LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-61

4.061.திருஇராமேச்சுரம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர். 
தேவியார் - பர்வதவர்த்தனி. 
588 பாசமுங் கழிக்க கில்லா
வரக்கரைப்படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு
மதியினான்மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே
நினைமினீர்நின்று நாளும்
தேசமிக் கானி ருந்த
திருவிரா மேச்சுரம்மே.
4.061.1
நீக்க வேண்டிய பாசத்தை நீக்கும் ஆற்றல் இல்லாத அரக்கர்களை அழித்து மேம்பட்ட சிவஞானத்தால் இராமனாய் அவதரித்த திருமால் அமைத்த கோயிலிலே ஒளிமிக்க சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திரு இராமேச்சுரத்தை வாசனை மிக்க பூக்களை அர்ப்பணித்து நாள்தோறும் நிலையாகப்பற்றுமிகுந்த அன்போடு எல்லீரும் விருப்புற்று நினையுங்கள்.
589 முற்றின நாள்க ளென்று
முடிப்பதேகார ண(ம்)மாய்
உற்றவன் போர்க ளாலே
யுணர்விலாவரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயி
றிருவிரா மேச்சுரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே
படர்சடையீசன் பாலே.
4.061.2
நெஞ்சே! அரக்கர்கள் உயிர்வாழ்வதற்கு வகுத்த நாள்கள் முடிந்து விட்டதனால் அவர்களை அழிப்பதனையே காரணமாகக் கொண்டு ஏற்பட்ட வலியபோரினால் மெய்யுணர்வு இல்லாத அரக்கர்களை அழித்த இராமன் ஆகிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை உகந்தருளியிருக்கும், பரவிய சடையை உடைய சிவபெருமானிடத்துப் பற்றினைக் கொண்டு நீ முன் நின்று போற்றுவாயாக.
590 கடலிடை மலைக டம்மா
லடைத்துமால்கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயிற்
றிருவிரா மேச்சுரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற்
சுழல்கின்றேன்தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா
வைவராட் டுண்டுநானே.
4.061.3
கடலிடத்தை மலைகளால் அடைத்துத் திருமால் தம் செயலை முடித்துப் பின் கடலை அடுத்த மேட்டில் செய்த இராமேச்சுரத்தை, இவ்வுடம்பினின்றும் நீங்காத ஐம்பொறிகளால் தம் விருப்பப்படி செயற்படுத்தப்பட்டு தூய்மையின்றி, நாவிடைவைத்துப் போற்று தலைச் செய்து தடுமாறுகின்றேன். (நாவில் தொடல் இடை - வாக்கு.)
591 குன்றுபோற் றோளு டைய
குணமிலா வரக்கர்தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால்
வேட்கையாற்செய்த கோயில்
நன்றுபோ னெஞ்ச மேநீ
நன்மையை யறிதி யாயில்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்
திருவிரா மேச்சுரம்மே.
4.061.4
நெஞ்சமே! நீ நன்மையை அறிவாயானால் மலைகளைப்போன்ற தோள்களையுடைய நற்பண்பு இல்லாத அரக்கர்களைக் கொன்று போரிடும் சக்கராயுதத்தை உடைய திருமால் விருப்பத்தோடு அமைத்த இராமேச்சுரக் கோயிலை, சென்று தொழுது கடைத்தேறுவாயாக. அறியாயாயின் நின் நிலை நன்றல்ல. (நன்று போல்).
592 வீரமிக் கெயிறு காட்டி
விண்ணுற நீண்டரக்கன்
கூரமிக் கவனைச் சென்று
கொன்றுடன்கடற்ப டுத்துத்
தீரமிக் கானி ருந்த
திருவிரா மேச்சுரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற்
கூடுவார்குறிப்பு ளாரே.
4.061.5
கடலைச் சேது கட்டித்தடுத்து, வீரம் மேம்பட்டுக் கோரைப் பற்களை வெளியே காட்டிக் கொண்டு வானளாவ உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குச் சென்று அங்கே கொன்று, மீண்டு பேராற்றலுடைய திருமால் கோயில் செய்து வழிபட்டிருந்த இராமேச்சுரத்தை, அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைவார் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர்.
593 ஆர்வல நம்மின் மிக்கா
ரென்றவவ்வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப்
பொருதவர்தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய்
திருவிரா மேச்சுரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ
செஞ்சடை யெந்தைபாலே.
4.061.6
மட நெஞ்சமே! 'நம்மை விட வலிமை மிக்கவர்யாவர்' என்று செருக்குற்ற அவ்வரக்கர்கள் ஒன்று கூடிப் போரிலே வெற்றியைக் கருதி வலிமைமிக்குப் போரிட்டாராக, அவர்களை அழித்து அவர்களுடைய தேர்ப்படையின் வலிமையையும் போக்கிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை அணுகிச் செஞ்சடைப் பெருமான்பால் அடைவாயாக.
594 வாக்கினா லின்பு ரைத்து
வாழ்கிலார்தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள்
உயிர்தனை யுண்டுமாறான்
தேக்குநீர் செய்த கோயி
றிருவிரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க
ணோய்வினை நுணுகு மன்றே.
4.061.7
இனிமையாகப் பேசுதற்கு அமைந்த வாயாலே இனிய சொற்களைப் பேசி வாழாத அரக்கர்களை அழிக்கத்தக்க படைகளால் தாக்கி அவர்கள் உயிரை உண்டு திருமால் கடல் நீரைத் தேக்கிய அணையின் கரையில் அமைத்த கோயிலாகிய இராமேச்சுரத்தை அகநோக்கிலும் புறநோக்கிலும் கண்டு தரிசித்துத் தலையால் வணங்குபவருடைய நோய்களும் வினைகளும் அழிந்துவிடும்.
595 பலவுநா டீமை செய்து
பார்தன்மேற்குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய
வரக்கரைக்கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயி
றிருவிரா மேச்சுரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள்
தாழ்வராந்தவம தாமே.
4.061.8
பலகாலமாக இவ்வுலகில் கூட்டமாகத் தோன்றித் தீமைகளையே செய்து கொல்லும் வில்லை ஏந்திய கொடியவர்களான அரக்கர்களைக் கொன்று வீழ்த்திய வில்லை ஏந்திய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தலையினால் வணங்கும் அடியவர்கள் பின் உடம்பாலும் முழுமையாக விழுந்து வணங்குவார்கள். அச்செயல் தவப் பயனால் நிகழ்வதாகும்.
596 கோடிமா தவங்கள் செய்து
குன்றினார்தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தா
லெறிந்துபின்னன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயி
றிருவிரா மேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ
நன்னெறியாகு மன்றே.
4.061.9
நெஞ்சே! பல ஆண்டுகள் சிறந்த தவத்தைச் செய்து, ஒழுக்கக் கேடு உள்ள அரக்கர்களை எல்லாம் அவர்கள் அழியுமாறு சக்கரம் முதலிய படைகளால் அழித்துப் பின்தக்க இடத்தைத் தேடித் திருமால் அமைத்த இராமேச்சுரத்தை நீ விரும்பிச் சென்று வாழ்தி. அதுவே உனக்கு நன்னெறியாம்.
597 வன்கண்ணர் வாள ரக்கர்
வாழ்வினையொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று
போர்கள்செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயி
றிருவிரா மேச்சுரத்தைத்
தங்கணா லெய்த வல்லார்
தாழ்வராந்தலைவன் பாலே.
4.061.10
அகத்தில் உள்ள வன்மையைப் புறத்தில் காட்டும் கண்களை உடைய கொடிய அரக்கர்கள் வாழும் செயலை அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய, அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்கும் நற்பேறு உடையவர்கள் சிவபெருமான் பக்கலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர்.
598 வரைகளொத் தேயு யர்ந்த
மணிமுடி யரக்கர்கோனை
விரையமுற் றறவொ டுக்கி
மீண்டுமால்செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந்
திருவிரா மேச்சுரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பா
ருள்குவா ரன்பினாலே.
4.061.11
மலைகளை ஒத்து உயர்ந்த, மணிகள் வைத்து இழைக்கப்பட்ட கிரீடங்களை உடைய அரக்கர் தலைவனான இராவணனை விரைவாக அடியோடு அழித்துத் தமிழகம் திரும்பித் திருமால் செய்த கோயிலாய் அலைகள் முத்துக்களைச் சமர்ப்பித்து வணங்கும் திரு இராமேச்சுரத்தை முன்னைய இப்பத்துப் பாடல்களாலும் போற்றுபவர்கள் அன்பினாலே தியானித்து நற்பேறு பெறுபவராவர்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.