LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-45

7.045.திருஆமாத்தூர் 
பண் - கொல்லிக்கௌவாணம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அழகியநாதர். 
தேவியார் - அழகியநாயகியம்மை. 
456 காண்டனன் காண்டனன் காரிகை 
யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் 
தூர்எம் மடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று 
சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித் 
தல்லா தவர்கட்கே.
7.045.1
அடியேன், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனை, உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன்; அவனுக்கு அடிமை பூண்டேன்; அடிமையைப் பலகாலும் செய்தேன்; இவை பொய்யல்ல; இன்னும் சொல்லுவேன்; கேண்மின்; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன். 
457 பாடுவன் பாடுவன் பார்ப்பதி
தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணனப்
பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் மடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றம
தற்றென் குறிப்பொடே.
7.045.2
யான், இவ்வுலகிற்குத் தலைவனாகிய, திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, அவனது திருவடியைக் கருதிப் பாடுவேன்; உறுதியாகப் பற்றி அணைத்தற்குத் தேடுவேன்; தேடிக்கண்டு, என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக் கூடுவேன்; கூடிய களிப்பினால் ஆடுவேன். 
458 காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ
லாலன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி
னாலன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்
தூர்எம் மடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி
ராட்டியைப் பாகமே.
7.045.3
திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன், அன்று காமனைத் தனது நெற்றிக்கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன்; அன்று, கூற்றுவன்மேற் காலாற் பாய்ந்து அவனை அழித்தவன்; எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன்; எம்பெருமாட்டியை ஒருபாகத்தில் ஆரப்பொருந்தியவன். 
459 ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்
ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று
திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி
மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்
தூர்ஐயன் அருளதே.
7.045.4
யான், என் உள்ளத்துள்ளே நிலை பெற்றுள்ள ஒளியுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன்; அவ்வறிவின் வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன்; இனி, வெளியே, திருவொற்றியூரிற் புகுந்து, 'சங்கிலி' என்பாளது மெல்லிய தோளையும், பெரிய தனங்களையும் பொருந்தினேன்; இவ்விருவாற்றானும், இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன்; இது, திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனது திருவருள். 
460 வென்றவன் வென்றவன் வேள்வியில்
விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக்
கென்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி
நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருள்
ஆமாத்தூர் ஐயனே.
7.045.5
திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன், தக்கன் வேள்வியில் எல்லாத் தேவர்களையும் வென்றவன்; சிலவாகிய பிச்சைக்கென்று தெருவிற் சென்றவன்; நீதியிற் சிறிதும் குறையாதவரிடத்தில் நிலைபெற்று நின்றவன்; தன்னை அடைந்தார்க்கு அருள்செய்தல், அடைந்த அன்றேயாகின்றவன். 
461 காண்டவன் காண்டவன் காண்டற்
கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன்
நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்
தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற்
புரிநூல் புரளவே.
7.045.6
திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன், தன் அடியவர்கட்கு எளிதில் காணப்பட்டவன்; திருமாலும் பிரமனும் தேட, அவர்களால் காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன்; ஆமாத்தூரையும் ஆண்டவன்; என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன்; மார்பில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன். 
462 எண்ணவன் எண்ணவன் ஏழுல
கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டும்என்
பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியொர்
பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்
தூர்எம் மடிகளே.
7.045.7
திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் ஏழுலகத்திலும் உள்ள உயிர்கட்குக் கருத்தாய் உள்ளவன்; தன்னை, 'காண்போம்' என்று அன்பால் முயல்கின்றவர்கட்குக் கண்ணாய் உள்ளவன்; திருமேனி ஒரு பாகம் பெண்ணாகியவன்; பொருந்திய தலைக்கோலத்தை உடையவன்; அடையத் தக்கவன். 
463 பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந்
தென்னைப்போ கவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தி
னுட்பொரு ளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர்
ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என்மனத்
தின்புற் றிருப்பனே.
7.045.8
திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன், அடியார்களுக்குப் பொன்போல்பவனாய் உள்ளவன்; பொன்னைக் கொடுத்து என்னைத் தன்னினின்றும் நீங்கவொட்டாது பிணித்துக் கொண்ட ஒளிவடிவினன்; வேதத்தின் உட்பொருளாய் உள்ள அத் தன்மையை உடையவன்; எனக்கு உரிமையுடையவன்; அவனை, யான் என்மனத்தில் அன்பால் நினைந்து இன்பமுற்றிருப்பேன்; 
464 தேடுவன் தேடுவன் செம்மலர்ப்
பாதங்கள் நாள்தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலேயொர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை
பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூஎம் மடிகளே.
7.045.9
யான், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன்; அவனை, உந்திக்குமேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன்; வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன்; அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி கூத்துக்களை ஆடுவேன். 
465 உற்றனன் உற்றவர் தம்மை
ஒழிந்துள்ளத் துள்பொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச்
சேவடிக் கேசெல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர்மேயான்
அடி யார்கட்காள்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும்
பெயர்த்தும்பிற வாமைக்கே.
7.045.10
யான், மீட்டும் மீட்டும் பிறவாமைப் பொருட்டு, உற்றாரை நீங்கி, உள்ளத்தில் உள்ள பொருளை அடைந்தேன்; திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனது, தாமரை மலர் போலும் செவ்விய திருவடியிடத்தே செல்ல அவற்றைத் துணையாகப் பற்றினேன்; அதனால் துன்பங்கள் நீங்கப்பெற்றேன்; அதன்பின். அவன் அடியவர்க்கு அடியனாகும் பேற்றையும் பெற்றேன். 
466 ஐயனை அத்தனை ஆளுடை
ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு
ளான விமலனை
மையனை மையணி கண்டனை
வன்றொண்ட னூரன்சொல்
பொய்யொன்று மின்றிப் புலம்புவார்
பொற்கழல் சோவரே.
7.045.11
யாவர்க்கும் தலைவனும், தந்தையும், என்றும் உள்ளவனும், மெய்ம்மையான உள்ளம் உடையவர்க்கு அநுபவப் பொருளாய் விளங்குகின்ற தூயவனும், திருவருள் மேகமானவனும், மைபோலும் அழகிய கண்டத்தை உடையவனும் ஆகிய திருவாமாத்தூரை ஆளுதலுடைய இறைவனை, வன்றொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய பாடல்களை, வஞ்சனை சிறிதும் இன்றிப் பாடுகின்றவர், அப்பெருமானது பொன்போலும் திருவடிகளை அடைவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.