LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-28

7.028.திருக்கடவூர்வீரட்டம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர். 
தேவியார் - அபிராமியம்மை. 
279 பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.
7.028.1
திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே, புரியாகிய நூல், ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற்பொருந்தி விளங்க, கூர்மை பொருந்திய முத்தலை வேல் (சூலம்) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லது வேறு யார் துணை!
280 பிறையா ருஞ்சடையாய் பிர
மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை
யின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கட
வூர்தனு வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.
7.028.2
பிறை பொருந்திய சடையை உடையவனே, பிரமன் தலையைக் கையில் ஏந்தி அதிற் பிச்சையை ஏற்கின்ற, வேதத்தை ஓதுகின்ற தேவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, நஞ்சு தங்கிய கண்டத்தை உடையவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை? 
281 அன்றா லின்னிழற்கீழ் அறம்
நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்
தாய்மறை யோனுக்குமான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.
7.028.3
மான் கன்று பொருந்திய கையை உடையவனே, திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே, நீ, அன்று ஆல் நிழலின்கண் இருந்து நால்வர் முனிவர்கட்கு அருள்பண்ணி, காலன் உயிரைக் கொன்ற வன்செயலையும் செய்தாய்; அந்தணச் சிறுவனுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுத்தாய்; இன்னதன்மையை உடைய நீயல்லாது வேறு யாவர் எனக்குத் துணை! 
282 போரா ருங்கரியின் னுரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா வென்னமுதே எனக்
கார்துணை நீயலதே.
7.028.4
போர்த் தொழில் பொருந்திய யானையின் தோலைப் பொன்போலும் மேனிமேல் போர்த்துக்கொண்டும், அம்மேனியின் ஒரு பாகத்தில் கச்சுப் பொருந்திய தனங்களையுடைய உமையை மகிழ்ந்து வைத்தும் உள்ளவனே, கருமை பொருந்திய கண்டத்தை உடையாய், திருக்கடவூரினுள் 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை! 
283 மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே. 7.028.5
கருமை பொருந்திய கண்டத்தையுடையவனே யானையின் தோலைப் போர்த்தவனே, கையின்கண் பொருந்திநிற்கும் படமெடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே, திருக்கடவூரினுள் 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம்போல்பவனே, நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய்; அங்ஙனம் புகுந்ததன்றி இதுகாறும் வெளிப் போந் தறியாய்; ஆதலின், எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை! 
284 மண்ணீர் தீவெளிகால் வரு
பூதங்க ளாகிமற்றும் 
பெண்ணோ டாணலியாய் பிற
வாவுரு வானவனே 
கண்ணா ருண்மணியே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே
எனக் கார்துணை நீயலதே.
7.028.6
'நிலம், நீர், தீ, காற்று, வானம்' என்று சொல்ல வருகின்ற பூதங்களாகியும், அப் பூதங்களாலாகிய, 'பெண், ஆண், அலி' என்னும் உடம்புகளோடு காணப்படும் உயிர்களாகியும் அவற்றில் வேறற நின்று, நீ உருவங்கொள்ளுமிடத்து, யாதொரு பிறப்பினும் படாத திருமேனியைக் கொண்டு நிற்பவனே, கண்ணின் உள்ளாற் பொருந்தியுள்ள மணிபோல்பவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம்போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை! 
285 எரியார் புன்சடைமேல் இள
நாக மணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு
வெண்டலை கொண்டவனே
கரியா ரீருரியாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.
7.028.7
தீப்போலப் பொருந்தியுள்ள புல்லிய சடையின் மேல் இளமையான பாம்பை அணிந்தவனே, நரிகள் பொருந்திய சுடலைக்கண் உள்ள, சிரிக்கும் வெண்டலையைக் கையில் கொண்டவனே, யானையினிடத்துப் பொருந்தியிருந்து உரிக்கப்பட்ட தோலை உடையவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, எங்கள் அரிய பொருளானவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யார் துணை! 
286 வேறா உன்னடியேன் விளங்
குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவ
னேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்
கார்துணை நீயலதே.
7.028.8
ஒளி வீசுகின்ற குழையணிந்த காதினை உடையவனே, சிவனே, என்னுடைய செம்மையான விளக்கே, காறையாகப் பொருந்திய வெள்ளிய தந்தத்தை உடையவனே, திருக்கடவூரின்கண் உள்ள, 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சடையை உடையவனே, உன் அடியவனாகிய யான், உன்னையல்லது வேறுசிலர் கடவுளர் உளராக நினையேன்; ஆதலின், எனக்கு நீயல்லாது வேறு யார் துணை! 
287 அயனோ டன்றரியும் மடி
யும்முடி காண்பரிய
பயனே யெம்பரனே பர
மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.
7.028.9
முன்னொரு ஞான்று, பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடிப்போய்க் காணுதல் இயலாது நின்ற பொருளாய் உள்ளவனே, எங்கள் கடவுளே, மேலான ஒளிக்கும் மேலான ஒளியாய் இருப்பவனே, மிக்க நீர் பொருந்திய சடையை உடையவனே, திருக்கடவூரின்கண் உள்ள, 'திருவீரட்டானம், என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பிறப்பில்லாதவனே' என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யார் துணை! 
288 காரா ரும்பொழில்சூழ் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணை
யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்ட னுரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.
7.028.10
மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள, 'திருவீரட்டானம்' என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து, அழகிய திருநாவலூரில் தோன்றியவனும், திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின், சிவலோகத்தில் இருத்தல் திண்ணம். 

by   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.