LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-34

7.034.திருப்புகலூர் 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அக்கினியீசுவரர். 
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 
340 தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.1
புலவர்காள், எம் தந்தையாகிய சிவபிரான், தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும், ஆடையும், பிறவும் தந்து புரப்பான்; அதனால், புகழும் மிகும்; துன்பங் கெடுதலும் உண்டாம், இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவலோகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக இல்லை; ஆதலின், தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து, தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி, அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நிற்பினும், அங்ஙனம் சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப் பாடுதலை அறவே விடுத்து, அவனது திருப்புகலூரைப் பாடுமின்கள். 
341 மிடுக்கி லாதானை வீம னேவிறல் 
விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று 
கூறி னுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.2
புலவர்காள், வலியும் வீரமும் இல்லாதவனை, ''இவன் மல்லுக்கு வீமனே போல்வான், வில்லுக்கு வெற்றியையுடைய அருச்சுனனே போல்வான்' என்றும், கொடுத்தற்குணம் இல்லாதவனை, 'இவன் கொடைக்குப் பாரியே போல்வான்' என்றும் இல்லது கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், நீற்றைக்கொண்ட திருமேனியையுடைய எம் புண்ணிய வடிவினனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், பல உலக அடுக்கிற்கும் மேல் உள்ள அமரரது உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
342 காணி யேற்பெரி துடைய னேகற்று
நல்ல னேசுற்றம் நன்கிளை
பேணி யேவிருந் தோம்பு மேயென்று
பேசி னுங்கொடுப் பாரிலை
பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.3
புலவர்காள், நிலம் சிறிதும் இல்லாதவனை, 'காணியோ பெரிதுடையன்' என்றும், கல்வியில்லாத பேதையை, 'கற்று நலம் பெற்றவன்' என்றும், ஒருவரோடும் அளவளாவுதல் இல்லாதவனை, 'நண்பரையும், நல்ல சுற்றத்தாரையும் பேணுதலுடையவன்' என்றும், தானே தமியனாய் உண்டு களித்து ஈர்ங்கை விதிராதவனை, 'விருந்தினரை நன்கு புறந்தருவோன்' என்றும் பொய் சொல்லிப் பாடினும், நீவிர் வேண்டுவதனை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உழவர் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழ, வயற் பறவைகள் ஒலிக்கின்ற, தண்ணிய திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகமாகிய தேர்க்கு அச்சாணியாய் நின்று அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற்காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
343 நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்
நடுங்கி நிற்கும்இக் கிழவனை
வரைகள் போல்திரள் தோள னேயென்று
வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அரைய னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.4
மெய்ம்முழுதும் நரைகள் வரப்பெற்று, மூப்பெய்தி, உடல் நடுக்கங் கண்டு, கால் தளர்ந்து நிற்கின்ற இத்தன்மையனாகிய கிழவனை, 'மலைகள் போலத்திரண்ட தோள்களையுடைய காளையே' என்று பொய்யாகப் புகழ்ந்து பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உயர்ந்த வெள்ளிய இடபத்தினையுடைய புண்ணியனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகத்திற்குத் தலைவராய் அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
344 வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்
பாவி யைவழக் கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாது வேயென்று
பாடி னுங்கொடுப் பாரிலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்
கியாதும் ஐயற வில்லையே.
7.034.5
புலவர்காள், வஞ்சம் பொருந்திய நெஞ்சை உடையவனும், பெரும்பொய்யனும், பாவத்தொழிலை உடையவனும், நீதி இல்லாதவனும், பஞ்ச மாபாதகங்களையும் செய்பவனும் ஆகியவனை, 'சான்றோனே' என்று உயர்த்திப் பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், பொன்போலும் சிவந்த சடையினையுடைய புண்ணியனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், மனத்தில் தோன்றும் துன்பங்களையெல்லாம் அறுத்தெறிந்து பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
345 நலமி லாதானை நல்ல னேயென்று
நரைத்த மாந்தனை யிளையனே
குலமி லாதானைக் குல னேயென்று
கூறி னுங்கொடுப் பாரிலை
புலமெ லாம்வெறி கமழும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அலம ராதம ருலக மாள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.6
புலவர்காள், அழகில்லாதவனை, 'அழகுடையவனே' என்றும், முழுதும் நரை எய்திய கிழவனை, 'இளையவனே' என்றும் இழிகுலத்தவனை, 'உயர்குலத்தவனே' என்றும் மாறிச் சொல்லிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், வயல்களெல்லாம் தாமரை முதலியவற்றின் மணங்கமழ்கின்ற அழகிய திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அலைவின்றி அமரர் உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
346 நோய னைத்தடந் தோள னேயென்று
நொய்ய மாந்தனை விழுமிய
தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று
சாற்றி னுங்கொடுப் பாரிலை
போயு ழன்றுகண் குழியா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.7
தொழுநோயால் வருந்துகின்றவனை, 'பெரிய தோள்களை யுடைய மல்லனே' என்றும், ஒன்றும் ஈயாத சிறுமைக் குணம் உடையவனை, 'இவன் புலவர்கட்கெல்லாம் பெருமை பொருந்திய தாய்போல்பவன் அன்றோ' என்றும், நுமக்கு வரும் இளிவரல் கருதாதே பலரும் அறியக் கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உலகரிடத்துச் சென்று அலைந்து கண்குழிய மெலியாமல், எம் தந்தையாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், வருத்தமின்றிச் சென்று வானுலகை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
347 எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும்
ஈக்கும் ஈகில னாகிலும்
வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று
வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அள்ளற் பட்டழுந் தாது போவதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.8
புலவர்காள், எள் விழுந்த இடத்தை, அவ்விழப்பிற்கு வருந்திக் கூர்ந்து நோக்கித் தேடுபவனாயும், ஈக்கும் ஈயாது சிந்தியவற்றைச் சேர்ப்பவனாயும் உள்ளவனை, 'அள்ளி வீசும் வள்ளலே, எங்கட்கு வலிமையாய் உள்ளவனே' என்று சொல்லி வாழ்த்துதலைச் செய்யினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் இல்லை; ஆதலின், பறவைகளெல்லாம் சென்று சேர்கின்ற அழகிய புகலூரைப் பாடுமின்; பாடினால், உலகியலாகிய சேற்றிற்பட்டு அழுந்தாது பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
348 கற்றி லாதானைக் கற்று நல்லனே
காம தேவனை யொக்குமே 
முற்றி லாதானை முற்ற னேயென்று
மொழியி னுங்கொடுப் பாரிலை 
பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அத்த னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.9
புலவர்காள், ஒருஞான்றும் ஒன்றனையும் கற்றறியாதவனை, 'மிகவும் கற்று வல்லனாயினானே' என்றும், அழகு சிறிதும் இல்லாதவனை, 'அழகில் காமதேவனை ஒப்பானே' என்றும், ஆண்டும் அறிவும் முதிராதவனை, அவற்றால் முதிர்ந்தவனே என்றும் புனைந்து கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், மரப்பொந்துகளில் ஆந்தைகளின் ஓசை இடையறாது ஒலிக்கின்ற திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகிற்குத் தலைவராய், அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
349 தைய லாருக்கொர் காம னேசால
நலவ ழகுடை ஐயனே
கையு லாவிய வேல னேயென்று
கழறி னுங்கொடுப் பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய்புக
லூரைப் பாடமின் புலவீர்காள்
ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.10
புலவர்காள், யாவராலும் அருவருக்கப்படும் தோற்றத்தவனை, 'மகளிருள்ளத்திற்குக் காமன் போலத் தோன்றுபவனே, ஆடவர் யாவரினும் மிக இனிய அழகுடைய வியத்தகு தோற்றத்தை யுடையவனே, முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே' என்று உறுதியாகச் சொல்லிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், பெரிய பொய்கைகளிலும், சிறிய குளங்களிலும் எருமைகள் வீழந்து உழக்குகின்ற திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரருலகத்திற்குத் தலைவராய், அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 
350 செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவ லூரன்
வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
பாடல் பத்திவை வல்லவர்
றவ னாரடி சென்று சேர்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
7.034.11
வயல்களில் செந்தாமரைகள் செழிக்கின்ற அழகிய திருப்புகலூரில் விரும்பி எழுந்தருளியுள்ள செல்வனாய சிவபெருமானை, தேனையுடைய பூஞ்சோலைகளை உடைய திருநாவலூரனும், வனப்பகைக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அறவடிவினனாகிய அப்பெருமானது அரிய திருவடிகளில் சென்று சேர்வர் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.