LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-54

7.054.திருவொற்றியூர் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது. இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்குச் சூளுரைசெய்து மணந்துமகிழ்ந் திருக்கையில் திருவாரூர் வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்கத் தரிசனஞ்செய்வதற்கின்றி நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாகப் பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து திருவொற்றியூரெல்லையைக் கடந்தவளவில் நேத்திரங்களுக்கு அபாவந்தோன்ற வருந்தித் துதிசெய்த பதிகம்.
சுவாமிபெயர் - படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர். 
தேவியார் - வடிவுடையம்மை. 
550 அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படற் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.054.1
தலைவனே, 'ஒற்றியூர்' என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், உன் திருவடியை இடையீடின்றி யடையமாட்டாது, மாசுடைய உடம்பு கொண்டே அடைவேனாயினேன்; அவ் விழி நிலைதானும் நான் அடையத்தக்க தொன்றாகியேவிடுமாயின், ஒளியிழந்த என் கண்ணுக்கு ஊற்றத்தக்கதொரு மருந்தையேனும், என் வேண்டுகோளுக்கு விடையாக நீ சொல்லியருள்; ஏனெனில், பசு முதலிய வற்றினிடத்திற் பாலை விரும்புவோர், அவை இடுகின்ற சாணத்தை எடுத்தற் றொழிரைச் செய்தாயினும் அதனைக் கொள்வர்; அதுபோல, நீ என் குற்றங்களை நோக்கி, இகழாது, உயிர்களிடத்து நீ விரும்புவ தாகிய குணம் என்னிடத்து இருத்தலை நோக்கி என்னை ஏற்றருளுதல் வேண்டும். அக் குணமாவது; யான் எப் பிழைசெய்வேனாயினும், உன் திருவடிக்குப் பிழையைச் செய்யேன்; வழுக்கிவிழும் பொழுதும் உன் திருப்பெயரைச் சொல்லுதலன்றி, வேறொன்றை அறியேன். 
551 கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி னால்திக ழுந்திரு மூத்தீ
என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.054.2
'எட்டு' என்னும் எண்ணின் வகையினால் விளங்குகின்ற சிறந்த வடிவங்களையுடையவனே, 'ஒற்றியூர்' என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, துன்பத்தைத் தரும் வினையையுடையேனாகிய யான, அவ்வினை காரணமாக, இம் மண்ணுலகிற் பிறந்தேன்; பிறந்து உனக்கு ஆளாகி, இடையே மாதரை விரும்பி மணந்தேனாயினும், உன் திருவடியை மறந்திலேன்; பிறவற்றைச் செய்யத் தவறினேனாயினும், திருவடிக்குச் செய்யும் அடிமையில் இடைவிடாது நின்றேன்; என்ன செய்தற் பொருட்டு அவற்றை நான் இப்பொழுது எடுத்துரைப்பேன்! இத் துன்பமெல்லாம், என்காதலுக்கு இடமாய் நின்ற சங்கிலி காரணமாக நீ செய்வனவேயாகும். 
552 கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை யமுதே
அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சல முரல
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும
ஒற்றி யீரெனும் ஊருறை வானே.
7.054.3
கங்கை பொருந்தியுள்ள சடையையுடையவனே, அடியார்கட்குக் கரும்பும், கட்டியும், அகங்கையிற்கிடைத்த நெல்லிக் கனியில் உள்ள அமுதமும் போல இனிமையைத் தருகின்றவனே, அனைவர்க்கும் பற்றுக்கோடாய் உள்ளவனே, தந்தையே, சங்குகளும், சிப்பிகளும், சலஞ்சலம் என்னும் சங்குகளும் ஒலிக்க, 'வயிரம், முத்து, பிற மணிகள், பொன்' என்பவற்றை வாரிக்கொண்டு, பெரிய கடலின் கண் உயர எழுகின்ற அலைகள் வந்து உலவுகின்ற, 'ஒற்றியூர்' என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, நீயே எனக்குத் துன்பஞ் செய்வையாயின், அதனை நான் யாரிடம் நீக்குமாறு எடுத்துச்சொல்வேன்! 
553 ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றால்
யாவ ராகில்என் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
சொல்லு வாரையல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
கொள்வ தேகணக் குவ்வழக் காகில்
ஊன்று கோலெனக் காவதொன் றருளாய
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.054.4
"ஒற்றியூ" என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே. 'தாய் பெற்றதனால் கொள்ளப் பட்டதொரு சுற்றம் என்பது ஒருபொருளன்று; அன்புடையவர்கள் யாராய் இருப்பினும் என் என்கின்ற இம்முறைமை பற்றி, நீ உன் னிடத்து அன்புசெய்பவரை, உனது இயற்கை வடிவம் அவர்கட்குப் புலனாகுமாறு வெளிநின்று ஆட்கொண்டுவிட்டால், அதன்பின் உன் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பவரை, நீ ஒரு ஞான்றும் கடுஞ்சொற்சொல்லுவாயல்லை; அங்ஙனமாகவும், மூன்று கண்களை யுடையையாகிய நீ உன் அடியேனது இரண்டு கண்களைப் பறித்துக் கொள்வது, யான் செய்த குற்றங் காரணமாக நீதி நூல்களில் உள்ள முறைமையே யாகில், எனக்கு உதவியாய் நிற்பதோர், ஊன்று கோலையேனும் அளித்தருள். 
554 வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போலச்
சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளம்
கழித்த லைப்பட்ட நாயது போல
ஒருவன் போல்பற்றிக் கறகற விழுக்கை
ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.054.5
'ஒற்றியூர்' என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, யான் நன்னெறியைத் தலைப் படவே முயல்கின்றேன்; ஒருஞான்றும் என்னை உன்னைப்போல ஒன்றாலும் தாக்குண்ணாத பெருமையேனாக நினைக்கின்றிலேன்; அங்ஙனமாகவும், நீ என் கண்ணைப் பறித்துக் கொண்டதனால், வழிதெரியாது, சுழியிடத்துப்பட்ட நீர் போலச் சுழலாநின்றேன். என் உள்ளமும் ஒன்றும் அறியாது சுழல்கின்றது; இவற்றையும், கழியிற் பொருந்திய நாயைப் போல ஒருவன் தரும் கோலை விடாதுபற்றி நின்று, அவனால், 'கறகற' என்று இழுக்கப்படுதலையும் ஒழித்து, நீ உனது திருவருள்களை எனக்கு அளித்தருள். 
555 மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானு மித்தனை வேண்டுவ தடியேன்
உயிரொ டுந்நர கத்தழுந் தாமை
ஊள முள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.054.6
தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனே, "ஒற்றியூர்" என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே, யான் மான்போலும் பார்வையினை யுடைய மாதரது கண்ணோக்காகிய வலையில் அகப்பட்டு, உனது செயல்முறையையும், குணத்தையும் நினையாமலே செய்துவிட்ட பெரிய குற்றத்திற்கு அஞ்சியே, நானும் பிறர் போல உன்னை இத் துணை இரந்துவேண்டுவதாயிற்று; அதனால், என்றும் உன் அடியேனாகிய யான் உயிரோடே நரகத்தில் மூழ்காதபடி, எனக்கு உண்டாகிய குறையினை நீக்கி அருள் செய்யாய். 
556 மற்றுத் தேவரை நினைந்துனை மறவே
னெஞ்சி னாரொடு வாழவு மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
பேதை யேன்பிழைத் திட்டதை யறியேன்
முற்று நீயெனை முனிந்திட அடியேன்
கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவாத் தருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.054.7
'ஒற்றியூ' என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே, நான் பிறர் ஒருவர் தேவரை நினைந்து உன்னை மறந்தேனில்லை; அத்தன்மையான நெஞ்சை யுடையவருடன் சேர்ந்திருக்கவும் மாட்டேன்; அங்ஙனமாக, நீ என்னை முற்றும் வெகுளுமாறு, உன்னை இனிதே பெற்றிருந்தும் பெறாதொழகின்ற பேதையேனாகிய யான் செய்த பிழைதான் இன்னதென்று அறிகின்றிலேன்; நான் உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவேனாயினேன். இதன்மேல், உன் அடியேனாகிய யான் செய்யக் கடவதாய் எஞ்சி நிற்பதொரு கடமை யாது! ஒன்றுமில்லையாதலின், யான் உற்ற துன்பத்தையும், மிக்க பிணியையும் நீக்கியருள். 
557 கூடி னாய்மலை மங்கையை நினையாய்
கங்கை யாயிர முகமுடை யாளைச்
சூடினாய் என்று சொல்லிய புக்கால்
தொழும்பனே னுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிருந் தென்செய்தி மனமே
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
ஊடி னால்இனி யாவதொன் றுண்டே
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.054.8
'ஒற்றியூ' என்று பெயா சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே, 'நீ முதலில் மலைமகளை ஒரு பாகமாகப் பொருந்தினாய்; பின்பு ஆயிரமுகமுடைய கங்கையாளை முடியில் சூடினாய்; இதனை நினைகின்றிலையே' என்று சொல்லப்புகுந்தால், அஃது அடிமையாகிய எனக்குக் கூடுமோ! 'மனமே நீ துன்ப முற்று என்ன பெறப்போகின்றாய்' என்று மனத்தோடே சொல்லிக் கொண்டு. யான் அடைந்த குற்றத்திற்கு அஞ்சி உன்னித்திலே பிணங்கினால், இனி வருவதொன்று உண்டோ? 
558 மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையல் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.054.9
வேதத்தை ஓதுபவனே, மணி முதலியவற்றைக் கரையிடத்துக் கொணர்ந்து சேர்க்கும் தண்ணிய கடல் அலைகள் வந்து உலவுகின்ற 'ஒற்றியூர்' என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, எனக்கு வலிமையாய் உள்ளவனே, மணி போல்பவனே, அழகுடையவனே, நீ எனக்கு, 'மகம்' என்னும் நாண் மீன்கீழ் வந்த, 'சனி' என்னும் கோள்போல்பவனாயினை; அகத்தில் உள்ள பெண்டுகள், நான், ஆவது ஒரு காரியம் சொன்னால், 'கண்ணிலியே நீ என் அறிவாய்; கூவாதே; போ' என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; முகத்தில் கண்ணில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்? மூன்று கண்களையுடையவனே, இது முறையோ! 
559 ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
ஒற்றி யூருறை செல்வனை நாளும்
ஞாலந் தான்பர வப்படு கின்ற
நான்ம றைஅங்க மோதிய நாவன
சீலந் தான்பெரி தும்மிக வல்ல
சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம் போய்ப்
பரக திதிண்ணம் நண்ணுவர் தாமே.
7.054.10
கடல் அலைகள் வந்து உலவுகின்ற கரையின்மேல் உள்ள திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனை, என்றும் உலகத்தாரால்போற்றப்படுகின்ற நான்கு வேதம், வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவையுடையவனும், ஒழுக்கத்தில் மிகவல்ல இளமையை யுடையவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பி யாரூரன் பாடிய இப் பத்துப்பாடல்களாகிய இவைகளை வல்லவர்கள், மேலான கதியைப் போய் அடைவார்கள்; இது திண்ணம். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.