LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-34

4.034.திருமறைக்காடு 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். 
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 
334 தேரையு மேல்க டாவித்
திண்ணமாத்தெழித்து நோக்கி
ஆரையு மேலு ணரா
வாண்மையான்மிக்கான் றன்னைப்
பாரையும் விண்ணு மஞ்சப்
பரந்ததோள்முடிய டர்த்துக்
காரிகை யஞ்ச லென்பார்
கலிமறைக்காட னாரே.
4.034.1
செழிப்பு மிக்கமறைக்காடனார், யாரையும் தனக்கு மேம்பட்டவராக மதிக்காதவனும் ஆளுந்தன்மையால் மேம்பட்டவனுமான இராவணன் கயிலாய மலைக்கு மேலும் தேரைச் செலுத்துமாறு தேரோட்டியை ஏவி அவன் அஃது இயலாமையைக் குறிக்க அவனை அதட்டிக் கடுமையாக நோக்கிக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் மண்ணும் விண்ணும் அஞ்சுமாறு பரந்த அவனுடைய தோள்களையும் முடிகளையும் நசுக்கிப் பார்வதியை அஞ்சேல் என்று அமைதியுறுத்தினார்.
335 முக்கிமுன் வெகுண் டெடுத்த
முடியுடை யரக்கர் கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி
நாண்மதி வைத்த வெந்தை
அக்கர வாமை பூண்ட
வழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகண் மோதுந்
திருமறைக் காட னாரே.
4.034.2
நீரைத் தம்மாட்டுக் கொள்கின்ற அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக்காடனார், தன் முழுவலியையும் பயன்படுத்தி முந்திக் கொண்டு கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த, முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய், பிறைசூடிய எம் தலைவராய், எலும்பு, பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
336 மிகப்பெருத் துலாவ மிக்கா
னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானு
மாண்மையான் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை
யூன்றலு மவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர்
நான்மறைக் காடு தானே.
4.034.3
மிகப்பெரிய உருவினனாய் எங்கும் சஞ்சரிப்பவனாய் உள்ள இராவணன் நகைத்துத் தேரோட்டியை அதட்டி, மலையை மேவித் தேரைச் செலுத்தென்று நிர்ப்பந்திக்க, அஃது இயங்காமையால் தன் மிக்க வலிமையை முழுதும் கொண்டு செலுத்தி மலையைப் பெயர்க்கத் தன் உடம்பினைச் செயற்படுத்திய அளவில் அவனை அவ்விடத்திலேயே சிரிக்கப்படுதலுக்கு உரியனாய் நசுக்கியவருடைய ஊர் நான்கு வேதங்களும் வழிபட்ட மறைக்காடாகும்.
337 அந்தரந் தேர்க டாவி
யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை
யூன்றலு மொள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும்
வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்
திருமறைக் காட னாரே.
4.034.4
வானத்திலே தேரைச் செலுத்தி அதன் செலவு தடைப்பட்ட அளவில் அதனைத் தடைப்படுத்தியவன் யாவன் என்று வினவிக் கோபத்தால் உந்தப்பட்டு இராவணன் அப்பெரிய கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில், அவன் உடம்பில் இணைந்த பத்துத்தலைகளும் வாய் திறந்து அலறித் தரையிலே சாயுமாறு திருமறைக்காடனார் திருவுள்ளத்தில் நினைத்துச் செயற்பட்டார்.
338 தடுக்கவுந் தாங்க வொண்ணாத்
தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக்
கையிரு பதுக ளாலும்
எடுப்பனா னென்ன பண்ட
மென்றெடுத் தானை யேங்க
அடுக்கவே வல்ல னூரா
மணிமறைக் காடு தானே.
4.034.5
விரைவாகப் புட்பகவிமானத்தைச் செலுத்திச் சென்ற வழியில் அதன் செலவினைக் கயிலை மலை தடுக்க அதனைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தால் மிக்க வலிமையை உடையவனாகி, 'இதுவும் ஒரு பண்டமா? இதோ கையால் பெயர்த்து எறிந்து விடுகிறேன்' என்று கயிலையைப் பெயர்த்த இராவணனை வருந்துமாறு செய்யவல்ல சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலம் அழகிய மறைக்காடு ஆகும்.
339 நாண்முடிக் கின்ற சீரா
னடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான்
கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரு
நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார்
தொன்மறைக் காட னாரே.
4.034.6
ஒவ்வொருநாளையும் முடிக்குஞ் சிறப்புடைய சூரியன் ஒடுங்கிக்கொண்டு இலங்கையின்மேல் செல்லாதபடி ஏனைய கிரகங்களையும் தன் ஆணைக்கு உட்படுத்திய செயலினனாய்க் கொடியவனாகிய இராவணன் தான் பெருவலிமை உடையவன் என்று செருக்கி நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமானுடைய மலையைப் பெயர்க்கத் தொடங்கிய அளவில் பழைய மறைக்காட்டுப் பெருமான் அவனுடைய தோள்களும் தலைகளும் நசுங்குமாறு செய்துவிட்டார்.
340 பத்துவா யிரட்டிக் கைக
ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த
பொருவலி யரக்கர் கோனைக்
கத்திவாய் கதற வன்று
கால்விர லூன்றி யிட்டார்
முத்துவாய் திரைகண் மோது
முதுமறைக் காட னாரே.
4.034.7
முத்துக்களைத் தம்மிடையே கொண்டனவாய் அலைகள் மோதும் பழைய மறைக்காட்டுப்பெருமான், பத்துவாய்களையும் இருபது கைகளையும் உடைய இராவணன் தான் மிக்கவலிமை உடையவன் என்ற செருக்கால் சத்தப்படாமல் தீவினைகள் செய்பவனாய்க் கயிலையைப் பெயர்த்தலாகிய தீவினையைச் செய்ய அவன் வாயினால் பெரிய குரலில் கதறுமாறு தம் கால்விரலால் அழுத்தி அவனை நசுக்கிவிட்டார்.
341 பக்கமே விட்ட கையான்
பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப்
போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு
வீரமு மிழந்த வாறே
நக்கன பூத மெல்லா
நான்மறைக் காட னாரே.
4.034.8
ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டுமறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.
342 நாணஞ்சு கைய னாகி
நன்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன் னிழந்து
பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தா(அ) னுணரா
நின்றெடுத் தானை யன்று
ஏணஞ்சு கைகள் செய்தா
ரெழின்மறைக் காட னாரே.
4.034.9
இருபது கையனாய்ப் பத்துத் தலைகளை உடைய இராவணன், நைந்து சாமகீதம் பாடும் எண்ணத்தை விடுத்து. தனக்குத் துணையாக உதவாத அறிவினால், பெரும்பயன் தரும் திருவைந் தெழுத்தைத் தியானம் செய்யாது, கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக, இனி இந்தக் கைகள் எழுச்சியோடு எந்தச் செயலையும் செய்ய முடியாது போய்விடுமோ என்று அவன் அஞ்சுமாறு அழகிய மறைக்காடனார் அவன் கைகளை நசுக்கினார்.
343 கங்கைநீர் சடையுள் வைக்கக்
காண்டலு மங்கை யூடத்
தென்கையான் றேர்க டாவிச்
சென்றெடுத் தான்ம லையை
முன்கைமா நரம்பு வெட்டி
முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவா ளருளி னானூ
ரணிமறைக் காடு தானே.
4.034.10
கங்காதேவியைச் சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில், தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக, பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க, அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாளினை அருளினார். அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும்.

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.