LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-89

7.089.திருவெண்பாக்கம் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது. 
சுவாமிபெயர் - வெண்பாக்கத்தீசுவரர். 
தேவியார் - கனிவாய்மொழியம்மை. 
902 பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்
துளோம்போகீர் என்றானே.
7.089.1
'குழை பொருந்திய, தூங்குங்காதினை உடையவனே, நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம் பெருமானார் பொறுத்துக்கொள்வார் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால், அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும் பழியை நினையாமலே நீ என் கண்ணைப் படலத்தால் மறைத்து விட்டாய்; இதுபோது இக்கோயிலினுள்ளே இருக்கின்றாயோ?' என்று யான் வினாவ, மானை ஏந்திய அவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! 
903 இடையறியேன் தலையறியேன்
எம்பெருமான் சரணம்என் பேன்
நடையுடையன் நம்மடியான்
என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்
வெண்ணீற்றன் புலியின்தோல்
உடையுடையான் எனையுடையான்
உளோம்போகீர் என்றானே.
7.089.2
யான் யாதொரு செயலிலும் 'முதல் இன்னது; நடு இன்னது; முடிவு இன்னது;' என்று அறியேன்; 'எம் பெருமானே எனக்குப் புகலிடம்; ஆவது ஆகுக' என்று கவலையற்றிருப்பேன்; அதனையறிந்திருந்தும், இடப வாகனத்தை யுடையவனும், விடம் பொருந்திய பாம்பை அணிந்தவனும், வெண்மையான நீற்றைப் பூசுபவனும், புலியின் தோலாகிய உடையை உடையவனும், என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன், 'இவன் நம்மையே அடைக்கலமாக அடைதலை யுடையவன்; நமக்கு அடியவன்' என்ற முறைமைகளை நினையாமலே, "உளோம் போகீர்" என்று சொன்னானன்றே; இதுவோ அவனது கண்ணோட்டம்! 
904 செய்வினையொன் றறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா
யோஎன்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே.
7.089.3
படத்தையுடைய பாம்பை அணிந்தவனே, 'உனது திருவடியே புகல்' என்று கருதி, 'செய்யத்தக்க செயல் இது; தகாத செயல் இது' என்பதைச் சிறிதும் அறியாத பொய்யடியேனாகிய யான்,அறியாமையாற் பிழைசெய்தேனாயினும், பொறுத்தல் உனக்குக் கடமையன்றோ; அங்ஙனம் பொறுத்து எனக்கு அருள் பண்ணாமையின், நீ இங்கே இருக்கின்றாயோ' என்று யான் உரிமையோடு வினாவ, எப்பொழுதும் என்மேல் அருள்கூர்ந்து, என்னை உய்யுமாறு தன் திருவருளைச் செய்ய வல்ல எம்பெருமான், இதுபோது, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே; இதுவோ அவனது கண்ணோட்டம்! 
905 கம்பமருங் கரியுரியன்
கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே யிருந்தாயே
என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு
ளோம்போகீ ரென்றானே.
7.089.4
'நம்பியே, நீ, செவ்விய அணியினை யுடைய மலை மகளோடு உடனாயினவன் ஆதலின், இருவீரும் இங்கே இருக்கின்றீர்களோ' என்று நான் வினவ, அசைதல் பொருந்திய யானையினது தோலையும் கறுத்த கண்டத்தையும், கபாலத்தையும், செவ்விய பவளம்போலும் உருவத்தையும் உடையவனும், தேவர்களுக்கு ஒப்பற்ற துணைவனும் ஆகிய இறைவன், எனக்கு, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! 
906 பொன்னிலங்கு நறுங்கொன்றை
புரிசடை மேற்பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள்
பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார்
தொழுதேத்த அடியேனும்
உன்னமதாய்க் கேட்டலுமே
உளோம்போகீர் என்றானே.
7.089.5
பொன்போல விளங்குகின்ற, நறுமணம் பொருந்திய கொன்றைமலர், சடையின்மேற் பொருந்துதலால், மேலும் பொலிவுற்று விளங்க, மின்னலினது தன்மை விளங்குகின்ற நுண்ணிய இடையினை உடையவள் ஒருபாகத்தில் இருக்க, எருதை ஏறுபவனாகிய சிவபெருமானை, இருபாலும் அடியார்கள் நெருங்கி, வணங்கித் துதிக்க, யானும் உயர்ந்த முறைமையினாலே, 'கோயிலுளாயே' என்று கேட்க, அவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! 
907 கண்ணுதலால் காமனையுங்
காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்
தீமலர்ந்த கொன்றையினான்.
கண்மணியை மறைப்பித்தாய்
இங்கிருந்தா யோஎன்ன
ஒண்ணுதலி பெருமான்றான்
உளோம்போகீர் என்றானே.
7.089.6
யாவரையும் வெல்லுகின்ற காமனையும் தனது நெற்றிக்கண்ணால் எரித்த ஆற்றலையுடைய, கங்கை விளங்குகின்ற, தௌளிய நிலவை அணிந்த சடையின்மேல் தீயின்கண் மலர்ந்தது போலத் தோன்றுகின்ற கொன்றை மலரை உடைய பெருமானை, அடியேன், 'என் கண்மணியை மறைப்பித்தவனே, இங்கு இருக்கின்றாயோ?' என்று வினவ, ஒள்ளிய நெற்றியையுடைய வளாகிய உமையம்மைக்குத் தலைவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! 
908 பார்நிலவு மறையோரும்
பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்
சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்
ஈங்கிருந்தீ ரேஎன்ன
ஊரரவம் அரைக்கசைத்தான்
உளோம்போகீர் என்றானே.
7.089.7
'மாலையாகப் பொருந்திய மணம் உடைய கொன்றைப் பூவை அணிந்த சடையை உடையவரே, தாங்குதற்கரிய நஞ்சுபொருந்திய, நீலமணிபோலும் கண்டத்தையுடையவரே, நீர், மண்ணுலகிற் பொருந்திய அந்தணர்களும், அடியவர்களும் பணிசெய்ய இங்கு இருக்கின்றீரோ? என்று யான் வினவ, ஊர்கின்ற பாம்பை அரையிற்கட்டிய இறைவன், 'உளோம்; போகீர்' என்றானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! 
909 வாரிடங்கொள் வனமுலையாள்
தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்
பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்
கருதுமிடந் திருவொற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான்
உளோம்போகீர் என்றானே.
7.089.8
கச்சினது இடம் முழுவதையுங் கொண்ட அழகிய தனங்களை யுடையவளாகிய உமையோடு, பூதங்கள் பல சூழ, முதுகாட்டிற் பலகாலும் ஆடுகின்ற, மேலான நிலையில் உள்ளவனும், கருமை நிறம் தனக்கு இடமாகக் கொண்ட கண்டத்தை யுடையவனும், நான் விரும்பும் இடமாகிய திருவொற்றியூரையே தனக்கு இடமாகக் கொண்டவனும் ஆகிய இறைவன், யான் வினவியதற்கு, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! 
910 பொன்னவிலுங் கொன்றையினாய்
போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே
சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தா யோஎன்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்
உளேஉளோம்போகீர் என்றானே.
7.089.9
"பொன்போலுங் கொன்றை மலரை அணிந்த பெருமானே, நீ, கோயிலை விட்டுப்போய் மகிழ மரத்தின் கீழ் இரு" என்று சொன்ன என்னை, அதன் பொருட்டுக் காணாமலே, சங்கிலியிடம் சென்று, 'சூளுறவு, மகிழ மரத்தின் கீழே ஆகுக' என்று சொல்ல வல்ல பெருமானே, நீ, இங்கு இருக்கின்றாயோ என்று யான் வினவ, எம்பெருமான், என்னை, பகைவரைக் கண்டாற்போல வெறுத்து, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்! 
911 மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே.
7.089.10
'மான் போல விளங்குகின்ற சங்கிலியை எனக்கு ஈந்து, அதனால் உளவாகின்ற பயன்களெல்லாம் எனக்கு நன்கு விளங்கும்படி திருவருள் செய்து காத்தாய்' என்று சொல்லுதற்கு, 'உலகத்தையெல்லாம் பெற்ற தந்தையே, வெண்கோயிலாகிய இவ்விடத்தில் நீ இருக்கின்றாயோ' என்று யான் வினவ, எம் பெருமான், ஊன்றுவதாகிய ஒருகோலை அருளி, 'உளோம்; போகீர்' என்றா னன்றே! இத்துணையது தானோ அவது கண்ணோட்டம்! 
912 ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடற்றானைக்
காதலித்திட் டன்பினொடும்
சீராருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லாக்
கடையாவல் வினைதானே.
7.089.11
புகழ் நிறைந்த திருவாரூரில் உள்ள சிவ பொருமானது திருப்பெயரைத் தலையில் வைத்துள்ள நம்பியாரூரன், அழகுநிறைந்த சோலைகள் விளங்குகின்ற திருவெண்பாக்கத்தை இடமாகக் கொண்ட, கருமை நிறைநத கண்டத்தை யுடையவனை மிக விரும்பி, அன்போடும் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்மேல், வலிய வினைகள் வந்து சாராவாம். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.