LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-97

7.097.திருநனிபள்ளி 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நற்றுணையப்பர். 
தேவியார் - பர்வதராசபுத்திரி. 
985 ஆதியன் ஆதிரையன் அயன் 
மாலறி தற்கரிய
சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் 
காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங்கோன் உல 
கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும் 
ஊர்நனி பள்ளியதே.
7.097.1
எப்பொருட்கும் முதலானவனும், ஆதீரை நாண்மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும், பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளிவடிவானவனும், சொல்லும் சொற்பொருளுமாய் நின்று, சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும், தேவர்களுக்குத் தலைவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே. 
986 உறவிலி ஊனமிலி உண 
ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினைவார் வினை 
யாயின தேய்ந்தழிய
அறவில கும்மருளான் மரு 
ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையினான் நண்ணும் 
ஊர்நனி பள்ளியதே.
7.097.2
உறவுத் தொடக்கு இல்லாதவனும், குறைவில்லாதவனும், தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும், தன்னை நினைபவரது வினையெல்லாம் வலிமை குன்றி அழியும்படி, மிகவும் விளங்குகின்ற திருவருளை உடையவனும், தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே. 
987 வானுடை யான்பெரியான மனத 
தாலும் நினைப்பரியான்
ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு 
வாகியொர் தீயுருக்கொண்
டூனுடை இவ்வுடலம் ஒடுங் 
கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம்பிரான் நண்ணும் 
ஊர்நனி பள்ளியதே.
7.097.3
விண்ணுலகத்தைத் தனதாக உடையவனும், யாவரினும் பெரியோனும், மனத்தாலும் நினைத்தற்கரியவனும், பசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும், நுண்ணிய பொருளாகி, சுடர் வடிவத்தைக்கொண்டு, ஊனையுடையதாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும், உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும், நான் உடைய செல்வமாய் இருப்பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனிபள்ளியே. 
988 ஓடுடை யன்கலனா உடை 
கோவண வன்னுமையோர்
பாடுடை யன்பலிதேர்ந் துணும் 
பண்புடை யன்பயிலக்
காடுடை யன்னிடமா மலை 
ஏழுங் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெருமான் நண்ணும் 
ஊர்நனி பள்ளியதே.
7.097.4
ஓட்டினை உண்கலமாகவும், கோவணத்தை உடையாகவும், உடையவனும், ஒரு பக்கத்தில் உமையை உடையவனும், பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும், வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும், ஏழு மலைகளையும், கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே. 
989 பண்ணற் கரியதொரு படை 
ஆழி தனைப் படைத்துக்
கண்ணற் கருள்புரிந்தான் 
கரு தாதவர் வேள்விஅவி
உண்ணற் கிமையவரை 
உருண் டோட உதைத்துகந்து
நண்ணற் கரியபிரான் நண்ணும் 
ஊர்நனி பள்ளியதே.
7.097.5
ஆக்குதற்கு அரிதாகிய சக்கரப்படை ஒன்றை ஆக்கி, அதனைத் திருமாலுக்கு அளித்தவனும், தன்னை மதியாதவனாகிய தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து, ஒருவராலும் அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே. 
990 மல்கிய செஞ்சடைமேல் மதி 
யும்மர வும்முடனே
புல்கிய ஆரணன்எம் புனி 
தன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய விற்றொழிலான் விருப் 
பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான் நண்ணும் 
ஊர்நனி பள்ளியதே.
7.097.6
நிறைந்த, சிவந்த சடையின்மேல், சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும், எங்கள் தூயோனும், முப்புரி நூலையணிந்த, வேறுபட்ட தன்மையை உடையவனும், தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு, மெல்லிய வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே. 
991 அங்கமொ ராறவையும் அரு 
மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந்தணர் எரி 
மூன்றவை யோம்புமிடம்
பங்கய மாமுகத்தாள் உடை 
பங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும்வயல் திரு 
வூர்நனி பள்ளியதே.
7.097.7
தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம், அந்தணர்கள் மூன்று எரிகளோடே, ஆறு அங்கங்களையும், அரிய வேதங்களையும், வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய, செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனிபள்ளியே. 
992 திங்கட் குறுந்தெரியல் திகழ் 
கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளைவான் அரு 
மாமருந் தேழ்பிறப்பும்
மங்கத் திருவிரலால் அடர்த் 
தான்வல் அரக்கனையும்
நங்கட் கருளும்பிரான் நண்ணும் 
ஊர்நனி பள்ளியதே.
7.097.8
சிறிய பிறையாகிய, விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும், நுண்ணியனாய் நின்று, எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி, நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற, உயர்ந்த அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும், வலிய அரக்கனாகிய இராவணனையும், அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய, நமக்கு அருள்செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே. 
993 ஏன மருப்பினொடும் எழில் 
ஆமையும் பூண்டுகந்து
வான மதிள்அரணம் மலை 
யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன்னுள் ளுயர் 
ஞானசம் பந்தர்க்கன்று
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் 
ஊர்நனி பள்ளியதே.
7.097.9
பன்றியின் கொம்பையும், அழகிய ஆமையோட்டையும் விரும்பியணிந்து, வானத்திற்செல்லும் மதிலாகிய அரணின்முன், மலையையே வில்லாக வளைத்து நின்றவனும், குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே. 
994 காலமும் நாள்கழியுந் நனி 
பள்ளி மனத்தின்உள்கிக்
கோலம தாயவனைக் குளிர் 
நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப்பார் மண் 
மறந்துவா னோர்உலகில்
சாலநல் லின்பமெய்தித் தவ 
லோகத் திருப்பவரே.
7.097.10
காலமும் நாள்தோறும் கழியாநிற்கும், அதனால், குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன், கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர், தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து, பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து, சிவலோகத்தில் இருப்பவரே யாவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.