LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-52

7.052.திருவாலங்காடு 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது. 
சுவாமிபெயர் - ஊர்த்துவதாண்டவேசுவரர். 
தேவியார் - வண்டார்குழலியம்மை. 
530 முத்தா முத்தி தரவல்ல
முகிழ்மென் முலையாள் உமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ்
சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்
பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாஉன்
னாடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.1
இயல்பாகவே கட்டில்லாதவனே, கட்டுற்ற உயிர்கட்கெல்லாம் வீடளிக்கவல்ல, அரும்புகின்ற மெல்லிய தனங்களை யுடையாளாகிய உமையவளது பாகத்தையுடையவனே, சித்திகளை எல்லாம் உடையவனே, அச்சித்திகளை அடையும் வழியைக் காட்டுகின்ற சிவபெருமானே, தேவர்களாகிய விலங்குகட்டுச் சிங்கம் போல்பவனே, அடியார்களுக்குப் பற்றாய் உள்ளவனே, அன்புடையார் பலரும் போற்றும் கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் என்றும் உள் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். 
531 பொய்யே செய்து புறம்புறமே
திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட
மெய்யாமெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த
பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.2
மனத்தொடு பொருந்தாத செயல்களையே செய்து, அதனால் உனக்கு மிகவும் சேய்மையிலே திரிவேனாகிய என்னை, அங்ஙனம் அகன்றொழியாதவாறு தடுத்து இவ்வுலகில் நேரே வந்து என்னை ஆட்கொண்ட மெய்ம்மையுடையவனே, மெய்ம்மை யுடையவர்க்கு மெய்ப்பொருளாய் உள்ளவனே, படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை அரையிற் கட்டிய கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழவேன். 
532 தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.3
தூண்ட வேண்டாது ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே, வணங்குவாரது துன்பத்தை நீக்குபவனே, எலும்பையே அணியாகப் பூண்டவனே, முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்த அறவுருவினனே, முன்பு செய்யப்பட்ட, அழுந்துதற்கு இடமான வினைகளாகிய அவற்றை நீக்கியருளுகின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். 
533 மறிநே ரொண்கண் மடநல்லார்
வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே யழிந்தேன் ஐயாநான்
மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அறிவே யாலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.4
தலைவனே, கருமைபொருந்திய கண்டத்தையுடையவனே, தீர்க்க இயலாத வினைகளையெல்லாம் தீர்த்தருளுகின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற அறிவு வடிவானவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே, அடியேன், மான்போலும் ஒளிபொருந்திய கண்களையுடைய, இளைய, அழகிய மாதா ஆசையாகிய வலையில் அகப்பட்டு, அறிய வேண்டுவன வற்றை அறியாது, அறிவு அடியோடே கெட்டேன்; அவ்வாறே இனியுங் கெட்டொழியாது, உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். 
534 வேலங் காடு தடங்கண்ணார்
வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்
மணியே முத்தே மரகதமே
பாலங் காடீ நெய்யாடீ
படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய
அடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.5
மாணிக்கம் போல்பவனே, முத்துப் போல்பவனே, மரகதம் போல்பவனே, பால் முழுக்கு ஆடுபவனே, நெய் முழுக்கு ஆடுபவனே, விரிந்த புல்லிய சடையை யுடையவனே, பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் வேல்போலும், பெரிய கண்களையுடைய மாதராசையாகிய வலையில் அகப்பட்டு, உன்னாற் சொல்லப்பட்ட நெறியை மறந்து, மயக்கம் மிகுந்து என்னையே மறந்தொழிந்தேன்; இனி அவ்வாறு இராது, என்றும் உன் அடியார்க்கு அடியனாகியே வாழ்வேன். 
535 எண்ணார் தங்கள் எயில்எய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற
கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணார் இசைக ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.6
உன்னை மதியாதவரது மதில்களை அழித்த என் தந்தையே, என் தந்தைக்கும் பெருமானே, உலகத்திற்குக் கண்ணாய் நின்று அதனைக் காக்கின்ற முதல்வனே, குற்றமில்லாதவனே, பண்பொருந்திய இசைகளைக் கொண்டு பலரும் துதிக்கின்ற பழையனூர்த் தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். 
536 வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழையனூர்மேய
அண்டா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.7
வண்டுகள் நிறைந்த கூந்தலையுடையவளாகிய 'உமை' என்னும் நங்கைதன் பாகத்தையுடையவனே, கங்கைக்குக் கணவனே, பகைத்தவரது ஊர்களை எரித்த இடப வாகனனே, வேத நெறியை உடையவனே, முன்பு செய்யப்பட்ட, அழுந்துதற்கு இடமான வினைகள் பலவற்றையும் தீர்க்கின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தேவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். 
537 பேழ்வாய் அரவின் அணையானும்
பெரிய மலர்மேல் உறைவானும்
தாழா துன்றன் சரண்பணியத்
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்தன்னை
ஆள்வாய் ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.8
பெரிய வாயையுடைய பாம்பாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும், பெரிதாகிய தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் விரைவில் உனது முதன்னையை உணர்ந்து உன் திருவடிகளை வணங்குமாறு, தீப்பிழம்பாய் நின்ற மெய்ப் பொருளானவனே, உயிர், பயனின்றிக் கெடுதற்கு ஏதுவான வினைகளை தீக்குகின்ற கடவுளே, பழையனூரை ஆள்கின்றவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். 
538 எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற்
பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.
7.052.9
என் தந்தை, என் தந்தைக்கு முன்னோனாகிய தந்தை முதலாக இருவகை ஏழ் தலைமுறைகளில் எங்களை அடிமை கொண்டுள்ள பெருமானே சுடுகாடாகிய புறங்காட்டில் பேய்களோடு ஆடல் செய்பவனே, பல சிறந்த மலர்களைக்கொண்டு பலரும் வணங்குகின்ற, பழையனூர்க்குத் தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன். 
539 பத்தர் சித்தர் பலர்ஏத்தும்
பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன்
அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள் பத்தும் பாடி ஆடுவார்
பரமன் னடியே பணிவாரே.
7.052.10
அடியார் பலரும், சித்தர் பலரும் துதிக்கின்ற கடவுளும், பழையனூரை விரும்பிய தலைவனும், ஆகிய திருவாலங்காட்டு இறைவனது அடிமைத் திறத்தின் கண்ணே அன்புடையவராய், சித்தர்களும் தங்கள் சித்தத்திலே மறவாது வைத்துள்ள புகழையுடைய அடியானாகிய நம்பியாரூரனது இம் மெய்யுணர்வுத் தமிழ்ப் பாடல்களாகிய பத்தினையும் பாடி ஆடுவோர், சிவபெருமானது திருவடியையே எஞ்ஞான்றும் வணங்கி வாழ்பவராவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.