LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-32

7.032.திருக்கோடிக்குழகர் 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அமுதகடநாதர். 
தேவியார் - மையார்தடங்கணம்மை. 
320 கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே. 7.032.1
கோடிக்குழகரே, அடிகளே, கடற்காற்றுக் கடிதாய் வந்து வீச, இக் கடற்கரையின்மேல், உமக்கு, யார் துணையாய் இருக்க இருக்கின்றீர்? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ? சொல்லீர். 
321 முன்றான்கடல் நஞ்சமுண் டவ்வத னாலோ
பின்றான்பர வைக்குப காரஞ்செய் தாயோ
குன்றாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
என்றான்றனி யேஇருந் தாய்எம்பி ரானே. 7.032.2
குறையாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையில் உள்ள அழகனே, எம்பெருமானே, முன்பு கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட அதனால், மீட்டும் அவ்வாறு தோன்றின் அதனை உண்டற்பொருட்டோ? அல்லது கடல் தனியே இருத்தல் கருதி அதற்குத் துணையிருத்தற் பொருட்டோ? எக்காரணத்தால் இங்கு நீ தனியே இருக்கின்றாய்? சொல். 
322 மத்தம்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
பத்தர்பலர் பாட இருந்த பரமா
கொத்தார்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
எத்தால்தனி யேஇருந் தாய்எம் பிரானே. 7.032.3
களிப்புடையவர் நிறையச் சூழ்ந்த திருமறைக் காட்டிற்குத் தென்பால், அடியார்கள் பலர் பாடித் துதிக்க எழுந்தருளியிருக்கும் பரமனே, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையின்கண் உள்ள அழகனே, எம்பெருமானே, எக்காரணத்தால் நீ இங்குத் தனியே இருக்கின்றாய்? சொல். 
323 காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக்
கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே. 7.032.4
கோடிக்கரைக்கண் உள்ள அழகனே! இங்குள்ள காடோ மிகப் பெரிது; எப்பொழுதும் உன் தேவி அச்சங்கொள்ளுமாறு மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடிக் கூக்குரலிடுதல் இடையறாது; வேட்டைத் தொழில் செய்து இங்கு வாழ்பவர் மிகவுங் கொடியவர்; வஞ்சனையுடையவர்; இவ்விடத்தில் உறைவிடத்தைக் கொண்டாயே; இஃது என்? 
324 மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே. 7.032.5
மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே, 'கங்கை' என்பவளும் உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறிடம் இல்லை; இங்ஙனமாக, கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகாளோடும் கூடி, பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளையுடைய கோடிக்கரையையே உறைவிடமாகக் கொண்டாய்; இஃது எவ்வாறு? 
325 அரவேரல்கு லாளையொர் பாக மமர்ந்து
மரவங்கமழ் மாமறைக் காடதன் தென்பால்
குரவம்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இரவேதுணை யாயிருந் தாய்எம்பி ரானே. 7.032.6
குங்கும மரத்தின் பூக்கள் மணம் வீசுகின்ற பெருமை பொருந்திய திருமறைக்காட்டிற்குத் தென்பால் குராமரச் சோலை சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே, 
326 பறையுங்குழ லும்மொலி பாடல் இயம்ப
அறையுங்கழ லார்க்கநின் றாடும் அமுதே
குறையாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இறைவாதனி யேஇருந் தாய்எம்பி ரானே. 7.032.7
பறையும், குழலும், ஒலிக்கின்ற பாடலும் முழங்க, ஒலிக்கின்ற கழல் ஆரவாரிக்கும்படி அம்பலத்தில் தோன்றி நின்று ஆடுகின்ற அமுதம்போல்பவனே, றைதல் இல்லாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, இறைவனே, எம்பெருமானே, நீ ஏன் இங்குத் தனியாய் இருக்கின்றாய்? 
327 ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே. 7.032.8
முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே, ஒற்றி என்ற குறையினால் ஒற்றியூரையும், ஆருடையது என்ற காரணத்தால் ஆருரையும் அறுதியாக நீங்கிவிட்டாயோ? எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்? 
328 நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான்பலி கொள்ளு மிடங்குடி யில்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள்அன்ப தாய்இடங் கோயில்கொண் டாயே. 7.032.9
திருமாலும் பிரமனும்அறிய இயலாத தன்மையை உடையவனே, தலைவனே, நீ பிறரது வழிபாட்டினை ஏற்க நினைக்குமிடத்து, அதனைச் செய்தற்கு இங்கு நற்குடி ஒன்றேனும் இல்லை; அதற்கு மாறாக கொடிய வேடர்கள் பலர் வாழ்கின்றனர்; இத்தன்மையதான இக்கடற்கரைமேல் விருப்பம் உடையையாய், இவ்விடத்தை உறைவிடமாகக் கொண்டாயே; இஃது என்? 
329 பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே. 7.032.10
உலகில் உள்ள ஊர்களில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தென்பால், அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர், சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களேயாவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.