LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-84

4.084.ஆருயிர்த் திருவிருத்தம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
801 எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை
வாமுறையென்
றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட்
டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு
மோரம்பினால்
அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.1
கிழக்கு தென்கிழக்கு முதலிய எட்டுத்திசைகளொடு மேல் கீழ் ஆக இருதிசைகள் ஆகப் பத்துத்திசைகளுக்கும் தலைவனே! 'எங்களைத் திரிபுரத்து அசுரர்களிடமிருந்து காத்தல் நினக்கே உரிய செயலாகும்' என்று தேவர்கள் வேண்டிய கூக்குரலைக் கேட்டுத் தீப்போல விழித்துத் தங்களோடு நட்புறவினால் பொருந்தாத கீழ்மக்களுடைய வானத்தில் உலவும் மும்மதில்களையும் ஓரம்பினால் அழித்தசிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ என் அரிய உயிர் தங்கியுள்ளது.
802 பேழ்வா யரவி னரைக்கமர்ந் தேறிப்
பிறங்கிலங்கு
தேய்வா யிளம்பிறை செஞ்சடை மேல்வைத்த
தேவர்பிரான்
மூவா னிளகான் முழுவுல கோடுமண்
விண்ணுமற்றும்
ஆவா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே
4.084.2
பிளந்த வாயை உடைய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி, ஒளிவீசும் உருத்தேய்ந்த இளம் பிறையைச் சிவந்த சடையின்மேல் வைத்த தேவர் பிரானாய், மூப்பும் இளமையும் இலாது என்றும் ஒரே நிலையனாய், இந்நிலவுலகும் தேவருலகும் மற்ற உலகங்களுமாகி உள்ள சிவபெருமானுடைய திருவடி நிழலின்கீழ் அல்லவோ அடியேனது அரிய உயிர் நிலைத்துள்ளது.
803 தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி
தகர்த்துகந்த
எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை
யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந்
தன்பிறப்பை
அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.3
தாங்குதற்கரிய சினம் கொண்டு தக்கன் செய்த வேள்வியினை அழித்து மகிழ்ந்தவனாய், நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கிய சூலப்படையை உடையவனாய், இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய பெரியவனாய், மேம்பட்ட அடியார்களின் பிறவித்தொடர்பை அறுப்பவனாய், தான் பிறவா யாக்கைப் பெரியோனாய் இருக்கும் சிவபெருமானுடைய அடி நிழல் கீழது எம் ஆருயிரே. (பிறப்பை + அறியான் பிறத்தலை இல்லாதவன். அருமை - இன்மை.)
804 வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையொர்
பான்மகிழ்ந்து
வெடிகொ ளரவொடு வேங்கை யதள்கொண்டு
மேன்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங்
கொன்றையந்தார்
அடிக ளடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.4
பேரழகுடைய, மாவடு போன்ற மையுண்ட கண்களை உடைய பார்வதியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, பொந்து களை இருப்பிடமாகக் கொண்ட பாம்பினை வேங்கையின் தோலாகிய ஆடைமேல் இறுகச் சுற்றி, மேலே பூசப்பட்ட நீற்றின்மீது பொன்னைச் சிதறவிட்டாற்போன்றபசிய கொன்றைமாலையை அணிந்த சிவ பெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
805 பொறுத்தா னமரர்க் கமுதருளி நஞ்ச
முண்டுகண்டம்
கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை
செஞ்சடைமேல்
செறுத்தான் றனஞ்சயன் சேணா ரகலங்
கணையொன்றினால்
அறுத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.5
தேவர்களுக்கு அமுதம் வழங்க விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருந்தி நீலகண்டனாய் அந்தக் கறுப்பினைத் தனக்கு அழகாகக் கொண்டவனாய், கங்கையைச் சிவந்த சடைமீது அடக்கினவனாய், அருச்சுனனுடைய பரந்த மார்பினை அம்புஒன்றினால் புண்படுத்திய சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
806 காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக்
காலொன்றினால்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னு
மொள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க
விழுமியநூல்
ஆய்ந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.6
மார்க்கண்டேயன் எமனாற் பகைத்துயிர் கவரப்படுதற்குரியனல்லன் என்று அவனைக் கோபித்தவனாகிய கூற்றுவனைத் திருவடி ஒன்றினால் பாய்ந்துதைத்தான். பெரிய மதில்கள்மூன்றனையும் அம்பு என்ற ஒள்ளிய தீயினில் மூழ்கிச் சாம்பலாகச் செய்து, இடமகன்ற ஏழுலங்களும் விளங்கும்படியாக மேம்பட்ட நூல்களை ஆய்ந்துள்ள சிவபெருமான் அடிநீழற் கீழதல்லவோ எனதாருயிர்.
807 உளைந்தான் செறுதற் கரியான் றலையை
யுகிரொன்றினால்
களைந்தா னதனை நிறைய நெடுமால்
கணார்குருதி
வளைந்தா னொருவிர லின்னொடு வீழ்வித்துச்
சாம்பர்வெண்ணீ
றளைந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.7
பிரமனுடைய தவறான செயலைக் கண்டு வருந்தினனாய், அச்செயலுக்கு உரிய ஒறுப்புக்காக வெல்லுதற்கு அரிய அவன் தலையைநகம் ஒன்றினால் நீக்கியவனாய், அம்மண்டையோடு நிறையுமாறு திருமாலுடைய உடம்பிலுள்ள குருதியை நிரப்பினனாய் ,இராவணனை ஒருவிரலை அழுத்திக் கயிலைமலை யின் கீழ் விழச் செய்தவனாய், சாம்பலாகிய நீற்றினை உடல் முழுதும் பூசியவனுமான சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
808 808முந்திவட் டத்திடைப்பட்டதெல் லாமுடி
வேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற்
கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும்
நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்த்தென்
னாருயிரே
4.084.8
என் இந்த வாழ்க்கையின் முற்பகுதியில் யான் செய்தனவற்றைஎல்லாம் உட்கொண்டு அரசர்களுடைய பரிசனங்களாகிய தொகுதியினரிடம் அகப்பட்டு அவர்களால் பலவகையாகத் துன்புறுத்தப்படுவதற்கு அஞ்சிப் போலும் நந்தியா வட்டப்பூவும் கொன்றைப்பூவும் ஒளிவீசும் சென்னியும் மாலை வானம் போன்ற செம்மேனியுமுள்ள அம்மானுடைய அடிநிழலைச் சேர்ந்தது என் ஆருயிர்.
809 மிகத்தான் பெரியதொர் வேங்கை யதள்கொண்டு
மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப்
பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப்
பானிசைந்த
அகத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.9
மிகப்பெரிய வேங்கையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திப் பார்வதியை உள்ளம் அஞ்சி நடுங்கச் செய்பவனாய்த் தன்னை நோக்கி வந்த பொன் போன்ற பொலிவை உடைய கங்கையைத் தன் சடையில் முகந்து கொண்டதால் சடை குளிர அதனால் மனத்தில் மகிழ்வெய்தியவனாய், என்னை அடிமையாக ஏற்றுக் கொள்ள இசைந்தசிவபெருமானுடைய அடிநிழல் கீழது அல்லவோ எனதாருயிர்.
810 பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி
யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட
கடவுண்முக்கண்
எம்மா னிவனென் றிருவரு மேத்த
வெரிநிமிர்ந்த
அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.10
படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலைஉடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமானும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர்.
811 பழகவொ ரூர்தியரன் பைங்கட் பாரிடம்
பாணிசெய்யக்
குழலு முழவொடு மாநட மாடி
யுயரிலங்கைக்
கிழவ னிருபது தோளு மொருவிர
லாலிறுத்த
அழக னடிநிழற் கீழதன் றோவென்ற
னாருயிரே.
4.084.11
ஊர்ந்து செலுத்தக் காளையை வாகனமாக உடையவனாய், தீயவர்களை அழிப்பவனாய், பூதங்கள் தாளம் போடக் குழலும் முழவும் ஒலிக்க மேம்பட்ட கூத்து நிகழ்த்துபவனாய், மேம்பட்ட இலங்கை அரசனாகிய இராவணனுடைய இருபது தோள்களையும் தன் திருவடியின் ஒருவிரலால் நெரித்த அழகனாகிய சிவபெருமானுடைய அடிநிழலின் கீழல்லவோ அடியேனடைய அரிய உயிர் பாதுகாவலாக உள்ளது.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.