LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தோல் பராமரிப்பு (Skin Care)

வெண்புள்ளிகளுக்கு தீர்வு -அனுபவப் பகிர்வு

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த leukoderma என்று சொல்லக்கூடிய இந்த வெண்புள்ளிகள் காரணமாக வெளியில் செல்ல அவமானப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். எந்த உறவினர் வீட்டு நல்லதுக்கும் கெட்டதுக்கும் சென்றது இல்லை. தாழ்வு மனப்பான்மை. உலகில் பலகோடி மக்கள் இருக்கும் போது நமக்கேன் இது போன்ற ஒரு புள்ளிகள் உடல் முழுவதும் என மன உளைச்சல். எங்கெங்கெல்லாம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். சென்னையில் நான் சந்திக்காத பிரபல ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளே இல்லை டாக்டர் தம்பைய்யா உட்பட.


அல்லோபதி மருந்துகள் பக்க விளைவுகளைக் கொடுத்ததோடல்லாமல் முகத்தின் நிறத்தையே கருப்பாக மாற்றி விட்டது.


ஒரு சூழ்நிலையில் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தேன். இப்படியே எத்தனை நாள் முடங்கிக்கிடப்பது. இது ஒருநோய் அல்ல சருமத்தில் மெலோனின் திசுக்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அழிந்துவிடுகின்றது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை இது தொற்றுநோயும் அல்ல குடும்ப வாரிசுகளுக்கும் பாதிப்பில்லை என்றுணர்ந்தேன்.


அதன் பின்னர்தான் வெளியிடங் களுக்கு செல்ல ஆரம்பித்தேன். இதனைப்பற்றி அறியாதவர்கள் கைகுலுக்கக் கூட தயக்கம் காட்டினார்கள். உணவங்களில், பேருந்துகளில், இரயில்களில் அருகருகே உட்கார வந்து என்னைப் பார்த்தவுடன் வேறு இடத்திற்கு போய் விடுவார்கள். 


மனம் குறுகிப் போகும். ஏன் இப்படி என்று கேள்விகள். அதன் காரணமாக மன அழுத்தம். ஆனால் உள்ளே எவ்வளவோ நோய்களை வைத்துக் கொண்டு மனிதர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். நமக்கு என்ன நோயா வந்துவிட்டது என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். என்குடும்பம்என்னை ஆரம்பம் முதல் நிராகரிக்கவில்லை. இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு கவலைப்படவும் இல்லை. அந்த வகையில் மகிழ்ச்சியானேன்.


அதன் பின்னர் வெளியிடங்களுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் சென்று வந்தேன். யாராவது என்னை சற்று உற்றுப் பார்த்தால் அவர்களை அழைத்து இது நோயல்ல என்று சொல்லி விட்டு வருவேன்.


அதன் பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் Defence research development organisation (DRDO) இதற்கென ஒரு மருந்தினை கண்டு பிடித்தார்கள். முற்றிலும் மூலிகையால் ஆனது. வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஏறத்தாழ 70 சதவீதம் வெண்புள்ளிகள் மறைந்து விட்டது.


பெண்ணின் திருமணம் என்னுடைய இந்தத் தோற்றம் தடை ஏற்படுத்துமோ எனப் பயந்தேன். ஆனால் நல்லபடியாக மகளின் திருமணமும் நடந்தேறியது. இன்னும் பெரும்பாலான மக்களுக்கு இது நோய் அல்ல தோலின் நிறம் மட்டும் வெள்ளை நிறமாக மாறுகின்றது என்று நினைப்பதில்லை. இந்த வெண்புள்ளிகள் இருப்போரை தீண்டத்தகாத வர்களைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றது இந்த சமூகம். நகர்ப்புறங்களில் இது சற்று மாறி உள்ளது. கிராமப்புறங்களில் இது பற்றிய விழிப்புணர்வு துளியும் இல்லை.


இந்த வெண்புள்ளிகள் உடலில் இருக்கும் சில திருமண வயதுடையவர்களுக்கு இதனால் திருமணத் தடையும் ஏற்படுகின்றது. திருமணத்திற்கு பின்னர் இதனால் எந்தப் பிரச்சனையும் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. மத்திய அரசின் இந்த மூலிகை மருந்து இந்த வெண் புள்ளிகளுக்கு நல்ல பலன் அளிக்கின்றது.


எது எப்படி இருந்தாலும் எனது விருப்பம் என்னவென்றால் நான் பிறக்கும் போது எந்த நிறத்தில் பிறந்தேனோ அந்த நிறத்திலே என் இறுதிக் காலத்திற்குள் நிறம் முற்றிலும் மாறவேண்டும் என்பதே! நிச்சயம் எனது விருப்பம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.


அரசும், மருத்துவமனைகளும், சமூக நலஅமைப்புகளும் பொதுமக்களுக்கு இந்த வெண் புள்ளிகள் பற்றிய விழிப்புணர்வினை நாடு முழுவதும் ஏற்படுத்தவேண்டும்.


'வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்' என்ற ஒன்றை எனது நண்பர் திரு. உமாபதி நாடெங்கிலும் நடத்தி வருகின்றார். இதற்கான மருந்துகளையும் (DRDO) வழங்கி வருகின்றார். அவரும் ஆரம்பகாலத்தில் என்னைப்போன்றே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர் தான். இன்று இந்த இயக்கத்தில் முழுமூச்சாக செயல்பட்டு இந்தவெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயம்வரம் கூட ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகின்றார். சில சமயங்களில் நானும் கலந்துகொள்வதுண்டு. அவரது பணியைப் போன்றே இன்னும் பலர் இந்த வெண்புள்ளிகள் என்பதுநோயல்ல எனும் விழிப்புணர்வினை நாடெங்கிலும் ஏற்படுத்தவேண்டும்.


---------------


மருந்தின் பெயர் LUKOSKIN. இம்மருந்தின் விலை ரூ1915/- மூன்று பாட்டில்களில் மருந்தும் 3 ட்யூப்களில் ஆயின்ட்மென்டும் கொண்ட பெட்டி இது. 45 நாட்களுக்கு குறையாமல் பயன்படுத்த முடியும். தாம்பரம் பேருந்து நிலையம் அடுத்துள்ள ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்குசெமினார் நடைபெறுகின்றது. மருந்துகளும் அங்கே வழங்கப்படுகின்றது. மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தும் போது தவிர்க்கவேண்டிய உணவுகள் பற்றிய முழு விவரம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு திரு.உமாபதி அவர்களின் நெம்பர் 044-22265507.

See the link in the comment.. DRDO handed over the project to AIMIL Pharmacheuticals India Ltd...


http://www.aimilpharmaceuticals.com/


-------------------


நன்றி; திரு.உதயகுமார் 


https://www.facebook.com/photo.php?fbid=688024447954664&set=a.107817302642051.15919.100002413464842&type=1&fref=nf


DRDO மருந்து விபரம் குறித்து அறிய:


http://www.aimilpharmaceuticals.com/index.php?option=com_content&task=view&id=18&Itemid=21

 

by Swathi   on 12 Sep 2014  9 Comments
Tags: Lukeskin Issue   Ven Pulli   வெண் புள்ளி              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா
நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை)
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !! இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!
சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..
கருத்துகள்
27-Dec-2017 19:02:08 ravi said : Report Abuse
நீங்கள் கெடுக்கும் மருந்து சாப்பிட்டு வதா வெல்ளை தோல் மீது தடவுவதா
 
05-Aug-2017 10:48:35 janaki said : Report Abuse
உ த டு வெள்ளையாக இருக்கிறது என்ன பண்டுவது மருந்து இருக்கிறதா என்ன சாப்பிடுவது மேடம்
 
29-Apr-2017 03:29:04 deepa said : Report Abuse
லிப்ஸ் ல கொஞ்ச இடம் மட்டும் வெள்ளையா இருக்கு அதுக்கு என்ன பண்ணணும்
 
12-Oct-2016 07:34:58 renuga said : Report Abuse
ஐயா என் அண்ணனுக்கு 5 வருடமாக இந்த பிரச்னை உள்ளது இதனால் திருமணமும் தடை படுகிறது. வேலைக்கு செல்லவும் கடினமாக உள்ளது. சுயம்வரம் பற்றி கூறவும். வழி காட்டுங்கள் ஐயா.
 
11-Sep-2016 04:24:40 sureshkumar said : Report Abuse
சார் எனக்கு வெண்புள்ளியை குணப்படுத்தவேண்டும் ஏய்ப்போடுதான் வருது வருவத்துக்கு முன்னாடி மேடிசன் வேண்டும்
 
20-Aug-2016 07:40:16 Rishannthi said : Report Abuse
சார் எனக்கு 5 மாதமா வெண்புள்ளி இருக்கு நான் நிறைய மருத்துவம் செஞ்சுட்டேன் இன்னும் எனக்கு சரியாகவில்லை எனக்கு 16 வயது இதுக்கு என்ன வலின்னு சொல்லுங்க
 
04-Aug-2016 11:44:40 Murthy k said : Report Abuse
Venpulli iruku sir ennaku 6years sa but athu oru place la tha erunthuthu eppa 5months la light ha parava aramichidichi sir .so enna ku ethuku enna treatment nu sollunga please sir.
 
10-May-2016 05:59:55 அ.dhatchayini said : Report Abuse
எனக்கு 5 வருடமக வெண்புள்ளி இருந்து வருகிறது .நான் இதற்காக நிறிய மருத்துவம் முறைகள் பயன்படுத்தினான் ஆனால் இன்னும் எனக்கு இந்த வெண்புள்ளி சரியாகவில்லை இதனனால் என்னால் வலைக்கு குட சல்ல முடியவில்லை இந்த பிரச்சனை சரியாக எனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்ம்புகிரன் இந்த மருந்தினால் எனக்கு எந்த விதமன சைடு எபபோர்ட்ம் வரரத என்ம்பது என்னுடைய கள்ளவி இதரகு தயவு செய்து பதில் அளியுங்கள் சார் என் வயது 21 .இதனால் என் பரந்த்ஸ் மிகவும் கவலைபடுகின்றன்ர்
 
31-Dec-2015 18:35:26 Senthil said : Report Abuse
தேங்க்ஸ் போர் குட் information
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.