LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-86

7.086.திருவன்பார்த்தான்பனங்காட்டூர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது. 
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர். 
தேவியார் - அமிர்தவல்லியம்மை. 
872 விடையின்மேல் வருவானை 
வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை 
யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில்வா ளைகள்பாயும் 
வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச் 
சாராதார் சார்வென்னே.
7.086.1
இடபத்தின்மேல் ஏறி வருபவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், தன்னை அடைந்தால், அங்ஙனம் அடைந்தார்மாட்டு, அன்புடையனாகின்றவனும் ஆகிய, நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, யாவராலும் அறியவொண்ணாத, சடைமுடியின்கண் கங்கையைத் தாங்கியுள்ள பெருமானை அடையாதவரது அடைவுதான் என்னே! 
873 அறையும்பைங் கழலார்ப்ப
அரவாட அனலேந்திப்
பிறையுங்கங் கையுஞ்சூடிப்
பெயர்ந்தாடும் பெருமானார்
பறையுஞ்சங் கொலியோவாப்
படிறன்றன் பனங்காட்டூர்
உறையுமெங் கள்பிரானை
உணராதார் உணர்வென்னே.
7.086.2
ஒலிக்கின்ற, பசிய பொன்னாலாகிய கழல்கள் கலிப்பவும், அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும், கையில் நெருப்பை ஏந்தி, தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து கொண்டு, அடிபெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய, யாவராலும் அறியவொண்ணாமையிற் கள்வனாய், முழங்குகின்ற பறைகளும், சங்குகளும் ஒலித்தல் ஒழியாத, தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை உணராதாரது உணர்வுதான் என்னே! 
874 தண்ணார்மா மதிசூடித்
தழல்போலுந் திருமேனிக்
கெண்ணார்நாண் மலர்கொண்டங்
கிசைந்தேத்து மடியார்கள்
பண்ணார்பா டலறாத
படிறன்றன் பனங்காட்டூர்
பெண்ணாணா யபிரானைப்
பேசாதார் பேச்சென்னே.
7.086.3
குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேற் சூடி, கள்வனாய், நெருப்புப்போலும் தனது திருமேனிக்கு உரியனவாக எண்ணுதல் பொருந்திய, அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு, மனம் பொருந்தித் துதித்து வழிபடும் அடியார்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத, தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, பெண்ணும் ஆணும் ஆய உருவத்தினனாகிய பெருமானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே! 
875 நெற்றிக்கண் ணுடையானை
நீறேறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக்
கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றே றும்பிரானைப்
பேசாதார் பேச்சென்னே.
7.086.4
நெற்றியில் கண்ணை யுடையவனும், திருநீறு பொருந்திய திருமேனியை உடையவனும், குற்றம் இல்லாத இயல்பை யுடையவனும், கோடுதல் இல்லாதவரது மனத்தில் உள்ளவனும், பாம்பைப் பிடித்து அரையிற் கட்டிய கள்வனும் ஆகிய, தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற, எருது ஒன்றின்மேல் ஏறுகின்ற கடவுளைச் சொல்லாதவரது சொல்தான் என்னே! 
876 உரமென்னும் பொருளானை
உருகிலுள் ளுறைவானைச்
சிரமென்னுங் கலனானைச்
செங்கண்மால் விடையானை
வரமுன்னம்அருள்செய்வான்
வன்பார்த்தான்பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப்
பரவாதார் பரவென்னே.
7.086.5
'ஞானம்' என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும், உள்ளம் அன்பால் உருகினால், அதன் கண் நீங்காது தங்குகின்றவனும், தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும், சிவந்த கண்களை யுடைய பெரிய இடப வாகனத்தை உடையவனும், தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும், மேலானவனும் ஆகிய, திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே! 
877 எயிலார்பொக் கம்மெரித்த
எண்டோள்முக் கண்ணிறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி
மின்னாய்த்தீ யெனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த
வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக்கட்
பயிலாதார் பயில்வென்னே.
7.086.6
பொலிவு நிறைந்த சில மதில்களை எரித்தவனும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய கடவுளும், வெயிலாய்க் காய்ந்து, காற்றாய் வீசி, மின்னாய் மின்னி, தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய, மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற் பயிலாதவரது பயிற்சிதான் என்னே! 
878 மெய்யன்வெண் பொடிபூசும்
விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக்
காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை
அறியாதார் அறிவென்னே.
7.086.7
மெய்ப்பொருளாய் உள்ளவனும், வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற, வேறுபட்ட இயல்கினனும், வேதத்திற்குத் தலைவனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடைமுரிவித்தவனும், படத்தைக் கொண்ட பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும், யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே! 
879 வஞ்சமற்ற மனத்தாரை
மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியாளைப்
பாகம்வைத் துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட
வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங் கள்பிரானை
நினையாதார் நினைவென்னே.
7.086.8
வஞ்சனையற்ற தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும், பிறப்பில்லாதவனும், செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை யுடையாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய, மேகங்கள் பொருந்திய, மணிகள் இழைத்த மாடங்களையுடைய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரிலும், எங்கள் நெஞ்சத்திலும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே! 
880 மழையானுந் திகழ்கின்ற
மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க
உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர்
பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட்
குழையாதார் குழைவென்னே.
7.086.9
மேகம்போலும் நிறத்தினனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும் பணி செய்கின்றவராய் நினைந்து நிற்க, உயர்ந்த வானத்தினும் உயர்ந்து நிற்பவனும், எல்லாரினும் பழையவனும் ஆகிய, திரு வன்பார்த்தான் பனங்காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற, குழையணிந்த காதினையுடைய பெருமானுக்குத் தொண்டுபடுதலில் மனம் நெகிழாத வரது மனநெகிழ்ச்சிதான் என்னே! 
881 பாரூரும் பனங்காட்டூர்ப்
பவளத்தின் படியானைச்
சீரூருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் னடித்தொண்டன் 
அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார் 
உயர்வானத் துயர்வாரே.
7.086.10
தனது பெயா நிலம் முழுதும் பரவிய திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற பவளம் போலும் உருவத்தையுடைய பெருமானை, புகழ்மிக்க திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள, அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் அடியவனாகிய, அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள், அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும் சிவலோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.