LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-90

3.090.திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
3767 ஓங்கிமே லுழிதரு மொலிபுனற்
கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல
னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம்
புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.1
சிவபெருமான், மேன்மேலும் ஓங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர். இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர். முறைப்படி, பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும், நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர். அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடிஎன்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 
3768 தூறுசேர் சுடலையிற் சுடரெரி
யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண்
பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ
டொருபக லமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.2
சிவபெருமான், புதர்ச்செடிகள் நிறைந்த சுடுகாட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர். விளங்கும் ஒளியுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர். வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர். மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள் வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர். இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருள்பவர். 
3769 மழைவள ரிளமதி மலரொடு
தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங்
கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ
டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.3
குளிர்ச்சியான இளம்பிறையும், கொன்றை, ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது, கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர். அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடையணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில், மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார். அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார். 
3770 கரும்பன வரிசிலைப் பெருந்தகைக்
காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க்
கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை யரிவையொ
டொருபக லமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.4
இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகையாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர். வண்டுகள் மொய்க்கும், தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர். அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமா தேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும். 
3771 வளங்கிளர் மதியமும் பொன்மலர்க்
கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங்
கண்ணுதற் கபாலியார்தாம்
துளங்குநூன் மார்பின ரரிவையொ
டொருபக லமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.5
அழகு மிளிரும் சந்திரனும், பொன் போன்ற கொன்றைமலரும், வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய, நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர். அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர். அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார். 
3772 பொறியுலா மடுபுலி யுரிவையர்
வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளு நீர்மையர்
சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையொ
டொருபக லமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.6
சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர். நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர். பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்டதன்மையர். இத்தகைய எளிமை உடையவர் ஆயினும், எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர். மான்கன்று ஏந்திய கையினர். அத்தகைய பெருமான் உமா தேவியாரோடு பகலில் நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத் தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். 
3773 புரிதரு சடையினர் புலியுரி
யரையினர் பொடியணிந்து
திரிதரு மியல்பினர் திரிபுர
மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொ
டொருபக லமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.7
சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர். புலியின் தோலை அரையில் உடுத்தவர். திருவெண்நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர். திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர். சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத் துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார். 
3774 நீண்டிலங் கவிரொளி நெடுமுடி
யரக்கனிந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ
னாள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்டநூன் மார்பின ரரிவையொ
டொருபக லமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.8
நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் “இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன்” என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான். அவர் பூணூல் அணிந்த திருமார்பினர். அவர் உமாதேவியோடு பகலில், விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார். 
3775 கரைகட லரவணைக் கடவுளுந்
தாமரை நான்முகனும்
குரைகழ லடிதொழக் கூரெரி
யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம்
புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.9
ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை, செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான். அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 
3776 அயமுக வெயினிலை யமணருங்
குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன
சரிதைகள் செய்துழல்வார் 
கயலன வரிநெடுங் கண்ணியொ
டொருபக லமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே
3.090.10
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும், குண்டர்களாகிய புத்தர்களும், இன்முகத்தோடு நயமாகப் பேசி, நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள். ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர். கயல்மீன் போன்ற, அழகிய, வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத் துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருளுகின்றார். அவரை வழிபட்ட உய்வீர்களாக. 
3777 விண்ணுலாம் விரிபொழில் விரைமணற்
றுருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் மொலிகழலாடுவா
ரரிவையொ டுறைபதியை
நண்ணுலாம் புகலியு ளருமறை
ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலா மருந்தமிழ் பாடுவா
ராடுவார் பழியிலரே
3.090.11
ஒளிவிடும், ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற, ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த, மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும், பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும், பாவமும் இல்லாதவர்களாவர். 
திருச்சிற்றம்பலம்

3.090.திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

3767 ஓங்கிமே லுழிதரு மொலிபுனற்கங்கையை யொருசடைமேல்தாங்கினா ரிடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள்பாங்கினா லுமையொடு பகலிடம்புகலிடம் பைம்பொழில்சூழ்வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.1
சிவபெருமான், மேன்மேலும் ஓங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர். இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர். முறைப்படி, பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும், நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர். அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடிஎன்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 

3768 தூறுசேர் சுடலையிற் சுடரெரியாடுவர் துளங்கொளிசேர்நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண்பிறைபுல்கு சடைமுடியார்நாறுசாந் திளமுலை யரிவையோடொருபக லமர்ந்தபிரான்வீறுசேர் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.2
சிவபெருமான், புதர்ச்செடிகள் நிறைந்த சுடுகாட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர். விளங்கும் ஒளியுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர். வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர். மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள் வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர். இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருள்பவர். 

3769 மழைவள ரிளமதி மலரொடுதலைபுல்கு வார்சடைமேல்கழைவளர் புனல்புகக் கண்டவெங்கண்ணுதற் கபாலியார்தாம்இழைவளர் துகிலல்கு லரிவையோடொருபக லமர்ந்தபிரான்விழைவளர் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.3
குளிர்ச்சியான இளம்பிறையும், கொன்றை, ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது, கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர். அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடையணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில், மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார். அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார். 

3770 கரும்பன வரிசிலைப் பெருந்தகைக்காமனைக் கவினழித்தசுரும்பொடு தேன்மல்கு தூமலர்க்கொன்றையஞ் சுடர்ச்சடையார்அரும்பன வனமுலை யரிவையொடொருபக லமர்ந்தபிரான்விரும்பிடம் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.4
இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகையாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர். வண்டுகள் மொய்க்கும், தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர். அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமா தேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும். 

3771 வளங்கிளர் மதியமும் பொன்மலர்க்கொன்றையும் வாளரவும்களங்கொளச் சடையிடை வைத்தஎங்கண்ணுதற் கபாலியார்தாம்துளங்குநூன் மார்பின ரரிவையொடொருபக லமர்ந்தபிரான்விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.5
அழகு மிளிரும் சந்திரனும், பொன் போன்ற கொன்றைமலரும், வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய, நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர். அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர். அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார். 

3772 பொறியுலா மடுபுலி யுரிவையர்வரியராப் பூண்டிலங்கும்நெறியுலாம் பலிகொளு நீர்மையர்சீர்மையை நினைப்பரியார்மறியுலாங் கையினர் மங்கையொடொருபக லமர்ந்தபிரான்வெறியுலாந் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.6
சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர். நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர். பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்டதன்மையர். இத்தகைய எளிமை உடையவர் ஆயினும், எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர். மான்கன்று ஏந்திய கையினர். அத்தகைய பெருமான் உமா தேவியாரோடு பகலில் நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத் தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். 

3773 புரிதரு சடையினர் புலியுரியரையினர் பொடியணிந்துதிரிதரு மியல்பினர் திரிபுரமூன்றையுந் தீவளைத்தார்வரிதரு வனமுலை மங்கையொடொருபக லமர்ந்தபிரான்விரிதரு துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.7
சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர். புலியின் தோலை அரையில் உடுத்தவர். திருவெண்நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர். திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர். சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத் துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார். 

3774 நீண்டிலங் கவிரொளி நெடுமுடியரக்கனிந் நீள்வரையைக்கீண்டிடந் திடுவனென் றெழுந்தவனாள்வினை கீழ்ப்படுத்தார்பூண்டநூன் மார்பின ரரிவையொடொருபக லமர்ந்தபிரான்வேண்டிடந் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.8
நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் “இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன்” என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான். அவர் பூணூல் அணிந்த திருமார்பினர். அவர் உமாதேவியோடு பகலில், விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார். 

3775 கரைகட லரவணைக் கடவுளுந்தாமரை நான்முகனும்குரைகழ லடிதொழக் கூரெரியெனநிறங் கொண்டபிரான்வரைகெழு மகளொடும் பகலிடம்புகலிடம் வண்பொழில்சூழ்விரைகமழ் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.9
ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை, செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான். அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும். இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 

3776 அயமுக வெயினிலை யமணருங்குண்டருஞ் சாக்கியரும்நயமுக வுரையினர் நகுவனசரிதைகள் செய்துழல்வார் கயலன வரிநெடுங் கண்ணியொடொருபக லமர்ந்தபிரான்வியனகர்த் துருத்தியா ரிரவிடத்துறைவர்வேள் விக்குடியே3.090.10
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும், குண்டர்களாகிய புத்தர்களும், இன்முகத்தோடு நயமாகப் பேசி, நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள். ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர். கயல்மீன் போன்ற, அழகிய, வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத் துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருளுகின்றார். அவரை வழிபட்ட உய்வீர்களாக. 

3777 விண்ணுலாம் விரிபொழில் விரைமணற்றுருத்திவேள் விக்குடியும்ஒண்ணுலாம் மொலிகழலாடுவாரரிவையொ டுறைபதியைநண்ணுலாம் புகலியு ளருமறைஞானசம் பந்தன்சொன்னபண்ணுலா மருந்தமிழ் பாடுவாராடுவார் பழியிலரே3.090.11
ஒளிவிடும், ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற, ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த, மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும், பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும், பாவமும் இல்லாதவர்களாவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.