LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-52

6.052.திருவீழிமிழலை 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். 
தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 
2605 கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்
கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலா னான்காண்
பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.1
திருமாலால் விண்ணுலகிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பெற்ற விமானத்தை உடைய குளிர்ந்த வீழிமிழலையில் உள்ள பெருமான், கண்ணாய் கண்ணினது ஒளிசேர்தலால் உண்டாகும் காணுதல் தொழிலாய்ப் பாட்டின்கண் உள்ள இசையாகிய இலக்கியத்தில் வைத்துக் காட்டப்படுகின்ற பண்ணாய், அப்பண்களின் உட்பிரிவுகளாய்ப் பழமாய்ச் சுவையாய்ப் பயன்தருகின்றவனாய், மண், நீர், தீ எல்லாவற்றையும் அசைக்கும் காற்று, நீர் உட்கொண்ட மேகம் சேரும் வானம் என்ற ஐம்பூதங்களாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய் உள்ளான்.
2606 ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.2
விண்ணிழி தண் வீழிமிழலையான் ஆலையினின்றும் ஒழுகுகின்ற கரும்பின் சாறு போலத்தித் திக்கும் திருவைந் தெழுத்தைத் தனக்குப் பெயராக உடையவனாய், நற்பண்புடைய அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவனாய், வானில் திரியும் மும் மதில்களையும் தீக்கு இரையாக்கிய வில்லை உடையவனாய், பால், தயிர், நெய் இவற்றால் அபிடேகிக்கப்படுபவனாய், பண்டரங்கக் கூத்தாடுபவனாய், சாம்பலை உடல் முழுதும் பூசியவடிவினனாய்ப் பிச்சை எடுப்பவனாய், கடல் விடம் உண்டதால் நீலகண்டனாய் உள்ளான்.
2607 தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
சக்கரம்புட் பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபாலிகாண்
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.3
விண்ணிழிதண் வீழிமிழலையான் தண்மை வெம்மை என்ற இரு திறமும் உடையவனாய்த் திருமாலுக்குச் சக்கரத்தை அருளியவனாய், மூன்று கண்களை உடையவனாய், காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காமன் உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணனாய், என் உள்ளத்தில் இருந்த சமண சமயப் பற்றினைநீக்கி என்னை ஆட்கொண்டவனாய், பிரமன் திருமால் இருவருக்கும் தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கியவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு உள்ளான்.
2608 காதிசைந்த சங்கக் குழையி னான்காண்
கனக மலையனைய காட்சி யான்காண்
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்
வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
ஐந்தலைமா நாகம்நாண் ஆக்கி னான்காண்
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.4
விண்இழி தண் வீழிமிழலையான்காதில் சங்கக் குழை அணிந்தவனாய்ப் பொன்மலை போன்ற உருவத்தானாய்ப் பார்வதியின் மேம்பட்ட தவத்தைச் சோதித்தவனாய், வலிய பன்றியின் வெள்ளிய கொம்பினை அணியாக அணிந்தவனாய், எல்லாவற்றிற்கும் முற்பட்டவனாய், அண்டங்களையும் கடந்து பரந்தவனாய், ஐந்தலைப்பாம்பினைத் தன் வில்லுக்கு நாணாகக் கொண்டவனாய், வேதம் ஓதுபவனாய், வேத நெறியை உலகிற்கு உபதேசித்தவனாய் உள்ளான்.
2609 நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமா னேந்தி னான்காண்
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.5
விண்இழி தண்வீழிமிழலையான்நெய், பால், இளநீர் இவற்றால் அபிடேகிக்கப்பட்டவனாய், நித்திய கல்யாணனாகக் காட்சி வழங்குகின்றவனாய், கைகளில் மழுவும் மானும் ஏந்தியவனாய்க் காலன் உயிரைத்தன் காலால் போக்கியவனாய்ச் சிவந்த அழகிய திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய்ச் செஞ்சடைமேல் வெண்பிறையைச் சேர்த்தியவனாய், சூடான தீயில் கூத்தாடுபவனாய் உள்ளான்.
2610 கண்துஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
கண்ணிடந்து சூட்டக்கண் டருளுவான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
வான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்
பண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.6
விண்இழிதண் வீழிமிழலையான்எப்பொழுதும் அறிதுயில் கொள்ளும் திருமால் தனக்குச் சக்கராயுதம் வேண்டுமென்று செந்தாமரை போன்ற தன் கண் ஒன்றனைக் குறைந்த மலராகக் கொண்டு அருச்சித்த அதனைக்கண்டு அவனுக்குச் சக்கரம் அருளியவனாய், வண்டுகள் உண்ணும் தேனை உடைய கொன்றை, வன்னி, ஊமத்தை என்னும் இவற்றை ஆகாய கங்கையோடு சடையில் மறைத்த பெரியதேவனாய், பண்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய், மேம்பட்டவனாய், உயர்ந்த இடத்தில் இருப்பவனாய்ப் பிறையைப் பாம்போடு சடையில் வைத்தவனாய், அடியார் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றான்.
2611 கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.7
விண்இழிதண் வீழிமிழலையான் மலைபோல விளங்கிய தோள்களை உடைய சலந்தரன் என்ற அசுரனுடைய உடலைப்பிளந்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு வழங்கிய கருணையாளனாய், வில் விளங்கும் தோளை உடைய அருச்சுனன் வலிமையைக் குறையச் செய்து வேடுவனாய் அவனோடு போர் செய்து தன் போர்த் திறமையைக் காட்டியவனாய், மாயையின் மேம்பட்டதாகிய உயிரினும் மேம்பட்ட பொருளாய் இருக்கின்றவனாய்ச் சதாசிவனாய், ஒப்பற்றவனாய், பார்வதியைத் தானும் விரும்பி அவளால் விரும்பப்படுபவனாய் இருப்பவனாவான்.
2612 மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன் காண் புத்தன் மறவா தோடி
யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.8
ஞானிகள் விரும்பிப்போற்றும் விண்இழிதண் வீழிமிழலையான் உண்மையான தவத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உள்பொருளாய் விளங்குபவனாய்த் தன் இடத்து விருப்பம் இல்லாத இரும்புபோன்ற கடிய மனத்தவர்களுக்குத் தன் உருவத்தைக் காட்டாது மறைந்தே இருப்பவனாய், சாக்கியநாயனார் மறவாமல் இடும் சிறு கற்களைப் புதிய மலர்களாக ஏற்பவனாய், தன்னைத் தியானித்தவர்களை உயர்கதிக்கண் செலுத்துபவனாய், உலகங்களை அழித்துப்படைத்துக் காக்கும் திறல் உடையோனாய் உள்ளான்.
2613 சந்திரனைத் திருவடியால் தளர்வித் தான்காண்
தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண்டான்காண்
இந்திரனைத் தோள்முரிவித் தருள்செய் தான்காண்
ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.9
விண்இழிதண் வீழிமிழலையான்தக்கன் வேள்வியில் சந்திரனைத் திருவடியால் தேய்த்துத் தக்கனை வெகுண்டு எச்சன் தலையை நீக்கி இந்திரனுடைய தோள்களை ஒடித்துப்பின் அவர்களுக்கு அருள் செய்தவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், தன்னை விருப்போடு நினைப்பவர்களுக்கு அன்பனாய், மந்திரமும் வேதப்பொருளும் ஆயினானாய்ப் பிரமனும் திருமாலும் மேலும் கீழும் அறியாவண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவனாய் உள்ளான்.
2614 ஈங்கைப்பே ரீமவனத் திருக்கின்றான்காண்
எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த்தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவையோடும்
ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க்கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்
கொல்லேறு வெல்கொடி மேற் கூட்டினான் காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
6.052.10
விண்இழிதண் வீழிமிழலையான்இண்டங் கொடிகள் அடர்ந்த சுடுகாட்டில் இருப்பவனாய், எங்கள் தலைவனாய், யானைத்தோலைப் போர்த்தியவனாய்ப் பார்வதியோடு ஒரே உருவமாய் நின்றவனாய், ஓங்காரவடிவினனாய், கோங்கு கொன்றை ஆகிய மாலையை உடையவனாய்க் காளை எழுதிய கொடியை உடையவனாய், வேங்கைத்தோலை மேலாடையாகக் கொண்டவனாய் உள்ளான்.

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.