LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-71

7.071.திருமறைக்காடு 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மறைக்காட்டீசுவரர். 
தேவியார் - யாழைப்பழித்தநாயகி. 
719 யாழைப்பழித் தன்னமொழி
மங்கைஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
குண்ணும்மறைக் காடே.
7.071.1
யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின், அது, எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து, சிறிய புழைகளில் நுழைந்து, வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும். 
720 சிகரத்திடை இளவெண்பிறை
வைத்தான்இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி
பவளத்திர ளோதத்
தகரத்திடை தாழைத்திரள்
ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே.
7.071.2
தலையில் இளமையான பிறையைச் சூடின இறைவனது இடத்தை அறிய வேண்டின், சங்கினிடத்தில் தோன்றிய முத்துக்களினிடையே மறைகின்ற பவளக்கூட்டத்தை உடைய அலைகள், தகர மரங்களின் அடியிலும், தாழைமரம், குங்கும மரம் இவைகளின் நிழலிலும் மகர மீனையும், சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காடேயாகும். 
721 அங்கங்களும் மறைநான்குடன்
அங்கங்களும் மறைநான்குடன்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
பழம்வீழ்மணற் படப்பைச் சங்கங்களும் இலங்கிப்பியும்
வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு
வணங்கும்மறைக் காடே.
7.071.3
வேதங்கள் நான்கினோடு, அவற்றின் அங்கங்களையும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம்; அஃது எதுவெனின், தென்னை மரங்களும், நீண்ட பனை மரங்களும் தம் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில், சங்குகளும், விளங்குகின்ற இப்பிகளும், வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப் பட, மரக்கலங்களும் உயர்ந்த பாய்மரங்களாகிய கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும். 
722 நரைவிரவிய மயிர்தன்னொடு
பஞ்சவ்வடி மார்பன்
உரைவிரவிய உத்தமன்னிடம்
உணரல்லுறு மனமே
குரைவிரவிய குலைசேகரக்
கொண்டற்றலை விண்ட
வரைபுரைவன திரைபொருதிழிந்
தெற்றும்மறைக் காடே.
7.071.4
நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவனும், அதனால், புகழ் பொருந்திய மேலானவனும் ஆகிய சிவபெருமானது இடம் யாது என்று உணரப் புக்க மனமே, அது, ஒலி பொருந்திய கரைக்கண் உள்ள மாமரத்தினது, மேகங்கள் தவழ்கின்ற தலையில், உடைந்த மலைபோல்வனவாகிய அலைகள்மோதி மீள்கின்ற திருமறைக் காடேயாகும். 
723 சங்கைப்பட நினையாதெழு
நெஞ்சேதொழு தேத்தக்
கங்கைச்சடை முடியுடையவற்
கிடமாவது பரவை
அங்கைக்கடல் அருமாமணி
உந்திக்கரைக் கேற்ற
வங்கத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே.
7.071.5
மனமே, 'கங்கையைத் தாங்கிய சடைமுடியையுடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாவது, கடலினது கைகள் ஆகிய அலைகள் அக்கடலின்கண் உள்ள அரிய, சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு, கரைக்கு ஏற்புடைய மரக்கலத்தோடு சுறா மீனையும் கொணர்ந்து சேர்க்கின்ற திருமறைக்காடேயாகும்' அது பற்றி ஐயமாக நினையாது, அங்குச் சென்று அவனை வணங்கித் துதித்தற்கு ஒருப்படு. 
724 அடல்விடை யினன்மழுவா
ளினன்நல்ஆர் அணிகொன்றைப்
படருஞ்சடை முடியுடையவற்
கிடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினிற்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.
7.071.6
வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும். 
725 முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை யாளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே.
7.071.7
புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களை களைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற்கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல், வளைந்த சங்குகளோடு, சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும். 
726 நலம்பெரியன சுரும்பார்ந்தன
நங்கோனிட மறிந்தோம்
கலம்பெரியன சாருங்கடற
கரைபொருதிழி கங்கைச்
சலம்புரிசடை முடியுடையவற்
கிடமாவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே.
7.071.8
கங்கை நீரோடு திரித்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாய் நிற்பது, நற்பொருள்கள் மிக்கனவும், வண்டுகள் நிறைந்தனவும், பொயனவுமாகிய மரக்கலங்கள் பொருந்திய கடலினது கரையைமோதி மீள்கின்ற அலைகள், வலம்புரிச் சங்குகளையும், சலஞ்சலச் சங்குகளையும் கொணர்ந்து வீசுகின்ற திருமறைக்காடேயாகும். இதனை அறிந்தோமாகலின், நாம் நம் பெருமானது இடத்தை அறிந்தோமாயினோம். 
727 குண்டாடியுஞ் சமணாடியுங்
குற்றுடுக்கையர் தாமும்
கண்டார்கண்ட காரணம்மவை
கருதாதுகை தொழுமின்
எண்டோளினன் முக்கண்ணினன்
ஏழிசையினன் அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்ததெழு
மணிநீர்மறைக் காடே.
7.071.9
உலகீர், சிறிய உடையை உடைய சிலர்தாமும் மூர்க்கத் தன்மை பேசியும், சமண சமயக் கொள்கைகளை உரைத்தும் சில பொருள்களை, தம் குறையறிவாற் கண்டார்; எனினும், அவைகளைப் பொருளாக நினையாது, எட்டுத் தோள்களை உடையவனும், மூன்று கண்களையுடையவனும், ஏழிசைகளையுடையவனும் ஆகிய சிவபெருமானது, ஆறு கால்களையுடைய வண்டுகள் சூழ்கின்ற குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஓங்கும் நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காட்டைக் கைகூப்பித் தொழுமின்கள். 
728 பாரூர்பல புடைசூழ்வள
வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை
பங்கன்மறைக் காட்டை
ஆருரன தமிழ்மாலைகள்
பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர்
புகழாகுவர் தாமே.
7.071.10
கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திருமறைக்காட்டை, நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும், வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடுகின்ற, அப்பெருமானது திருவடித் தொண்டர்கள், நீர் சூழ்ந்த நிலத்தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.