LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-47

7.047.ஊர்த்தொகை 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
478 காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே
கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே 
கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் 
பனங்காட் டூரானே
மாட்டூ ரறவா மறவா துன்னைப் 
பாடப் பணியாயே.
7.047.1
காட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற கடலும், மலையும், தளிரும், கொல்லுந் தன்மையுடைய சிங்க ஏறும் போல்பவனே, பாட்டினை மிகவுணர்ந்தவர் பலராலும், அப்பாட்டுக்களால் பரவப்படுபவனே, எருதை ஊர்கின்ற அறமுதல்வனே, அடியேன் உன்னை என்றும் மறவாது பாடுமாறு திருவருள்செய்யாய். 
479 கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்
குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா
வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா
அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட் டாடீ அடியார்
கவலை காளையாயே.
7.047.2
கொங்கு நாட்டில் பாலை நிலத்தில் உள்ள குரக்குத்தளி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, மூப்படையாதவனே, வானத்தில் திரிபவனே, தேவர்க்குத் தலைவனே, மணவாளக்கோலம் உடையவனே, சங்கக்குழை பொருந்திய காதினையுடையவனே, அழகனே, எஞ்ஞான்றும் அவியாது எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திக்கொண்டு, இரவில், புறங்காட்டில் ஆடுகின்றவனே, உன் அடியாரது மனக் கவலையைப் போக்கியருளாய். 
480 நிறைக்காட் டானே நெஞ்சத் தானே
நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய்
அனல்சேர் கையானே
மறைக்காட் டானேதிருமாந் துறையாய்
மாகோ ணத்தானே
இறைக்காட் டானே எங்கட் குன்னை
எம்மான் தம்மானே.
7.047.3
நின்றியூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, நெறிபிறழாமையையுடைய, சான்றானவனே, அடியவர்கள் நெஞ்சத்தில் இருப்பவனே, அவர்கட்குச் சிறிதும் துன்பத்தைக் காட்டாதவனே, நீர் பொருந்திய சடையை யுடையவனே, நெருப்புப் பொருந்திய கையை யுடையவனே, எம்தந்தைக்குத் தந்தையே, நீ எங்கட்டு உன்னைச் சிறிதும் புலப்படுத்தாதவனோ? 
481 ஆரூர் அத்தா ஐயாற் றமுதே
அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்
கருகா வூரானே
பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான்
பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய்
பாசூர் அம்மானே.
7.047.4
ஆரூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, அமுதம் போல்பவனே, பிறவாத நெறியை உடையவனே, நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன். 
482 மருகல் லுறைவாய் மாகா ளத்தாய்
மதியஞ் சடையானே
அருகற் பிணிநின் னடியார் மேல
அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே
கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க் குன்னைப்
பவளப் படியானே.
7.047.5
மருகல் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே. சந்திரனைச் சடையில் அணிந்தவனே, கருகிய கண்டத்தை யுடையவனே, கரும்புபோல்பவனே, கட்டிபோல்பவனே, பவளம் போலும் வடிவத்தையுடையவனே, உன் அடியார்மேல் வருகின்ற, மெலிதற் காரணமான நோய்கள் விலகிச் செல்லவும், உன்னை அடைந்து இன்புறவும் அவர்கட்கு அருள் செய்யாய். 
483 தாங்கூர் பிணிநின் னடியார் மேல
அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய்
விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய்
நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா 
பழனப் பதியானே.
7.047.6
வேங்கூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, இடபம் பொருந்திய கொடியையுடையவனே, நம்பனே, பக்கங்களில் உள்ள ஊர்களிற் சென்று பிச்சை தேடுகின்ற வேறுபட்ட தன்மையனே, மேலானவனே, உன் அடியார்மேல் உள்ள பொறுத்தற்கரிய நோய்கள் விலகிச் செல்ல அருள்புரியாய். 
484 தேனைக் காவல் கொண்டு விண்ட 
கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார் 
அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே 
அண்ணா மலையானே
ஊனைக் காவல் கைவிட் டுன்னை 
உகப்பார் உணர்வாரே.
7.047.7
'ஆனைக்கா, அண்ணாமலை' என்னும் தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, தேனைப் பாதுகாத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய வளப்பமான மாலையை அணிந்தவனே, வானுலகத்தைக் காத்தலை மேற்கொண்டு நிற்கின்ற தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே, அழித்தல் தொழிலை உடையவனே, மேலானவனே, உடலோம்புதலை விட்டு, உன்னை விரும்பித் தொழுகின்றவர்களே, உன்னை உணர்வார்கள். 
485 துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய்
சொல்லாய் கல்லாலா
பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை 
இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் 
அகல அருளாயே.
7.047.8
துருத்தி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, ஒளிவடிவானவனே, சொல்லின்கண் உள்ளவனே, கல்லால மர நிழலில் இருப்பவனே, வெயிலாகியும், காற்றாகியும், மற்றும் பலவாகியும் நிற்பவனே, என் மனத்தை மேன்மேல் திருந்தச்செய்து, அதனை இடமாகக் கொண்டவனே, உன்னை அன்புசெய்து அடைந்தவர்களது வினைகள் நீங்க அவர்கட்கு அருள்செய்யாய். 
486 புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் 
போதா மூதூரா
பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற
புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்
கடர்த்த மதிசூடீ
கலிசேர் புறவிற் கடவூ ராளீ
காண அருளாயே..
7.047.9
புலியூர்ச் சிற்றம்பலம் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, ஞான வடிவினனே பழமையான சிவலோகத்தை உடையவனே, பொலிவு பொருந்திய மூன்று ஊர்கள் எரிந்தொழியுமாறு அழித்த, புரித்த, புல்லிய சடையையுடையவனே, வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனது பெரிய இருபது கைகளையும் நெரித்த, பிறையைச் சூடினவனே, உன்னைக் கண்ணாற் காண அருளாய். 
487 கைம்மா உரிவை அம்மான் காக்கும்
பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுர மன்ன/B>
மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன்
அடியன் தமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார்
சிவலோ கத்தாரே.
7.047.10
மை தீட்டிய, மாவடுப்போலும் பெரிய கண்களையும், இனிமை நிலைபெற்ற அழகிய சொல்லையும், இளமையையும் உடையவளாகிய சிங்கடிக்குத் தந்தையும், சடையனாருக்கு மகனும், யானைத் தோலையுடைய பெருமானுக்கு அடியனும் ஆகிய நம்பியாரூரனது இத்தமிழ்மாலையை, அப்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற பல தலங்களையும் நினைந்து கவலையற்றிருந்து, சிறந்த வாயாற் பாடுவோர், சிவலோகத் திருப்பவரேயாவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.