LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-80

3.080.திருவீழிமிழலை 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். 
தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 
3657 சீர்மருவு தேசினொடு தேசமலி
செல்வமறை யோர்கள்பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி
னானமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயமு யர்ந்தவயல்
சூழ்பழன நீடவருகே
கார்மருவு வெண்கனக மாளிகை
கவின்பெருகு வீழிநகரே
3.080.1
சிறப்புப் பொருந்திய சிவஒளியோடு, தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற செல்வன் கழலேத்தும் செல்வத்தை உடைய அந்தணர்கள் வணங்குகின்ற தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வெற்றிமிகும் பதியாவது, பூமியில் பொருந்திய தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களும், மேகம் சூழ்ந்த வெண்மையான, செல்வ வளமிக்க மாளிகைகளும் அழகுபெற விளங்குகின்ற திருவீழிமிழலையாகும். 
3658 பட்டமுழ விட்டபணி லத்தினொடு
பன்மறைக ளோதுபணிநல்
சிட்டர்கள்ச யத்துதிகள் செய்யவருள்
செய்தழல்கொண் மேனியவனூர்
மட்டுலவு செங்கமல வேலிவயல்
செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி
வேதியர்கள் வீழிநகரே
3.080.2
கொட்டும் முழவின் ஓசையும், ஊதும் சங்கின் ஒலியும், பல வேதங்களை ஓதுகின்ற பணியை மேற்கொள்ளும், சீலமுடைய அந்தணர்கள் வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட அருள்செய்பவர் அழல் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான். அவர் வீற்றிருந்தருளும் ஊரானது நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்குவதும், செந்நெல் பெருகும் வயல்வளமிக்கதும், வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்ததும், தென்றலின் நறுமணம் கமழ்வதும் அந்தணர்கள் வசிக்கின்றதுமான திருவீழிநகர் என்னும் பதியாகும். 
3659 மண்ணிழிசு ரர்க்குவள மிக்கபதி
மற்றுமுள மன்னுயிர்களுக்
கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்தவெழி
லார்பொழி லிலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட
மஞ்ஞைநட மாடவழகார்
விண்ணிழிவி மானமுடை விண்ணவர்பி
ரான்மருவு வீழிநகரே
3.080.3
தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த தேவர்கட்கு வளமிக்க பதி, மற்றுமுள்ள மன்னுயிர்கட்கு எண்ணற்ற இன்பங்களைத் தரும்பதி, அழகிய சோலைகளில் வண்டுகள் பாட, இள மயில்கள் நடனமாட, அழகிய தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படும் விமானமுடைய கோயிலில் தேவர்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் சிறப்புடைய திரு வீழிமிழலை என்னும் தலமாகும். 
3660 செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு
நற்கலைதெ ரிந்தவவரோ
டந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள்
செய்யவமர் கின்றவரனூர்
கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர்
தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி
ரும்புபதி வீழிநகரே
3.080.4
பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும், தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும், சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அர்ச்சனைகள் செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது, கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி சூழ்ந்த வயல்களும், குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க, வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும். 
3661 பூதபதி யாகியபு ராணமுனி
புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக
வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்க ளன்னமறை யாளர்கள்
வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை யின்பமமர்
கின்றவெழில் வீழிநகரே
3.080.5
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான தவக் கோலம் பூண்டவர். அவர் புண்ணிய தேவியாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மாதவர்களும், அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி, பிணி, வறுமை, மழையின்மை முதலிய தீங்கு நேராமலும், உண்டி, நோயின்மை, செல்வம், பருவ மழை முதலிய நன்மை நிகழவும், மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும். 
3662 மண்ணின்மறை யோர்மருவு வைதிகமு
மாதவமு மற்றுமுலகத்
தெண்ணில்பொரு ளாயவை படைத்தவிமை
யோர்கள்பெரு மானதிடமாம்
நண்ணிவரு நாவலர்க ணாடொறும்
வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர்
நீள்புரிசை வீழிநகரே
3.080.6
இப்பூவுலகில் அந்தணர் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களையும், மகா முனிவர் ஒழுகிவருகின்ற தவநெறிகளையும், மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நாடிவருகின்ற புலவர்கள் நாள்தோறும்வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும், வானளாவிய மாளிகையின் நிறைந்து செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமான திருவீழிமிழலை ஆகும். கு - ரை: வைதிகமும் - வேதநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும். மாதவம் - சிறந்த தவநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும், மற்றும் உலகியல் நெறிபற்றி யொழுகற்பால பல்வகையறங்களையும் படைத்தருளிய சிவபெருமானது இடமாவது என்பது முதலிரண்டடியின் கருத்து. நாடி வருகின்ற புலவர்கள் நாள்தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும், வான் அளாவிய மாளிகைகள் செறிந்து செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமாகிய திருவீழிமிழலையென்பது பின்னிரண்டடியின் கருத்து.
3663 மந்திரநன் மாமறையி னோடுவளர் 
வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தரவி சும்பணவி யற்புத
மெனப்படரு மாழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி
நீடுகதிர் விட்டவொளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினார்
திருந்துபதி வீழிநகரே
3.080.7
வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த மந்திரமலையைப்போன்ற அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியானது நெடுந்தூரம் பாய்ந்து புகையால் விளைந்த இருளைப் போக்கி ஒளிரும். அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும் இயல்பினதாய் விருப்பமுடையவர்களாய், மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற தலம் திருவீழிமிழலையாகும். 
3664 ஆனவலி யிற்றசமு கன்றலைய
ரங்கவணி யாழிவிரலால்
ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில்
வீழ்தரவு ணர்ந்தபரனூர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக
மாளிகை திகழ்ந்தமதிளோ
டானதிரு வுற்றுவள ரந்தணர்
நிறைந்தவணி வீழிநகரே
3.080.8
தசமுகன் எனப்படும் இராவணன் தன் வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை ஊன்றி, அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும் சோலைகளும், செம்பொன் மாளிகைகளும், உயர்ந்த மதில்களும் உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய திருவீழிநகராகும். 
3665 ஏனவுரு வாகிமணி டந்தவிமை
யோனுமெழி லன்னவுருவம்
ஆனவனு மாதியினோ டந்தமறி
யாதவழன் மேனியவனூர்
வானணவு மாமதிண் மருங்கலர்
நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
வேனலமர் வெய்திட விளங்கொளியின்
மிக்கபுகழ் வீழிநகரே
3.080.9
பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய திருமாலும், அழகிய அன்னப்பறவை உருவெடுத்த பிரமனும் தேடத் தன் முடியையும், அடியையும் அறியப்படாத வண்ணம் நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது, வானளாவிய பெரிய மதில்களினருகில் மலர்கள் அடர்ந்த, வளமிக்க சோலையில் மாந்தர் வெயிற்காலத்தில் தங்க, விளங்குகின்ற தெய்வத்தன்மை மிக்க புகழுடைய திருவீழிமிழலையாகும். 
3666 குண்டமண ராகியொரு கோலமிகு
பீலியொடு குண்டிகைபிடித்
தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள
தென்பரது வென்னபொருளாம்
பண்டையய னன்னவர்கள் பாவனை
விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்டரள வாணகைநன் மாதர்கள்
விளங்குமெழில் வீழிநகரே
3.080.10
சமணர்கள் முரட்டுத்தன்மை உடையவராய், அழகிய மயிற்பீலியும், குண்டிகையும் ஏந்தி, எட்டுத் திக்கிலும் மிகுந்த ஆற்றலுடைய தெய்வம் ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது? வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், வெண்ணிற முத்துப்போன்ற ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய திருவீழிமிழலையாகும். 
3667 மத்தமலி கொன்றைவளர் வார்சடையில்
வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன்
விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானமமர் செல்வமலி
கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு
போகமொடி யோகமவரதே
3.080.11
பொன்னூமத்தை மலரும், கொன்றைமலரும், நீண்ட சடையிலே அணிந்த பெருமானும், திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும் சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி. வெங்குறு என்னும் பெயரையுடைய சீகாழியில் அவதரித்த வேதவல்லுநனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள், அழகிய கோயிலையுடைய செல்வம் மலிகின்ற சிவலோகத்தை அடைந்து, சத்துவ குணம் உடையவர்களாகி இறைவனோடு பேரின்பம் துய்ப்பதற்குரிய சிவயோகத்தைப் பெறுவர். 
திருச்சிற்றம்பலம்

3.080.திருவீழிமிழலை 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 

3657 சீர்மருவு தேசினொடு தேசமலிசெல்வமறை யோர்கள்பணியத்தார்மருவு கொன்றையணி தாழ்சடையினானமர்ச யங்கொள்பதிதான்பார்மருவு பங்கயமு யர்ந்தவயல்சூழ்பழன நீடவருகேகார்மருவு வெண்கனக மாளிகைகவின்பெருகு வீழிநகரே3.080.1
சிறப்புப் பொருந்திய சிவஒளியோடு, தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற செல்வன் கழலேத்தும் செல்வத்தை உடைய அந்தணர்கள் வணங்குகின்ற தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வெற்றிமிகும் பதியாவது, பூமியில் பொருந்திய தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களும், மேகம் சூழ்ந்த வெண்மையான, செல்வ வளமிக்க மாளிகைகளும் அழகுபெற விளங்குகின்ற திருவீழிமிழலையாகும். 

3658 பட்டமுழ விட்டபணி லத்தினொடுபன்மறைக ளோதுபணிநல்சிட்டர்கள்ச யத்துதிகள் செய்யவருள்செய்தழல்கொண் மேனியவனூர்மட்டுலவு செங்கமல வேலிவயல்செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்விட்டுலவு தென்றல்விரை நாறுபதிவேதியர்கள் வீழிநகரே3.080.2
கொட்டும் முழவின் ஓசையும், ஊதும் சங்கின் ஒலியும், பல வேதங்களை ஓதுகின்ற பணியை மேற்கொள்ளும், சீலமுடைய அந்தணர்கள் வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட அருள்செய்பவர் அழல் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான். அவர் வீற்றிருந்தருளும் ஊரானது நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்குவதும், செந்நெல் பெருகும் வயல்வளமிக்கதும், வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்ததும், தென்றலின் நறுமணம் கமழ்வதும் அந்தணர்கள் வசிக்கின்றதுமான திருவீழிநகர் என்னும் பதியாகும். 

3659 மண்ணிழிசு ரர்க்குவள மிக்கபதிமற்றுமுள மன்னுயிர்களுக்கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்தவெழிலார்பொழி லிலங்கறுபதம்பண்ணிழிவி லாதவகை பாடமடமஞ்ஞைநட மாடவழகார்விண்ணிழிவி மானமுடை விண்ணவர்பிரான்மருவு வீழிநகரே3.080.3
தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த தேவர்கட்கு வளமிக்க பதி, மற்றுமுள்ள மன்னுயிர்கட்கு எண்ணற்ற இன்பங்களைத் தரும்பதி, அழகிய சோலைகளில் வண்டுகள் பாட, இள மயில்கள் நடனமாட, அழகிய தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படும் விமானமுடைய கோயிலில் தேவர்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் சிறப்புடைய திரு வீழிமிழலை என்னும் தலமாகும். 

3660 செந்தமிழர் தெய்வமறை நாவர்செழுநற்கலைதெ ரிந்தவவரோடந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள்செய்யவமர் கின்றவரனூர்கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர்தண்புனல்வ ளம்பெருகவேவெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்விரும்புபதி வீழிநகரே3.080.4
பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும், தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும், சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அர்ச்சனைகள் செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது, கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி சூழ்ந்த வயல்களும், குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க, வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும். 

3661 பூதபதி யாகியபு ராணமுனிபுண்ணியநன் மாதைமருவிப்பேதமதி லாதவகை பாகமிகவைத்தபெரு மானதிடமாம்மாதவர்க ளன்னமறை யாளர்கள்வளர்த்தமலி வேள்வியதனால்ஏதமதி லாதவகை யின்பமமர்கின்றவெழில் வீழிநகரே3.080.5
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான தவக் கோலம் பூண்டவர். அவர் புண்ணிய தேவியாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மாதவர்களும், அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி, பிணி, வறுமை, மழையின்மை முதலிய தீங்கு நேராமலும், உண்டி, நோயின்மை, செல்வம், பருவ மழை முதலிய நன்மை நிகழவும், மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும். 

3662 மண்ணின்மறை யோர்மருவு வைதிகமுமாதவமு மற்றுமுலகத்தெண்ணில்பொரு ளாயவை படைத்தவிமையோர்கள்பெரு மானதிடமாம்நண்ணிவரு நாவலர்க ணாடொறும்வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர்நீள்புரிசை வீழிநகரே3.080.6
இப்பூவுலகில் அந்தணர் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களையும், மகா முனிவர் ஒழுகிவருகின்ற தவநெறிகளையும், மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நாடிவருகின்ற புலவர்கள் நாள்தோறும்வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும், வானளாவிய மாளிகையின் நிறைந்து செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமான திருவீழிமிழலை ஆகும். கு - ரை: வைதிகமும் - வேதநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும். மாதவம் - சிறந்த தவநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும், மற்றும் உலகியல் நெறிபற்றி யொழுகற்பால பல்வகையறங்களையும் படைத்தருளிய சிவபெருமானது இடமாவது என்பது முதலிரண்டடியின் கருத்து. நாடி வருகின்ற புலவர்கள் நாள்தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும், வான் அளாவிய மாளிகைகள் செறிந்து செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமாகிய திருவீழிமிழலையென்பது பின்னிரண்டடியின் கருத்து.

3663 மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்அந்தரவி சும்பணவி யற்புதமெனப்படரு மாழியிருள்வாய்மந்தரநன் மாளிகை நிலாவுமணிநீடுகதிர் விட்டவொளிபோய்வெந்தழல் விளக்கென விரும்பினார்திருந்துபதி வீழிநகரே3.080.7
வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த மந்திரமலையைப்போன்ற அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியானது நெடுந்தூரம் பாய்ந்து புகையால் விளைந்த இருளைப் போக்கி ஒளிரும். அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும் இயல்பினதாய் விருப்பமுடையவர்களாய், மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற தலம் திருவீழிமிழலையாகும். 

3664 ஆனவலி யிற்றசமு கன்றலையரங்கவணி யாழிவிரலால்ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில்வீழ்தரவு ணர்ந்தபரனூர்தேனமர் திருந்துபொழில் செங்கனகமாளிகை திகழ்ந்தமதிளோடானதிரு வுற்றுவள ரந்தணர்நிறைந்தவணி வீழிநகரே3.080.8
தசமுகன் எனப்படும் இராவணன் தன் வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை ஊன்றி, அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும் சோலைகளும், செம்பொன் மாளிகைகளும், உயர்ந்த மதில்களும் உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய திருவீழிநகராகும். 

3665 ஏனவுரு வாகிமணி டந்தவிமையோனுமெழி லன்னவுருவம்ஆனவனு மாதியினோ டந்தமறியாதவழன் மேனியவனூர்வானணவு மாமதிண் மருங்கலர்நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்வேனலமர் வெய்திட விளங்கொளியின்மிக்கபுகழ் வீழிநகரே3.080.9
பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய திருமாலும், அழகிய அன்னப்பறவை உருவெடுத்த பிரமனும் தேடத் தன் முடியையும், அடியையும் அறியப்படாத வண்ணம் நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது, வானளாவிய பெரிய மதில்களினருகில் மலர்கள் அடர்ந்த, வளமிக்க சோலையில் மாந்தர் வெயிற்காலத்தில் தங்க, விளங்குகின்ற தெய்வத்தன்மை மிக்க புகழுடைய திருவீழிமிழலையாகும். 

3666 குண்டமண ராகியொரு கோலமிகுபீலியொடு குண்டிகைபிடித்தெண்டிசையு மில்லதொரு தெய்வமுளதென்பரது வென்னபொருளாம்பண்டையய னன்னவர்கள் பாவனைவிரும்புபரன் மேவுபதிசீர்வெண்டரள வாணகைநன் மாதர்கள்விளங்குமெழில் வீழிநகரே3.080.10
சமணர்கள் முரட்டுத்தன்மை உடையவராய், அழகிய மயிற்பீலியும், குண்டிகையும் ஏந்தி, எட்டுத் திக்கிலும் மிகுந்த ஆற்றலுடைய தெய்வம் ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது? வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், வெண்ணிற முத்துப்போன்ற ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய திருவீழிமிழலையாகும். 

3667 மத்தமலி கொன்றைவளர் வார்சடையில்வைத்தபரன் வீழிநகர்சேர்வித்தகனை வெங்குருவில் வேதியன்விரும்புதமிழ் மாலைகள்வலார்சித்திர விமானமமர் செல்வமலிகின்றசிவ லோகமருவிஅத்தகு குணத்தவர்க ளாகியனுபோகமொடி யோகமவரதே3.080.11
பொன்னூமத்தை மலரும், கொன்றைமலரும், நீண்ட சடையிலே அணிந்த பெருமானும், திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும் சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி. வெங்குறு என்னும் பெயரையுடைய சீகாழியில் அவதரித்த வேதவல்லுநனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள், அழகிய கோயிலையுடைய செல்வம் மலிகின்ற சிவலோகத்தை அடைந்து, சத்துவ குணம் உடையவர்களாகி இறைவனோடு பேரின்பம் துய்ப்பதற்குரிய சிவயோகத்தைப் பெறுவர். 
திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.