LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-72

7.072.திருவலம்புரம் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வலம்புரநாதர். 
தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை. 
729 எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன் 
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும் 
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. 7.072.1
எனக்கு இனியவனும், தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும், எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம், பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள, 'திருவலம்புரம்' என்னும் தலமே. இதனை அறிந்தேனாகலின், எனக்கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந்தேனாயினேன். 
730 புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே. 7.072.2
திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும், புதியவனும், மரவுரியையும் புலித்தோலையும் அரையிற் பொருந்தியவனும், பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும், இரவின்கண் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே. 
731 நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு வேந்தியொர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே. 7.072.3
நீறணிந்த மேனியை யுடையவனும்., சினங் காரணமாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும், பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும், நீரை அணிந்த, ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய, இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே. 
732 கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம் படும்இடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல் லிடம்வலம் புரமே. 7.072.4
மலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண, நெருங்கிய, குளிர்ந்த, இளைய தென்னை மரங்களும், பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும், பெரியகடலினது அலைகள் கரையை மோத, தேவர்கள் தங்கியிருக்கும் இடமும், எங்கள் இறைவனது நல்ல இடமும், 'திருவலம்புரம்' என்னும் தலமே. 
733 கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதிள் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே. 7.072.5
கொடிய மழுவை எடுக்க வல்லவனும், கொலை பொருந்திய வில்லையுடையவனும், மூன்று பெரிய மதில்களை ஓர் இமைப்பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம், கடலில் உண்டாகின்ற மாணிக்கங்களையும், முத்துக்களையும், பவளங்களையும் மிகுதியாகத் தாங்கி நிற்கின்ற மணல் பொருந்திய கடற்கரையாகிய இடமும், திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே. 
734 கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே. 7.072.6
கரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம், நெருங்கிய, நீண்ட பனைமரங்கள், கயல் மீன்களோடும், அடும்பங் கொடிகளோடும் கலந்து நிற்கின்ற இடத்தின்கண், வலம்புரிச் சங்குகளும், சலஞ்சலச் சங்குகளும் தம் தம் பெண் சங்குகளோடு மணஞ்செய்து கொள்ளுதலைப் பொருந்தி, பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலமே. 
735 நரிபுரி காடரங் காநட மாடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம்
புரிசுரி வரிகுழல் அரிவைஒர் பான்மகிழ்ந்
தெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே. 7.072.7
நரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும், யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெருமானும், பின்னிய, சுரிந்த, கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து, எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே. 
736 பாறணி முடைதலை கலனென மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை யடிகள்தம் இடம்வலம் புரமே. 7.072.8
பருந்தைக்கொண்ட, முடைநாற்றம் பொருந்திய தலையை உண்கலமாகப் பொருந்தியவனும், நீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியை உடையவனும் இடபத்தை உடைய தலைவனும் ஆகிய இறைவனது இடம், விளங்குகின்ற, மாறிமாறியும் கூட்டமாயும் வருகின்ற அலைகளையுடைய கடலையும், வயல்களையும் அழகிய சோலைகளையும் உடையதாகிய, 'திருவலம்புரம்' என்னும் தலமே. 
737 சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம்வலம் புரமே. 7.072.9
தோல் ஆடையை உடுத்துக்கொண்டும், சாம்பலைப் பூசிக்கொண்டும் உலாவுகின்றவனும், இல்லங்களின் வாயில் தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினை உடையவனும் ஆகிய இறைவனது இடம், 'சடசட' என்னும் ஓசையை வெளிப்படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும்மிகுமாறு, இடிகின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலமே. 
738 குண்டிகைப் படப்பினில் விடக்கினை யொழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே. 7.072.10
கரகத்தையுடைய உறியை உடையசமணர்களது பொய்ம்மையை நன்குணர்ந்தவர்களும், உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும், ஒலிக்கின்ற கழலை அணிந்த, தண்டேந்தி நிற்கும் தண்டி முதலிய சிவகணத்தவர்களும் செய்கின்ற, 'அரகர' என்னும் ஓசையுடன், எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே. 
739 வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே. 7.072.11
கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய, அரிய தமிழ்ப் பாடலில் வல்ல, வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால், பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல், பெருமையைத் தருவதாம். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.