LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-81

3.081.திருத்தோணிபுரம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தோணியப்பர். 
தேவியார் - திருநிலைநாயகியம்மை. 
3668 சங்கமரு முன்கைமட மாதையொரு
பாலுடன் விரும்பி
அங்கமுடன் மேலுறவ ணிந்துபிணி
தீரவருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு
னைக்கடலின் முத்தந்
துங்கமணி யிப்பிகள் கரைக்குவரு
தோணிபுர மாமே
3.081.1
முன்கையில் சங்குவளையல் அணிந்த உமாதேவியைத் தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி, எலும்பைத் தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து, தன்னைத் தியானிப்பவரது மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள்புரிகின்ற எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அலைவீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும், இரத்தினங்களும், சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற திருத்தோணிபுரம் ஆகும். 
3669 சல்லரியி யாழ்முழவ மொந்தைகுழ
றாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு
பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை
யண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர்
தோணிபுர மாமே
3.081.2
சல்லரி, யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, பெரிய மலையாகிய இமயமலையரசரின் அரிய மகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாமல் கொண்டு, கையில் அனலை ஏந்தி இரவில் நடனமாடுகின்ற, சடைமுடியையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், சொல்லுதற்குரிய பெருமையுடைய தொண்டர்கள் போற்ற நாளும் புகழ் வளரும் திருத்தோணிபுரம் ஆகும். 
3670 வண்டரவுகொன்றைவளர் புன்சடையின்
மேன்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர
மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலி னஞ்சமமு
துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு
தோணிபுர மாமே
3.081.3
வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து, பண்டைக்காலத்தில் இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய மேலான இடத்திலுள்ள சிவபெருமான், திருமால் முதலியோர் தனது அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு நீங்குமாறு, திருவருள் செய்து, அலைகளின் ஆரவாரத்தையுடைய சிறந்த பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட கடவுளாய் வீற்றிருந்தருளும் ஊர், திருத்தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம் ஆகும். 
3671 கொல்லைவிடை யேறுடைய கோவணவ
னாவணவு மாலை
ஒல்லையுடை யானடைய லாரரண
மொள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி
மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகவிடர் தீர்த்தருள்செய்
தோணிபுர மாமே
3.081.4
சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய இடபவாகனத்தை யுடையவன். கோவண ஆடை அணிந்தவன். அடிய வர்கள் பாடிப் போற்றித் தொழும் பாமாலைகளை உடையவன். தொண்டர்கள் பக்தியுடன் ஒலிக்கும் அரநாமமும், சிவநாமமும் ஓதப்படும் பண்பினன். பகைவரது மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த மேருவை வில்லாக உடையவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்டு மேன்மேலும் பக்தி செய்கின்ற தொண்டர்களின் வேண்டு கோள்களை ஏற்று, அவர்களின் துன்பங்களைத் தீர்த்து அருள்செய்கின்ற திருத்தோணிபுரம் ஆகும். 
3672 தேயுமதி யஞ்சடையி லங்கிடவி
லங்கன்மலி கானிற்
காயுமடு திண்கரியி னீருரிவை
போர்த்தவனி னைப்பார்
தாயென நிறைந்ததொரு தன்மையினர்
நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை
தோணிபுர மாமே
3.081.5
கலைகள் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த சந்திரனைச் சடைமுடியில் தரித்து மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர் சிவபெருமான். மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற சினமுடைய, கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப் போலக் கருணை காட்டிப் பாதுகாப்பவர். எங்கும் நிறைந்த தன்மையர். அடியவர்கட்கு நன்மை புரிதலையே தம் கடனாகக் கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற இடம், தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற திருத்தோணிபுரம் ஆகும். 
3673 பற்றலர்த முப்புரமெ ரித்தடிப
ணிந்தவர்கண் மேலைக்
குற்றமதொ ழித்தருளு கொள்கையினன்
வெள்ளின்முது கானிற்
பற்றவனி சைக்கிளவி பாரிடம
தேத்தநட மாடுந்
துற்றசடை யத்தனுறை கின்றபதி
தோணிபுர மாமே
3.081.6
சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர். பாடைகள் மலிந்த சுடுகாட்டில் பற்றுடையவர். பூதகணங்கள் இசைப் பாடல்களைத் துதித்துப்பாட நடனமாடுபவர். அடர்ந்து வளர்ந்த சடையையுடைய, அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும். 
3674 பண்ணமரு நான்மறையர் நூன்முறை
பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை
பேசுமடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைக டீரவருள்
செய்தலுடை யானூர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர்
தோணிபுர மாமே
3.081.7
சிவபெருமான் பண்ணிசையோடு கூடிய நான்கு வேதங்களை அருளியவர். வேதாகம சாத்திரங்களின் முடிவான கருத்தை, மோனநிலையில் சின்முத்திரையால் தெரிவித்தருளிய திருமார்பையுடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். தமது பெருமை பேசும் அடியவர்களின் தீர்ப்பதற்கரிய வல்வினைகளைத் தீர்த்து அருளியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது சரியையாதி தொழில்களை விரைவுடன் பணிசெய்தலில் விருப்புடைய மெய்த்தொண்டர் வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 
3675 தென்றிசையி லங்கையரை யன்றிசைகள்
வீரம்விளை வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும்
வித்தகனி டஞ்சீர்
ஒன்றிசையி யற்கிளவி பாடமயி
லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுர
றோணிபுர மாமே
3.081.8
தென்திசையில் விளங்கிய இலங்கை மன்னனான இராவணன் எல்லாத் திசைகளிலும் திக்விஜயம் செய்து தனது வீரத்தை நிலைநாட்டி, வெற்றி கொண்ட தோள்களை நெருக்கிப் பின் அருளும் புரிந்த வித்தகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இசையுடன் குயில்கள் பாட, மயில்கள் ஆட, வளம் பொருந்திய சோலைகளின் மலர்களிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு, வண்டுகளும், மிகுந்த தும்பிகளும் சுருதிகூட்டுவது போல் முரல்கின்ற திருத்தோணிபுரம் ஆகும். 
3676 நாற்றமிகு மாமலரின் மேலயனு
நாரணனு நாடி
ஆற்றலத னான்மிகவ ளப்பரிய
வண்ணமெரி யாகி
ஊற்றமிகு கீழுலகு மேலுலகு 
மோங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவு
தோணிபுர மாமே
3.081.9
நறுமணம் கமழும் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேட முயலத் தங்களது ஆற்றலால் அளந்தறிதற்கு அரிதாகும் வண்ணம், நெருப்புப் பிழம்பாகி, கீழுலகு மேலுலகு ஆகியவற்றை வியாபித்து ஓங்கியெழுந்த தன்மையுடைய தோற்றத்தை உடையவனாய் ஒருநாளும் அவர்கள் அறிதற்கரியனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருத்தோணிபுரம் ஆகும். 
3677 மூடுதுவ ராடையினர் வேடநிலை 
காட்டுமம ணாதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ
டுத்தடைவி னானக்
காடுபதி யாகநட மாடிமட
மாதொடிரு காதிற்
றோடுகுழை பெய்தவர்த மக்குறைவு
தோணிபுர மாமே
3.081.10
உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த புத்தர்களும், தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப் போல தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய சமணர்களும் தீமை விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர். அத்தீய மொழிகளை நீக்கி, சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக் கொண்டு, நடனமாடி, உமாதேவியோடு கூடி, இருகாதுகளிலும் முறையே தோடும், குழையும் அணிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும். 
3678 துஞ்சிருளி னின்றுநட மாடிமிகு
தோணிபுர மேய
மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம்
பந்தனசொல் மாலை
தஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடி
யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள்
பெற்றுவளர் வாரே
3.081.11
அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும் பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப், புகழ்மிகுந்த திருத்தோணிபுரத்தை விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே தமக்குப் பற்றுக்கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று, அதனை இசையுடன் ஓதும் அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக் காரணமான வஞ்சனையும் இல்லாதவர்கள். அவர்கள் நெஞ்சிலுள்ள அறியாமை என்னும் இருள் நீங்கப் பெற்று, இறைவனது அருள் பெற்றுச் சீலத்துடன் வளர்வர். 
திருச்சிற்றம்பலம்

3.081.திருத்தோணிபுரம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தோணியப்பர். தேவியார் - திருநிலைநாயகியம்மை. 

3668 சங்கமரு முன்கைமட மாதையொருபாலுடன் விரும்பிஅங்கமுடன் மேலுறவ ணிந்துபிணிதீரவருள் செய்யும்எங்கள்பெரு மானிடமெ னத்தகுமுனைக்கடலின் முத்தந்துங்கமணி யிப்பிகள் கரைக்குவருதோணிபுர மாமே3.081.1
முன்கையில் சங்குவளையல் அணிந்த உமாதேவியைத் தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி, எலும்பைத் தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து, தன்னைத் தியானிப்பவரது மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள்புரிகின்ற எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அலைவீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும், இரத்தினங்களும், சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற திருத்தோணிபுரம் ஆகும். 

3669 சல்லரியி யாழ்முழவ மொந்தைகுழறாளமதி யம்பக்கல்லரிய மாமலையர் பாவையொருபாகநிலை செய்துஅல்லெரிகை யேந்திநட மாடுசடையண்ணலிட மென்பர்சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர்தோணிபுர மாமே3.081.2
சல்லரி, யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, பெரிய மலையாகிய இமயமலையரசரின் அரிய மகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாமல் கொண்டு, கையில் அனலை ஏந்தி இரவில் நடனமாடுகின்ற, சடைமுடியையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், சொல்லுதற்குரிய பெருமையுடைய தொண்டர்கள் போற்ற நாளும் புகழ் வளரும் திருத்தோணிபுரம் ஆகும். 

3670 வண்டரவுகொன்றைவளர் புன்சடையின்மேன்மதியம் வைத்துப்பண்டரவு தன்னரையி லார்த்தபரமேட்டிபழி தீரக்கண்டரவ வொண்கடலி னஞ்சமமுதுண்டகட வுள்ளூர்தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்குதோணிபுர மாமே3.081.3
வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து, பண்டைக்காலத்தில் இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய மேலான இடத்திலுள்ள சிவபெருமான், திருமால் முதலியோர் தனது அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு நீங்குமாறு, திருவருள் செய்து, அலைகளின் ஆரவாரத்தையுடைய சிறந்த பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட கடவுளாய் வீற்றிருந்தருளும் ஊர், திருத்தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம் ஆகும். 

3671 கொல்லைவிடை யேறுடைய கோவணவனாவணவு மாலைஒல்லையுடை யானடைய லாரரணமொள்ளழல் விளைத்தவில்லையுடை யான்மிக விரும்புபதிமேவிவளர் தொண்டர்சொல்லையடை வாகவிடர் தீர்த்தருள்செய்தோணிபுர மாமே3.081.4
சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய இடபவாகனத்தை யுடையவன். கோவண ஆடை அணிந்தவன். அடிய வர்கள் பாடிப் போற்றித் தொழும் பாமாலைகளை உடையவன். தொண்டர்கள் பக்தியுடன் ஒலிக்கும் அரநாமமும், சிவநாமமும் ஓதப்படும் பண்பினன். பகைவரது மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த மேருவை வில்லாக உடையவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்டு மேன்மேலும் பக்தி செய்கின்ற தொண்டர்களின் வேண்டு கோள்களை ஏற்று, அவர்களின் துன்பங்களைத் தீர்த்து அருள்செய்கின்ற திருத்தோணிபுரம் ஆகும். 

3672 தேயுமதி யஞ்சடையி லங்கிடவிலங்கன்மலி கானிற்காயுமடு திண்கரியி னீருரிவைபோர்த்தவனி னைப்பார்தாயென நிறைந்ததொரு தன்மையினர்நன்மையொடு வாழ்வுதூயமறை யாளர்முறை யோதிநிறைதோணிபுர மாமே3.081.5
கலைகள் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த சந்திரனைச் சடைமுடியில் தரித்து மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர் சிவபெருமான். மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற சினமுடைய, கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப் போலக் கருணை காட்டிப் பாதுகாப்பவர். எங்கும் நிறைந்த தன்மையர். அடியவர்கட்கு நன்மை புரிதலையே தம் கடனாகக் கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற இடம், தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற திருத்தோணிபுரம் ஆகும். 

3673 பற்றலர்த முப்புரமெ ரித்தடிபணிந்தவர்கண் மேலைக்குற்றமதொ ழித்தருளு கொள்கையினன்வெள்ளின்முது கானிற்பற்றவனி சைக்கிளவி பாரிடமதேத்தநட மாடுந்துற்றசடை யத்தனுறை கின்றபதிதோணிபுர மாமே3.081.6
சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர். பாடைகள் மலிந்த சுடுகாட்டில் பற்றுடையவர். பூதகணங்கள் இசைப் பாடல்களைத் துதித்துப்பாட நடனமாடுபவர். அடர்ந்து வளர்ந்த சடையையுடைய, அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும். 

3674 பண்ணமரு நான்மறையர் நூன்முறைபயின்றதிரு மார்பிற்பெண்ணமரு மேனியினர் தம்பெருமைபேசுமடி யார்மெய்த்திண்ணமரும் வல்வினைக டீரவருள்செய்தலுடை யானூர்துண்ணென விரும்புசரி யைத்தொழிலர்தோணிபுர மாமே3.081.7
சிவபெருமான் பண்ணிசையோடு கூடிய நான்கு வேதங்களை அருளியவர். வேதாகம சாத்திரங்களின் முடிவான கருத்தை, மோனநிலையில் சின்முத்திரையால் தெரிவித்தருளிய திருமார்பையுடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். தமது பெருமை பேசும் அடியவர்களின் தீர்ப்பதற்கரிய வல்வினைகளைத் தீர்த்து அருளியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது சரியையாதி தொழில்களை விரைவுடன் பணிசெய்தலில் விருப்புடைய மெய்த்தொண்டர் வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 

3675 தென்றிசையி லங்கையரை யன்றிசைகள்வீரம்விளை வித்துவென்றிசை புயங்களை யடர்த்தருளும்வித்தகனி டஞ்சீர்ஒன்றிசையி யற்கிளவி பாடமயிலாடவளர் சோலைதுன்றுசெய வண்டுமலி தும்பிமுரறோணிபுர மாமே3.081.8
தென்திசையில் விளங்கிய இலங்கை மன்னனான இராவணன் எல்லாத் திசைகளிலும் திக்விஜயம் செய்து தனது வீரத்தை நிலைநாட்டி, வெற்றி கொண்ட தோள்களை நெருக்கிப் பின் அருளும் புரிந்த வித்தகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இசையுடன் குயில்கள் பாட, மயில்கள் ஆட, வளம் பொருந்திய சோலைகளின் மலர்களிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு, வண்டுகளும், மிகுந்த தும்பிகளும் சுருதிகூட்டுவது போல் முரல்கின்ற திருத்தோணிபுரம் ஆகும். 

3676 நாற்றமிகு மாமலரின் மேலயனுநாரணனு நாடிஆற்றலத னான்மிகவ ளப்பரியவண்ணமெரி யாகிஊற்றமிகு கீழுலகு மேலுலகு மோங்கியெழு தன்மைத்தோற்றமிக நாளுமரி யானுறைவுதோணிபுர மாமே3.081.9
நறுமணம் கமழும் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேட முயலத் தங்களது ஆற்றலால் அளந்தறிதற்கு அரிதாகும் வண்ணம், நெருப்புப் பிழம்பாகி, கீழுலகு மேலுலகு ஆகியவற்றை வியாபித்து ஓங்கியெழுந்த தன்மையுடைய தோற்றத்தை உடையவனாய் ஒருநாளும் அவர்கள் அறிதற்கரியனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருத்தோணிபுரம் ஆகும். 

3677 மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டுமம ணாதர்கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெடுத்தடைவி னானக்காடுபதி யாகநட மாடிமடமாதொடிரு காதிற்றோடுகுழை பெய்தவர்த மக்குறைவுதோணிபுர மாமே3.081.10
உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த புத்தர்களும், தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப் போல தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய சமணர்களும் தீமை விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர். அத்தீய மொழிகளை நீக்கி, சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக் கொண்டு, நடனமாடி, உமாதேவியோடு கூடி, இருகாதுகளிலும் முறையே தோடும், குழையும் அணிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும். 

3678 துஞ்சிருளி னின்றுநட மாடிமிகுதோணிபுர மேயமஞ்சனைவ ணங்குதிரு ஞானசம்பந்தனசொல் மாலைதஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடியார்கள்தடு மாற்றம்வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள்பெற்றுவளர் வாரே3.081.11
அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும் பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப், புகழ்மிகுந்த திருத்தோணிபுரத்தை விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே தமக்குப் பற்றுக்கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று, அதனை இசையுடன் ஓதும் அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக் காரணமான வஞ்சனையும் இல்லாதவர்கள். அவர்கள் நெஞ்சிலுள்ள அறியாமை என்னும் இருள் நீங்கப் பெற்று, இறைவனது அருள் பெற்றுச் சீலத்துடன் வளர்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.