LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-91

3.091.திருவடகுரங்காடுதுறை 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர். 
தேவியார் - சடைமுடியம்மை. 
3778 கோங்கமே குரவமே கொழுமலர்ப் 
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை 
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா
ரிடமென விரும்பினாரே
3.091.1
கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர். 
3779 மந்தமா யிழிமதக் களிற்றிள
மருப்பொடு பொருப்பினல்ல
சந்தமா ரகிலொடு சாதியின்
பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
எந்தையா ரிணையடி யிமையவர்
தொழுதெழு மியல்பினாரே
3.091.2
சிறு அளவில் மதம் சொரியும் யானைக் கன்றுகளின் தந்தங்களையும், நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் ஆகிய பயன்தரக்கூடிய மரங்களையும் விழும்படி மோதி, அலைகளால் அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைத் தேவர்கள் தொழுது எழும் தன்மையர். 
3780 முத்துமா மணியொடு முழைவள
ராரமு முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி
சடைமுடி யடிகடம்மேல்
சித்தமா மடியவர் சிவகதி
பெறுவது திண்ணமன்றே
3.091.3
முத்து, மணி, குகைகளின் அருகில் வளரும் சந்தனமரம் இவற்றை வாரி, தள்ளி மோதும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பெருமை மிகுந்த பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து உள்ள சடைமுடி உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால் வழிபடும் அடியவர்கள் சிவகதி பெறுவது உறுதி. 
3781 கறியுமா மிளகொடு கதலியின்
பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி
தொழுதெழ மருவுமுள்ளக் 
குறியினா ரவர்மிகக் கூடுவார்
நீடுவா னுலகினூடே
3.091.4
உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும் கலந்து தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும் குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம் உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து மேன்மையுடன் மகிழ்ந்திருப்பர். 
3782 கோடிடைச் சொரிந்ததே னதனொடுங்
கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப்
பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா
ரிடமெனப் பேணினாரே
3.091.5
மரக்கிளைகளில் சொரிந்த தேனோடு, மேகம் பெய்த முன்னீரும் கலக்கக் காட்டில் வசிக்கும் மயிலின் பீலியும், மலைச்சாரலில் விளையும் பண்டங்களும் உந்தித் தள்ளி ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை, பெருமையுடைய சடைமுடியுடைய தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்டுள்ளார். 
3783 கோலமா மலரொடு தூபமுஞ்
சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை 
நினையவல் வினைகள்வீடே
3.091.6
அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட்டதும், இனிய மாங்கனிகளை அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை நினைத்து போற்ற வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும். 
3784 நீலமா மணிநிறத் தரக்கனை
யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார்
வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே
யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை
யடைகுரங் காடுதுறையே
3.091.8
நீலமணிபோன்ற கருநிற அரக்கனான இராவணனை, இருபது கரத்தொடும் வாலினாற் இறுகக் கட்டிய வாலியார் வழிபடப் பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை, இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலமாகும். 
3785 பொருந்திறற் பெருங்கைமா வுரித்துமை
யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தநங்கனை யநங்கமா
விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண்
டோங்கிய வடிகளாரே
3.091.9
போர்செய்யும் தன்மையுடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு உரித்து வியப்படையும்படி செய்தவர் சிவபெருமான். அவர் பெருந்திறமை மிக்க மன்மதனின் உடல் அழியுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்த பெருமையுடையவர். பலவிதப் பொருட்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான், பிரமனம், திருமாலும் தம்மைத் தேடித் துன்புறச்செய்து நெருப்பு மலையாய் ஓங்கி ஒளிர்ந்த தலைவராவார். 
3786 கட்டமண் டேரருங் கடுக்கடின்
கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும்
பெருவரைப் பண்டமுந்தி 
எட்டுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி
பெறுவது திண்ணமாமே
3.091.10
கடுக்காய்களைத் தின்கின்ற கழுக்களான கட்டுப்பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன இரக்கமின்றிக் கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய மலையிலுள்ள பொருள்களைத் தள்ளிப் பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும். 
3787 தாழிளங் காவிரி வடகரை
யடைகுரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு
சடைமுடிப் புண்ணியனைக்
காழியா னருமறை ஞானசம்
பந்தன கருதுபாடல்
கோழையா வழைப்பினுங் கூடுவார்
நீடுவா னுலகினூடே
3.091.11
பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வட கரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர். 
திருச்சிற்றம்பலம்

3.091.திருவடகுரங்காடுதுறை 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர். தேவியார் - சடைமுடியம்மை. 

3778 கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லைவேங்கையே ஞாழலே விம்முபாதிரிகளே விரவியெங்கும்ஓங்குமா காவிரி வடகரையடைகுரங் காடுதுறை வீங்குநீர்ச் சடைமுடி யடிகளாரிடமென விரும்பினாரே3.091.1
கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர். 

3779 மந்தமா யிழிமதக் களிற்றிளமருப்பொடு பொருப்பினல்லசந்தமா ரகிலொடு சாதியின்பலங்களுந் தகையமோதிஉந்துமா காவிரி வடகரையடைகுரங் காடுதுறைஎந்தையா ரிணையடி யிமையவர்தொழுதெழு மியல்பினாரே3.091.2
சிறு அளவில் மதம் சொரியும் யானைக் கன்றுகளின் தந்தங்களையும், நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் ஆகிய பயன்தரக்கூடிய மரங்களையும் விழும்படி மோதி, அலைகளால் அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைத் தேவர்கள் தொழுது எழும் தன்மையர். 

3780 முத்துமா மணியொடு முழைவளராரமு முகந்துநுந்திஎத்துமா காவிரி வடகரையடைகுரங் காடுதுறைமத்தமா மலரொடு மதிபொதிசடைமுடி யடிகடம்மேல்சித்தமா மடியவர் சிவகதிபெறுவது திண்ணமன்றே3.091.3
முத்து, மணி, குகைகளின் அருகில் வளரும் சந்தனமரம் இவற்றை வாரி, தள்ளி மோதும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பெருமை மிகுந்த பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து உள்ள சடைமுடி உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால் வழிபடும் அடியவர்கள் சிவகதி பெறுவது உறுதி. 

3781 கறியுமா மிளகொடு கதலியின்பலங்களுங் கலந்துநுந்திஎறியுமா காவிரி வடகரையடைகுரங் காடுதுறைமறியுலாங் கையினர் மலரடிதொழுதெழ மருவுமுள்ளக் குறியினா ரவர்மிகக் கூடுவார்நீடுவா னுலகினூடே3.091.4
உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும் கலந்து தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும் குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம் உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து மேன்மையுடன் மகிழ்ந்திருப்பர். 

3782 கோடிடைச் சொரிந்ததே னதனொடுங்கொண்டல்வாய் விண்டமுன்னீர்காடுடைப் பீலியுங் கடறுடைப்பண்டமுங் கலந்துநுந்திஓடுடைக் காவிரி வடகரையடைகுரங் காடுதுறைபீடுடைச் சடைமுடி யடிகளாரிடமெனப் பேணினாரே3.091.5
மரக்கிளைகளில் சொரிந்த தேனோடு, மேகம் பெய்த முன்னீரும் கலக்கக் காட்டில் வசிக்கும் மயிலின் பீலியும், மலைச்சாரலில் விளையும் பண்டங்களும் உந்தித் தள்ளி ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை, பெருமையுடைய சடைமுடியுடைய தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்டுள்ளார். 

3783 கோலமா மலரொடு தூபமுஞ்சாந்தமுங் கொண்டுபோற்றிவாலியார் வழிபடப் பொருந்தினார்திருந்துமாங் கனிகளுந்திஆலுமா காவிரி வடகரையடைகுரங் காடுதுறைநீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே3.091.6
அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட்டதும், இனிய மாங்கனிகளை அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை நினைத்து போற்ற வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும். 

3784 நீலமா மணிநிறத் தரக்கனையிருபது கரத்தொடொல்கவாலினாற் கட்டிய வாலியார்வழிபட மன்னுகோயில்ஏலமோ டிலையில வங்கமேயிஞ்சியே மஞ்சளுந்திஆலியா வருபுனல் வடகரையடைகுரங் காடுதுறையே3.091.8
நீலமணிபோன்ற கருநிற அரக்கனான இராவணனை, இருபது கரத்தொடும் வாலினாற் இறுகக் கட்டிய வாலியார் வழிபடப் பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை, இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலமாகும். 

3785 பொருந்திறற் பெருங்கைமா வுரித்துமையஞ்சவே யொருங்குநோக்கிப்பெருந்திறத் தநங்கனை யநங்கமாவிழித்ததும் பெருமைபோலும்வருந்திறற் காவிரி வடகரையடைகுரங் காடுதுறைஅருந்திறத் திருவரை யல்லல்கண்டோங்கிய வடிகளாரே3.091.9
போர்செய்யும் தன்மையுடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு உரித்து வியப்படையும்படி செய்தவர் சிவபெருமான். அவர் பெருந்திறமை மிக்க மன்மதனின் உடல் அழியுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்த பெருமையுடையவர். பலவிதப் பொருட்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான், பிரமனம், திருமாலும் தம்மைத் தேடித் துன்புறச்செய்து நெருப்பு மலையாய் ஓங்கி ஒளிர்ந்த தலைவராவார். 

3786 கட்டமண் டேரருங் கடுக்கடின்கழுக்களுங் கசிவொன்றில்லாப்பிட்டர்தம் மறவுரை கொள்ளலும்பெருவரைப் பண்டமுந்தி எட்டுமா காவிரி வடகரையடைகுரங் காடுதுறைச்சிட்டனா ரடிதொழச் சிவகதிபெறுவது திண்ணமாமே3.091.10
கடுக்காய்களைத் தின்கின்ற கழுக்களான கட்டுப்பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன இரக்கமின்றிக் கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய மலையிலுள்ள பொருள்களைத் தள்ளிப் பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும். 

3787 தாழிளங் காவிரி வடகரையடைகுரங்காடுதுறைப்போழிள மதிபொதி புரிதருசடைமுடிப் புண்ணியனைக்காழியா னருமறை ஞானசம்பந்தன கருதுபாடல்கோழையா வழைப்பினுங் கூடுவார்நீடுவா னுலகினூடே3.091.11
பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வட கரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.