LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-66

7.066.திருவாவடுதுறை 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர். 
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை. 
672 மறைய வன்ஒரு மாணிவந் தடைய
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மான்என் றெப்போதும்
ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.066.1
திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, உன்னை, அந்தணனாகிய பிரமசாரி ஒருவன் அன்புடன் வந்து அடைய, அவனது அரிய உயிரைப் போகாது நிறுத்த வேண்டி, உதிரத்தைக் கொண்ட சூலத்தையுடைய இயமனைக் காலால் உதைத்துக்கொன்ற காரணத்தை உணர்ந்து உணர்ந்து, அடியேன், 'யாவர்க்கும் முதல்வன்; எமக்குப் பெருமான்' என்று எப்பொழுதும் துதித்துத் துதித்து, அஞ்சலி கூப்பிநின்று, கழலும் சிலம்பும் ஒலித்தலைக் கொண்ட உனது செவ்விய திருவடியிடத்துக் கொண்ட அன்போடும் வந்து அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டருள். 
673 தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.066.2
திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, தௌவுபெற்ற சிலந்தி ஒன்று, தனது வாயினின்றும் உண்டாகும் நூலால் அழகிய பந்தரை உறுதிப்பட ஆக்க, அச்சிலந்தியை, சுருண்ட, சிவந்த சடையை உடையையாகிய நீ சோழனாய்ப் பிறக்கச்செய்த திருவருளை அறிந்து, அடியேன், எனது எதிர் வினைக்கு அஞ்சித் துணுக்குற்று, உனது அழகிய மலர்போலும் திருவடியில் விழுந்து புரண்டு, 'போற்றி! போற்றி!' என்று துதித்து, அன்பினால் அழுது, உன்னை வந்து அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 
674 திகழும் மாலவன் ஆயிர மலரால்
ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்
புகழி னால்அவன் கண்ணிடைந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழு நின்திருப் பாதங்கள் பரவித்
தேவ தேவநின் திறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.066.3
தேவர்கட்குத் தேவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, மிக்க புகழுடையவனாகிய திருமால் நாள்தோறும் ஆயிரந் தாமரைப் பூக்களால் உன்னை அருச்சிக் கின்றவன், ஒருநாள் ஒரு சிறந்த பூக்குறைய, அவன் அதற்கு மெலியாது, புகழத்தக்க உறுதிப் பாட்டுடன், தனது கண்களில் ஒன்றைப் பெயர்த்து உனக்குச் சாத்த, அதனைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு நீ சிறந்த சக்கரப்படையை அளித்தமையை உணர்ந்து, அடியேன், என் நிலைமையைப் பெயர்த்து, நிலையில்லாது உழலச் செய்கின்ற வலிய வினைக்கு அஞ்சி, ஒளிவீசுகின்ற உனது திருவடிகளைத் துதித்து, உனது பெருமைகள் பலவற்றையும் பலகாற் பேசி, உன்னை வந்து அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 
675 வீரத் தால்ஒரு வேடுவ னாகி
விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தால்உன நாமங்கள் பரவி
வழிபட் டுன்திற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.066.4
திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, நீ, ஒரு வேடுவனாய் உருக்கொண்டு, ஒரு பன்றியை, வீரத்துடன் விரைந்து துரத்திச் சென்று, உன்னை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனனை அடைந்து, அவன்மேல் வைத்த விருப்பத்தால் அவனோடு போர் புரிந்து, பின்பு அவனுக்கு, சிறந்த படையாகிய பாசுபதக் கணையை அளித்தமையை அறிந்து, அடியேன் உனது தன்மைகளை நினைந்து உருகி, உனது திருப்பெயர்களை அன்போடு சொல்லி உன்னை வழிபட்டு, ஆர்வத்தோடு வந்து உன் திருவடியிணையை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 
676 ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
புகழி னால்அருள் ஈந்தமை யறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை யடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.066.5
வேதம் ஓதுபவனே, உலகிற்கு முதலாய மூர்த்தியே, உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, நீ, மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபொழுது, அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து, உன் திருவடியை அடைந்து, மேல் உலகத்தை ஆளும் வண்ணம், அவர்கட்கு, புகழத்தக்க வகையில் திருவருள் ஈந்தமையை அறிந்து, அடியேன், மேலான உனது திருவடியையே தொழுது முறையிட்டு, உன்னை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.