LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-63

4.063.திருவண்ணாமலை 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர். 
தேவியார் - உண்ணாமுலையம்மை. 
609 ஓதிமா மலர்கள் தூவி
யுமையவள் பங்காமிக்க
சோதியே துளங்கு மெண்டோட்
சுடர்மழுப்படையு னானே
ஆதியே யமரர் கோவே
யணியணா மலையுளானே
நீதியா னின்னை யல்லா
னினையுமா நினைவிலேனே.
4.063.1
பார்வதிபாகனே! மேம்பட்ட சோதியே! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே! மழுப்படையை ஏந்தியவனே! ஆதியே! தேவர்கட்குத்தலைவனே! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றிநினையேன்.
610 பண்டனை வென்ற வின்சொற்
பாவையோர்பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்
கடவுளே கமலபாதா
அண்டனே யமரர் கோவே
யணியணா மலையுளானே
தொண்டனே னுன்னை யல்லாற்
சொல்லுமாசொல்லி லேனே.
4.063.2
பண்ணை வென்ற இனிய சொல்லையுடைய பார்வதிபாகனே! நீலகண்டனே! கார்காலத்தில் மலரும் கொன்றைப் பூவை அணிந்த கடவுளே! தாமரை போன்ற திருவடிகளை உடையவனே! தேவனே! தேவர்கள் தலைவனே! அழகிய அண்ணா மலையில் உள்ளவனே! அடியவனாகிய யான் உன்னைத் தவிரப் பிறரை உயர்த்திச் சொல்லும் சொற்களைச் சொல்லுவேன் அல்லேன்.
611 உருவமு முயிரு மாகி
யோதியவுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம்பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா
மலையுளா யண்டர்கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொருமாடி லேனே.
4.063.3
சடமாகிய மாயையாகவும், சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூல கருமமும் பிறப்பும் பிறப்பிலிருந்து விடுதலையுமாய் நின்ற எம் பெருமானே! நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ளதேவர் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றைத் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.
612 பைம்பொனே பவளக் குன்றே
பரமனேபால்வெண் ணீறா
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியேமிக்க
அம்பொனே கொழித்து வீழு
மணியணா மலையுளானே
என்பொனே யுன்னை யல்லா
லேதுநா னினைவிலேனே.
4.063.4
பசிய பொன்னே! பவளமலையே! மேம்பட்டவனே! பால்போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே! செம்பொன்னே! மலர் போன்ற திருவடிகளை உடையவனே! சிறப்பு மிக்கமாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே! உன்னைத்தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன்.
613 பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர்பாகா
மறைவலா விறைவா வண்டார்
கொன்றையாய்வாம தேவா
அறைகழ லமர ரேத்து
மணியணா மலையுளானே
இறைவனே யுன்னை யல்லால்
யாதுநா னினைவிலேனே.
4.063.5
பிறையைச் சூடிய சடைமுடியை உடையவனே! தலைக்கோலம் அணிந்தவனே! பார்வதிபாகனே! வேதங்களில் வல்லவனே! தலைவனே! வண்டுகள் பொருந்திய கொன்றைமலரைச் சூடியவனே! வாமதேவனே! ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைத் தேவர்கள் போற்றும் அழகிய அண்ணாமலையில் உறைபவனே! அடியேன் உளத்தில் தங்கியிருப்பவனே! உன்னைத்தவிர அடியேன் வேறு எந்தப் பொருளையும் விருப்புற்று உறுதியாக நினைப்பேன் அல்லேன்.
614 புரிசடை முடியின் மேலோர்
பொருபுனற்கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்
கருதிய காலகாலா
அரிகுல மலிந்தவண்ணா
மலையுளா யலரின்மிக்க
வரிமிகு வண்டுபண்செய்
பாதநான்மறப்பிலேனே.
4.063.6
முறுக்குண்ட சடையின் மீது அலைகள்மோதும் நீரை உடைய கங்கையை வைத்து. யானைத் தோலைமேற் போர்வையாகக் கொண்டவனாய்க் காலனுக்கும் காலனானவனே! குரங்குக் கூட்டங்கள் மிக்க அண்ணாமலையில் உறைவோனே! மலரினும் மேற்பட்ட, கோடுகளை உடைய வண்டுகள் பண்பாடும் உன் திருவடிகளை அடியேன் மறத்தலைச் செய்யேன்.
615 இரவியு மதியும் விண்ணு
மிருநிலம் புனலுங்காற்றும்
உரகமார் பவன மெட்டுந்
திசையொளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள்சோதி
யணியணா மலையுளானே
பரவுநின் பாதமல்லாற்
பரமநான் பற்றிலேனே.
4.063.7
பரமனே! சூரியன், சந்திரன், வானம், பூமி, நீர் காற்று, பாம்புகள் தங்கும் பாதலம், எண் திசைகள் இவற்றிலே ஒளி உருவமாக இருப்பவனே! பாம்புகள் உமிழ்கின்ற இரத்தினங்களால் ஒளிவீசும் அழகிய அண்ணாமலைப் பெருமானே! அடியேன் முன் நின்று போற்றும் உன் திருவடிகளைத் தவிர அடியேன் வேறு பற்றுக்கோடு உடையேன் அல்லேன்.
616 பார்த்தனுக் கன்று நல்கிப்
பாசுப தத்தையீந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை
நெடுமுடி நிலாவவைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்ட
லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்
திறமலாற்றிறமி லேனே.
4.063.8
அருச்சுனனுக்கு அக்காலத்தில் விரும்பிப் பாசுபதப் படையை நல்கியவனே! நீர் ததும்புதல் மிகுங் கங்கையை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே! ஆரவாரித்துக் கொண்டு ஒன்று சேரும் மேகங்கள் தங்கும் அழகிய அண்ணாமலைப் பெருமானே! தூயோனே! உன்பாதங்களின் தொடர்பன்றி அடியேன் வேறு தொடர்பு இல்லேன்.
617 பாலுநெய் முதலா மிக்க
பசுவிலைந் தாடுவானே
மாலுநான் முகனுங் கூடிக்
காண்கிலாவகையு ணின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூக
மணியணா மலையுளானே
வாலுடை விடையா யுன்றன்
மலரடி மறப்பிலேனே.
4.063.9
பசுவின் பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் தீத்தம்பமாய் நின்றவனே! நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணாமலையில் உள்ளவனே! வெண்மையை உடைய காளைவாகனனே! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன்.
618 இரக்கமொன் றியாது மில்லாக் 
காலனைக் கடிந்தவெம்மான்
உரத்தினால் வரையை யூக்க 
வொருவிர னுதியினாலே
அரக்கனை நெரித்த வண்ணா 
மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் 
திருவடி மறப்பிலேனே.
4.063.10
இரக்கம் என்பது சிறிதும் இல்லாத கூற்றுவனைத் தண்டித்த பெருமானே! இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க, ஒரு விரல் நுனியினாலே அவனை நெரித்த அண்ணாமலைத் தேவர் தலைவனே! உன்னை அடியேன் தலையால் வணங்கி வாயால் துதித்து மனத்தால் உன் திருவடிகளை மறவாதேனாய் உள்ளேன்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.