LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-33

7.033.நமக்கடிகளாகிய - அடிகள் 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
330 பாறு தாங்கிய காட ரோபடு
தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.
7.033.1
தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் வாழ்பவரோ? அழிந்த தலையை ஏந்தியவரோ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ? குழையணிந்த காதினை உயைவரோ? சிறிய கொம்பினையுடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ? சுடப்பட்ட நீற்றை அணிந்தவரோ? விளங்குகின்ற பிறையோடு ஆற்றைச் சுமந்த சடையை உடையவரோ? சொல்லுமின். 
331 இட்டி தாகவந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.
7.033.2
இறைவரை உமக்கு ஏற்றவாற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே, அருகில் வந்து சொல்லுமின்; நமக்குத் தலைவராகிய தலைவர், கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக்கொண்டு வாழ்வது பாம்போ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற கரந்தையோ? அவர், தொழுவிற் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலையில் பிச்சையேற்றுக்கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ? 
332 ஒன்றி னீர்கள்வந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
குன்றி போல்வதோர் உருவ ரோகுறிப்
பாகி நீறுகொண் டணிவரோ
இன்றி யேஇல ராவரோ அன்றி
உடைய ராய்இல ராவரோ
அன்றி யேமிக அறவ ரோநமக்
கடிக ளாகியஅடிகளே.
7.033.3
இறைவரை உமக்கு ஏற்ற வகையில் நினைந்து துதிக் கின்றவர்களே, நீங்கள் ஒன்றுபட்டு வந்து சொல்லுங்கள், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், குன்றிமணி போலும் நிறம் உடையவரோ? நீற்றையே குறிக்கோளாகக் கொண்டு அணிவரோ? யாதொன்றும் இலராய் இரத்தல் தொழிலைச் செய்வரோ? மற்று எல்லாம் உடையராய் இருந்தும் இரத்தல் தொழிலைச் செய்வரோ? இவையன்றி, துறவறத்தை மிக உடையரோ? 
333 தேனை யாடுமுக் கண்ண ரோமிகச்
செய்ய ரோவெள்ளை நீற்றரோ
பானெய் யாடலும் பயில்வ ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரே
மானை மேவிய கண்ணி னாள்மலை
மங்கை நங்கையை அஞ்சவோர்
ஆனை ஈருரி போர்ப்ப ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.
7.033.4
தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், மூன்று கண்களை உடையவரோ? மிகச் சிவந்தநிறம் உடையவரோ? வெண்மையான நீற்றை அணிந்தவரோ? பால், நெய், தேன் இவைகளை ஆடுதலையும் பலகாற் செய்வரோ? தம்மையே துணையாகப் பற்றி நிற்பவர்க்கு நல்லவரோ? மானை நிகர்த்த கண்களை உடையவளாகிய, மகளிருட் சிறந்த மலைமங்கையை அஞ்சுவித்தற்பொருட்டு ஓர் ஆனையை உரித்த தோலைப் போர்த்துக்கொண்டிருப்பரோ? சொல்லுமின். 
334 கோணன் மாமதி சூட் ரோகொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக
கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.
7.033.5
தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், வளைந்த பெருமை பொருந்திய பிறையைத் தலையிற் சூடுதல் உடையவரோ? 'கொடுகொட்டி' என்னும் கூத்தினை ஆடுபவரோ? காலில் ஒரு கழலை அணிவரோ? அவரது இசைக் கருவி வீணைதானோ? அவர் ஏறுவது விடையோ? அவர் வேதத்திற்குத் தலைவரோ? அரை நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ? சொல்லுமின். 
335 வந்து சொல்லுமின் மூட னேனுக்கு
வல்ல வாநினைந் தேத்துவீர்
வந்த சாயினை யறிவ ரோதம்மை
வாழ்த்தி னார்கட்கு நல்லரோ
புந்தி யாலுரை கொள்வ ரோஅன்றிப்
பொய்யின் மெய்யுரைத் தாள்வரோ
அன்றி யேமிக அறிவ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.
7.033.6
இறைவரை நீர் வல்லவாற்றால் நினைந்து துதிக் கின்றவர்களே, யாதும் அறியாதேனாகிய எனக்கு நீங்கள் அருகில் வந்து சொல்லுங்கள்; நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் நமக்கு வருகின்ற மெலிவை அறிந்து தீர்ப்பரோ? தம்மை வாழ்த்துகின்றவர்கட்கு நலம் செய்வரோ? மனத்தொடு பொருந்தச் சொல்லுதலையே ஏற்பரோ? மற்றும் தாமும் பொய்யில்லாத மெய்யையே சொல்லி நம்மை ஆட்கொள்வரோ? அதுவன்றி அறிவை மிக உடையரோ? சொல்லுமின். 
336 மெய்யென் சொல்லுமின் நமரங் காள்நுமக்
கிசைவு மாநினைந் தேத்துவீர்
கையிற் சூலம துடைய ரோகரி
காட ரோகறைக் கண்டரோ
வெய்ய பாம்பரை யார்ப்ப ரோவிடை
யேற ரோகடை தோறுஞ்சென்
றையங் கொள்ளுமவ் வடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.
7.033.7
இறைவரை உமக்கு ஏற்குமாற்றால் நினைந்து துதிப் பீராகிய நம்மவர்களே! நீவிர் அறிந்த உண்மைகள் யாவை? அவற்றைச் சொல்லுமின்; நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், கையில் சூலம் உடையரோ? கரிந்த காட்டில் வாழ்வரோ? கறுப்பை உடைய கண்டத்தை உடையரோ? கொடிய பாம்பை அரையிற் கட்டுவரோ? விடையை ஏறுதல் உடையரோ?இல்லத்து வாயில்தோறும் சென்று பிச்சை ஏற்கின்ற, பற்றில்லாத துறவரோ? 
337 நீடு வாழ்பதி யுடைய ரோஅயன்
நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடு வாரையும் உடைய ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
காடு தான் அரங் காக வேகைகள்
எட்டி னோடில யம்பட
ஆடு வாரெனப் படுவ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.
7.033.8
தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், எஞ்ஞான்றும் ஒருதன்மையாய் வாழ்தற்குரிய உலகத்தை உடையரோ? 'பிரமன், நெடியோனாகிய மாயோன்' என்னும் இவர்கட்கும் பெரியரோ? தம்மைப் புகழ்ந்து பாடும் புரக்கப்படுவாரையும் உடையரோ? தம்மையே துணையாக அறிந்து பற்றினவர்கட்கு நலம் செய்வரோ? 'காடே அரங்காக எட்டுக் கைகளினாலும் குறிப்புணர்த்தி, தாளத்தொடு பொருந்த ஆடுவார்' எனச் சிறப்பித்துச் சொல்லப்படுபவரோ? சொல்லுமின். 
338 நமண நந்தியுங் கரும வீரனுந்
தரும சேனனு மென்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
தங்கள் கூறையொன் றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
றோதி யாரையு நாணிலா
அமண ராற்பழிப் புடைய ரோநமக்
கடிக ளாகியவடிகளே.
7.033.9
தொண்டீர், நமக்குத் தலைவராய் உள்ள தலைவர், குமணனது பெரிய மலையிடத்துள்ள் சிறிய குன்றுகள் போலத் தம்மிடத்தில் உடையொன்றும் இலராய் நின்றுகொண்டு, 'ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம்' என்று சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு, ஒருவரையும் நாணுதல் இல்லாத, 'நமண நந்தி, கரும வீரன், தருமசேனன்' என்ற இன்னோரன்ன பெயர்களை யுடையவர்களாகிய சமணர்களால் பழிக்கப்படுதலை உடையரோ? சொல்லுமின். 
339 படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.
7.033.10
அடியவர்களே, அடியவர்க்கு அடியராவர் செய்யும் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில், திருத்தம் இல்லாதவனும், திருநாவலூரில் தோன்றியவனும், வனப்பகைக்கு தந்தையும் ஆகிய வன்றொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன்; கீழ்மையை உடையவனாயினும், கொடியவனாயினும், தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற அடியவனாகிய நம்பியாரூரனை, நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆளுதல் செய்வரோ? அவரது திருவருள் இருந்தவாற்றைப் பணித் தருளுங்கள். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.