த
 நீறனமை யாளுமரனூர்
வீறுமல ரூறுமது வேறிவளர்
 வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பவிள
 வாளைவரு தேவூரதுவே
3.074.6
சிவபெருமான் சடையிலே கங்கையோடு, பிறைச்சந்திரனையு
3598 கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுர
மன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன
தந்தையம ரின்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிக
டின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி யொன்றவிளை
யாடிவளர் தேவூரதுவே
3.074.7
கோபித்து உலகையழிக்க எண்ணி வெற்றிபெற்ற பகையசுரர்களின் நெருங்கிய மூன்றுபுரங்களையும், சிவபெருமான் சிரித்துச் சாம்பலாகுமாறு செய்தவன். நான் சென்றடையக் கூடிய பற்றுக்கோடாக விளங்குபவன். என் தந்தைக்குத் தந்தையாகிய அச்சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இனிய தலமாவது, வீட்டின் முன்னால் நின்ற பலாக்கனிகளைத் தின்று கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி வளர்கின்ற திருத்தேவூர் ஆகும். 
3599 ஓதமலி கின்றதெனி லங்கையரை
யன்மலி புயங்கணெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில்
அடர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கணட
மாடலொடு பொங்குமுரவம்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி
லாளர்புரி தேவூரதுவே
3.074.8
கடல் அலைகள் மோதுகின்ற தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமை மிகுந்த புயங்கள் நெரிபடத் தன் காற்பெருவிரலை ஊன்றி அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, மகிழ்ச்சி மிகுந்த பெண்கள் நடனமாடவும், முழவு ஒலிக்கவும், சேற்றில் பயில்கின்ற கையினால் உழவுத் தொழில் செய்து வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் வேளாளர்கள் நிறைந்த திருத்தேவூர் ஆகும். 
3600 வண்ணமுகி லன்னவெழி லண்ணலொடு
சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள்
கண்ணவ னலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையி னெண்ணரிய
வன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தவிசை
யாழ்மருவு தேவூரதுவே
3.074.9
கருநிற மேகத்தையொத்த அழகிய திருமாலும், மகரந்தப்பொடி நிறைந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், அள
3601 பொச்சமமர் பிச்சைபயி லச்சமணு
மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு
நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
* * * * * * *
3.074.10
பொய்யான துறவு வேடம்கொண்டு பிச்சையெடுக்கும் சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும் விருப்ப மான உபதேச மொழிகளை விலக்கி, பித்தன் எனப்படுபவனும், விடமுடைய பாம்பை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானுடைய, மொய்த்த மெய்யடியார்கள் நெருங்கிய தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தேவூர் ஆகும். 
3602 துங்கமிகு பொங்கரவு தங்குசடை
நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு
பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி
ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை
வல்லவர்கள் சங்கையிலரே
3.074.11
நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச் சிவந்த சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான். அவர் அடர்ந்த கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுமுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். அவர் வீற்றிருந்தருளும் தலம் திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை மலர்கள் அழகு செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் பத்தையும் அடியார் கூட்டங்களில் ஓத வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

3.074.திருத்தேவூர் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தேவகுருநாதர். தேவியார் - தேன்மொழியம்மை. 

3592 காடுபயில் வீடுமுடை யோடுகலன்மூடுமுடை யாடைபுலிதோல்தேடுபலி யூணதுடை வேடமிகுவேதியர் திருந்துபதிதான்நாடகம தாடமஞ்ஞை பாடவரிகோடல்கைம் மறிப்பநலமார்சேடுமிகு பேடையன மூடிமகிழ்மாடமிடை தேவூரதுவே3.074.1
சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும். முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும். அவனது ஆடை புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும் பிச்சையாகும். இத்தகைய கோலமுடைய, வேதத்தை அருளிச் செய்த வேதப்பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட, வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய இளம் பெண் அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு ஊடி, பின் ஊடல் நீங்கி மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த திருத்தேவூர் என்பதாகும். 

3593 கோளரவு கொன்றைநகு வெண்டலையெருக்குவனி கொக்கிறகொடும்வாளரவு தண்சலம கட்குலவுசெஞ்சடைவ ரத்திறைவனூர்வேளரவு கொங்கையிள மங்கையர்கள்குங்குமம் விரைக்குமணமார்தேளரவு தென்றறெரு வெங்குநிறைவொன்றிவரு தேவூரதுவே3.074.2
கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி பொருந்திய பாம்பு, குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை குலவுகின்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை உடைய, கணவரோடு கூடிய இள மங்கையர்கட்குக் குங்கும குழம்பின் மணத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து பெருகும் திருத்தேவூர் ஆகும். 

3594 பண்டடவு சொல்லின்மலை வல்லியுமைபங்கனெமை யாளுமிறைவன்எண்டடவு வானவரி றைஞ்சுகழலோனினிதி ருந்தவிடமாம்விண்டடவு வார்பொழி லுகுத்தநறவாடிமலர் சூடிவிரையார்செண்டடவு மாளிகை செறிந்துதிருவொன்றிவளர் தேவூரதுவே3.074.3
பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள் தன் திருவடிகளை வணங்க இனிது வீற்றிருந்தருளும் இடம், வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும் தேன்துளிக்கும் மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும் திருத்தேவூர் ஆகும். 

3595 மாசின்மன நேசர்தம தாசைவளர்சூலதரன் மேலையிமையோர்ஈசன்மறை யோதியெரி யாடிமிகுபாசுபதன் மேவுபதிதான்வாசமலர் கோதுகுயில் வாசகமுமாதரவர் பூவைமொழியும்தேசவொலி வீணையொடு கீதமதுவீதிநிறை தேவூரதுவே3.074.4
சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய அடியார்கள் தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக விளங்குபவன். சூலப்படையை ஏந்தியவன். வானுலகிலுள்ள தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி வேதப்பொருளாயும் விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன். வெற்றிதரும் பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான் இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை மூக்கால் கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை போன்று பேசுகின்ற பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள் இறைவனைப் புகழும் ஒலியும் நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருத்தேவூர் ஆகும். 

3596 கானமுறு மான்மறிய னானையுரிபோர்வைகன லாடல்புரிவோன்ஏனவெயி றாமையிள நாகம்வளர்மார்பினிமை யோர்தலைவனூர்வானணவு சூதமிள வாழைமகிழ்மாதவி பலாநிலவிவார்தேனமுது வுண்டுவரி வண்டுமருள்பாடிவரு தேவூரதுவே3.074.5
சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற மான்கன்றைக் கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை மார்பில் அணிந்தவன். தேவர்களின் தலைவன். அவன் உகந்தருளிய திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு, வரிகளையுடைய வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர் ஆகும். 

3597 ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறனடை யார்நகர்கடான்சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறனமை யாளுமரனூர்வீறுமல ரூறுமது வேறிவளர் வாயவிளை கின்றகழனிச்சேறுபடு செங்கயல் விளிப்பவிள வாளைவரு தேவூரதுவே3.074.6
சிவபெருமான் சடையிலே கங்கையோடு, பிறைச்சந்திரனையு

3598 கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரமன்றவிய நின்றுநகைசெய்என்றனது சென்றுநிலை யெந்தைதனதந்தையம ரின்பநகர்தான்முன்றின்மிசை நின்றபல வின்கனிகடின்றுகற வைக்குருளைகள்சென்றிசைய நின்றுதுளி யொன்றவிளையாடிவளர் தேவூரதுவே3.074.7
கோபித்து உலகையழிக்க எண்ணி வெற்றிபெற்ற பகையசுரர்களின் நெருங்கிய மூன்றுபுரங்களையும், சிவபெருமான் சிரித்துச் சாம்பலாகுமாறு செய்தவன். நான் சென்றடையக் கூடிய பற்றுக்கோடாக விளங்குபவன். என் தந்தைக்குத் தந்தையாகிய அச்சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இனிய தலமாவது, வீட்டின் முன்னால் நின்ற பலாக்கனிகளைத் தின்று கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி வளர்கின்ற திருத்தேவூர் ஆகும். 

3599 ஓதமலி கின்றதெனி லங்கையரையன்மலி புயங்கணெரியப்பாதமலி கின்றவிர லொன்றினில்அடர்த்தபர மன்றனதிடம்போதமலி கின்றமட வார்கணடமாடலொடு பொங்குமுரவம்சேதமலி கின்றகரம் வென்றிதொழிலாளர்புரி தேவூரதுவே3.074.8
கடல் அலைகள் மோதுகின்ற தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமை மிகுந்த புயங்கள் நெரிபடத் தன் காற்பெருவிரலை ஊன்றி அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, மகிழ்ச்சி மிகுந்த பெண்கள் நடனமாடவும், முழவு ஒலிக்கவும், சேற்றில் பயில்கின்ற கையினால் உழவுத் தொழில் செய்து வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் வேளாளர்கள் நிறைந்த திருத்தேவூர் ஆகும். 

3600 வண்ணமுகி லன்னவெழி லண்ணலொடுசுண்ணமலி வண்ணமலர்மேல்நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள்கண்ணவ னலங்கொள்பதிதான்வண்ணவன நுண்ணிடையி னெண்ணரியவன்னநடை யின்மொழியினார்திண்ணவண மாளிகை செறிந்தவிசையாழ்மருவு தேவூரதுவே3.074.9
கருநிற மேகத்தையொத்த அழகிய திருமாலும், மகரந்தப்பொடி நிறைந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், அள

3601 பொச்சமமர் பிச்சைபயி லச்சமணுமெச்சமறு போதியருமாமொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகுநச்சரவன் மொச்சநகர்தான்மைச்சின்முகில் வைச்சபொழில்* * * * * * *3.074.10
பொய்யான துறவு வேடம்கொண்டு பிச்சையெடுக்கும் சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும் விருப்ப மான உபதேச மொழிகளை விலக்கி, பித்தன் எனப்படுபவனும், விடமுடைய பாம்பை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானுடைய, மொய்த்த மெய்யடியார்கள் நெருங்கிய தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தேவூர் ஆகும். 

3602 துங்கமிகு பொங்கரவு தங்குசடைநங்களிறை துன்றுகுழலார்செங்கயல்கண் மங்கையுமை நங்கையொருபங்கனமர் தேவூரதன்மேல்பைங்கமல மங்கணிகொள் திண்புகலிஞானசம் பந்தனுரைசெய்சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவைவல்லவர்கள் சங்கையிலரே3.074.11
நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச் சிவந்த சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான். அவர் அடர்ந்த கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுமுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். அவர் வீற்றிருந்தருளும் தலம் திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை மலர்கள் அழகு செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் பத்தையும் அடியார் கூட்டங்களில் ஓத வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.