LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி பகுதி -2

 

5.மந்திரசாலைச் சருக்கம்
அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா
ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார் 233
மந்திரசாலையின் அமைப்பு
உள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப்
புள்ளுமல் லாதவும் புகாத நீரது
வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
வள்ளறன் மந்திர சாலை வண்ணமே 234
அரசன் பேசத் தொடங்குதல்
ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்
பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்
வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே 235
வேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்
மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றா
ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே 236
அமைச்சர் மாண்பு
வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர் 237
அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே
சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டி
வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனு
மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு
மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே 238
அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்
வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே
தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர்
பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்
பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே 239
அரசன் முகமன் பொழிதல்
அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு
மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே 240
அரசனும் அமைச்சர்களும்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி
அறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார் 241
தோள்வலியும் சூழ்ச்சியும்
வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்
ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்
கோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான் 242
சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்
ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்
சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ ன்று மன்றே
யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே 243
சூழ்சியே அரசன் ஆற்றல்
ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே 244
இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்
வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க்
கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை
கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா
மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே 245
சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்
சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை
தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே 246
அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்
எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு
மடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல
வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி
கொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே 247
உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்
மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய
பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை
யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான் 248
அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்
கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்கு
நங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்
தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்
சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே 249
அமச்சர்கள் பதிலுரைத்தல்
இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
யறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே
நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார் 250
சச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்
பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்
துணிந்துதன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்ல லுற்றான்
இணந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற
அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே 251
சூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்
பொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந்
தொழிற்கதிர்க் கடவு டோ ன்றச் சூரிய காந்தமென்னும்
எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே
அழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே 252
அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்
கோணைநூற் றடங்க மாட்டக் குணமிலார் குடர்க ணைய
ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே
பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்
பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான் 253
திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்
சூழ்கதிர் தொழுதி மாலைச் சுடர்பிறைக் கடவு டோ ன்றித்
நாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்
வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே
போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய் 254
நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்
கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு
தண்ணளித் தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலே
மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்
விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே 255
பொறுமையின் பெருமை
கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுந்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே 256
அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்
நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ ?
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்
அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே 257
இதுவுமது
மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்
விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்
கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்
தண்குளிர் கொள்ளு மேனுத் தாமிக வெதும்பு மன்றே 258
அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை
தீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே 259
அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை
மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
விரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய் 260
ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே
திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி
இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்
பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே 261
உலகத்திற்குக் கண்கள் மூன்று
கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்
எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா 262
இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்
குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்
படிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார்
முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
அடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே 263
அரசர்களைப்போல மக்கள் இலர்
தண்சுடர் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமே
விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல
மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய்
கண்சுடர் கனலச் சீறுங் கமழ்கடாக் களிற்று வேந்தே 264
அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்
அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற்
பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய் 265
விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்
அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி
இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான் 266
அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது
மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம்
உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்
அருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய்
இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான் 267
சூழ்ச்சியின் மாண்பு
உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து
விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்
கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்
எரிதவழ்ந் திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான் 268
இதுவுமது
பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து
மஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்
வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய் 269
செய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்
கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து
முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள்
இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்
கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே 270
செவ்வி கேட்டல்
தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த
பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்கும்
வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை
யான்மகிழ் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான் 271
வேறு - விஞ்சையர் சேடி வண்ணனை
மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை
விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல
கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்
துஞ்சிய வில்லாத் துறக்க மனைத்தே 272
அது விண்ணுலகத்தைப் போன்றது
மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது
புண்ணிய மில்லார் புகுதற் கரியது
கண்ணிய கற்பகக் கானங் கலந்தது
வின்ணிய லின்பம் விரவிற் றினிதே 273
எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது
எல்லா விருதுவு மீனும் பொழிலின்
தெல்லா நிதியு மியன்ற விடத்தின
தெல்லா வமரர் கணமு மிராப்பகல்
எல்லாப் புலமு நுகர்தற் கினிதே 274
பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன
பொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன
பொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன
பொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன 275
அந்நாட்டுப் பொழில் முதலியன
கானங்க ளாவன கற்பகங் காமுகர்
தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்
நானங்க ளாவன நாவி நருவிரை
வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ ? 276
மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்
குணிக்கப் படாதன குளிர்புனல் நீத்தம்
கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம்
பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால் 277
வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்
ஆங்கதன் மேல வறுபது மாநகர்
தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன
நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்
தோங்கிய சூளா மணியி னொளிர்வது 278
இரத்தின பல்லவம்
மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்
திருத்தின வில்லது செம்பொ னுலகில்
புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே 279
அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது
வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
முளைத்தெழு காம முடிவில ராகித்
திளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம்
களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே 280
அந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்
ஆடவர் கொம்பனை யாரிளை யாரவர்
பாடக மெல்லோர் பரவிய சீறடி
தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோ யவைத்
தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே 281
வருத்தமுள்ள நகர்
சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த
மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார்
முலைத்தடம் பாய முரிந்து முடவண்
டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே 282
முரிவன பல
வனைத்தன போலும் வளர்ந்த முலையார்
இனைந்துதங் காதல ரின்பக் கனிகள்
கனிந்து களித்தகங் காமங் கலந்துண
முனிந்து புருவ முரிவ பலவே 283
அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்
செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்
அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்
ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி
மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே 284
அந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது
வளர்வன போலு மருங்குல்க ணோவத்
தளர்வன போல்பவர் தாமக் குழன்மேற்
கிளர்வன போதிள வாசங் கிளைத்துண்
டுளர்வன போதரு மூதை யுளதே 285
அந்நகரத்தே அஞ்சி மறைவன
பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்
செங்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டு
மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்
கஞ்சா வொளிக்கு மயல ததுவே 286
இன்றமிழியற்கை யின்பம்
பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்
தூசினு ணின்று சொரிமணிக் கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை
மூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம் 287
காதல் தூது
காம விலேகையுங் கற்பக மாலையும்
சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய் 288
காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்
தாமத் தொடையல் பரிந்து தமனிய
வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்
காமக் கடலைக் கலக்குங் கழலவர்
தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே 289
வேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்
பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின்
மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள்
மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா
ளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான் 290
அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது
அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்
பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி
மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே 291
அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்
சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங்
கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலுங்
சுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே 292
அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்
தம்பியர் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன்
வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்
தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய் 293
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார் அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்
படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்
புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே
விடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும்
நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான் 294
அமைச்சனும் நிமித்திகனும்
ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல்
கோணை நூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான்
பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
காணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய் 295
அச்சுவக்கிரீவன் தன்மை
தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்
கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான்
பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி
மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா 296
அச்சுவக்கண்டனது தோள்வன்மை
குளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே
களிருநூ றெடுக்க லாகக் கற்றிரள் கடகக் கையால்
ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே
வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார் 297
அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்
முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம்
மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா
செற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே
நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம் 298
சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்
ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித்
தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு
மாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே
தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான் 299
சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்
மற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடு
முற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும்
வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்
கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான் 300
பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்
சுடர்மணி மருங்குற் பைங்கட் சுளிமுகக் களிதல் யானை
யடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித்
தொடர்மணிப் பூணி னாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டே
படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான் 301
வேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்
நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்
மேலா ராயு மேதமை யாலு மிகநல்லான்
தோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்
வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ 302
அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்
தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்!
யானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதே
மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ
ரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன் 303
பிறந்த நாட் குறிப்புக் கூறல்
மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்
தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார் 304
காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன்
மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயனால்
ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்
தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள் 305
இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்
நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான்
தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான்
எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால்
செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன் 306
என்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றால்
குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய்
நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால்
நின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான் 307
சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்
ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே
ஊழிக் கால மோடின வென்னு முரையாலும்
தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ
சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய் 308
அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்
கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர்
மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதின்
றெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள்
பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம் 309
இரத்தின கண்டன் இளவரசன்
வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான்
ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்
ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய் 310
மன்னன் வினாதல்
அன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால்
என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்
இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே
அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான் 311
சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்
மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்
கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை
மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக்
கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான் 312
வேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்: பவச்சுதன் கூற்று
பவனஞ்சன் மாண்பு
கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்
தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்
பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்
தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான் 313
அமிழ்தபதி நாட்டு வேகரதன்
அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும்
வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார்
விளங்கொளி யுருவத் திண்டோ ள் வேகமா ரதனை யன்றே
இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான் 314
மேகபுரத்துப் பதுமரதன்
வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்
ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்
பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை
ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய் 315
இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்
இலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும்
உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்
அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன்
குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான் 316
கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்
நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும்
திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல்
அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்
செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய் 317
திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்
சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்
வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா
டேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன்
காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான் 318
சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்
செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்
அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார்
இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்
மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா 319
அச்சுவபுரத்துக் கனக சித்திரன்
அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்
திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்
கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே
ஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான் 320
சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்
சீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும்
காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த
தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான்
தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான் 321
கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது
கற்றவர் புகழுங் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்
கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேது
மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான் 322
இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்
இஞ்சிசூழ் ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச்
சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்
அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்
மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா! 323
எங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க்
கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை
ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்
வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான் 324
வேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்
மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி
துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்
அன்னதே யென்றெல் லார்களு மொட்டினார் 325
சுதசாகரன் என்பவன் சொல்லுதல்
அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்
வல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய்
மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை
சொல்லி னான்சுத சாகர னென்பவே 326
பவச்சுதன் கூறியது உண்மை என்றல்
ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்
பாழி யாகின்ற திண்டோ ட் பவச்சுதன்
சூழி யானையி னாய் சொலப் பட்டன
ஊழி யாருரை யும்மொத் துள கண்டாய் 327
பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்
ஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம்
பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்
வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்
தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய் 328
அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்
வண்ட வாமுடி மன்னருண் மற்றவன்
தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
துண்டி யானுரைப் பானுறு கின்றது
விண்டு வாழுநர் மேனகு வேலினாய் 329
சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்
போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்
கேக நாயக னாயினி தாள்பவன்
மேக வாகன னென்றுளன் வீழ்மத
வேக மால்களி றும்மிகு வேலினான் 330
மேகவாகனன் மனைவி மேகமாலினி
நாக மாலைகண் மேனகு வண்டினம்
ஏக மாலைய வாயிசை கைவிடாத்
தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்
மேக மாலினி யென்றுரை மிக்குளாள் 331
அவர்களுடைய மகன் விச்சுவன்
தேவி மற்றவ டெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்
ஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான் 332
விச்சுவன் பெருமை
மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்
குய்யும் வாயி லாணுர்த்திய தோன்றிய
ஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ்
வைய மாயதெல் லாம்வளர் கின்றதே 333
இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்
மங்குல் வானுல காண்டு வரத்தினால்
இங்கு வந்தென னீணண்டளி யீந்தபின்
திங்கள் வானொளி யிற்றிகழ் சோதியாய்த்
தங்கு வானுல கிற்றகை சான்றதே 334
தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த்
தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ
டன்ன னாதலி னாலவன் மேற்பிறர்
என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார் 335
சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்
காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன்
தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல்
ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும்
தாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ 336
விச்சுவன் தங்கை
நம்பி தங்கை நகைமலர்க் கற்பகக்
கொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள்
அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல்
வம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள் 337
அவளுடைய பெயர் சோதிமாலை
கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு
கீத மாலைய கின்னர வண்டினம்
ஊதி மாலைய வாயுறை யுங்குழல்
சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள் 338
சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்
வெம்பு மால்களி யானை விலக்குநீர்
நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி
அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்
வம்பு சேர்முலை வாரி வளாகமே 339
சுதசாகரன் முடிவுரை
இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்
என்ன வாறு மிகப்பவ ரின்மையால்
அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்
சொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய் 340
சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்
கொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம்
அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி
நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான்
தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான் 341
எல்லோரையும் விலக்கிக் கூறுதல்
அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்
கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக்
கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால்
பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே 342
விச்சுவனை விலக்கிக் கூறுதல்
சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர மாளும்
தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்
போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்ய
தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய் 343
விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்
மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்
பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும்
தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான் 344
விச்சுவன் இயல்பு
மண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும்
பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான்
விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்
கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய் 345
மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்
செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்
அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலை
இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர
உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான் 346
அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்
பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்
தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி
செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை
வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே 347
இதுவுமது
மந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும்
தந்திரந் துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும்
இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர்
அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான் 348
ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்
போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்
தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்
கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம் 349
இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்
அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும்
இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்
செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு
மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே 350
சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்
வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத்
தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும்
ஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகா
காரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான் 351
ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்
ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே
கன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும்
என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாய்
இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான் 352
சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்
வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட்
கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான்
தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால்
யாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான் 353
சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்
என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி
மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்
சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன்
நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான் 354
அமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்
இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா
மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா
சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி
அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார் 355
அரசன் அரண்மனையை அடைதல்
மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்
சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப
வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச
அந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான் 356
வேறு - நண்பகலாதல்
மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந்
துகுகதிர் மண்டப மொளிர வேறலும்
தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி
நகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே 357
கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்
தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா
வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன
வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே 358
ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்
மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்
பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்
கலிவிழாக் கழுமின கடவுட் டானமே 359
குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்
மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்
கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு
வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே 360
பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்
குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே 361
அங்கவள்வாய்க் கயம்வல ராம்ப றூம்புடைப்
பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு
கொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன
திங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே 362
மாயிரும் பனித்தடம் படிந்து மையழி
சேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத்
தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன்
பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே 363
ஈரணிப்பள்ளி வண்ணனை
சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந்
தந்தரத் தசைப்பன வால வட்டமு
மெந்திரத் திவலையு மியற்றி யீர்மணல்
பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார் 364
குருமணித் தாமரைக் கொட்டை சூடிய
திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்
பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி
அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார் 365
பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்
அன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடைப்
பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்
கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார் 366
மன்னன் உண்ணுதல்
வாரணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்
தோரணி யின்னிய மிசைத்த வின்பமோ
டாரணி தெரியலா னமிர்த மேயினான் 367
அரசன் தெருவில் நடந்து செல்லுதல்
வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்
வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான்
அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்
கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான் 368
அரசன் நடந்து செல்லுதல்
பொன்னலர் மணிக்கழல் புலம்பத் தேனினம்
துள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழ
மன்னவன் னடத்தொறு மகர குண்டலம்
மின்மலர்த் திலங்குவில் விலங்க விட்டவே 369
மெய்காவலர் வேந்தனைச் சூழ்தல்
நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
வையகங் காவலன் மருங்கு சுற்றினார் 370
அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்
சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ
நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான் 371
நிமித்திகன் அரசனை வரவேற்றல்
எங்குலம் விளங்கவிக் கருளி வந்தவெங்
கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென
மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்
கங்கலர் கேள்வியா னாசி கூறினான் 372
அரசன் மண்டபத்தை அடைதல்
கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்
விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்
வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்
மண்டப மணித்தல மன்ன னெய்தினான் 373
அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்
தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது
மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்
துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்
குழையவன் குமரிதன் கரும மென்னினான் 374
நிமித்திகன் பேசத் தொடங்குதல்
கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய
பனைத்திர ளனையதோட் படலை மாலையான்
மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல
நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான் 375
அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்
மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான் 376
தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்
வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்
கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை
மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்
எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே 377
பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
மன்சுலா வகலநின் றலரும் வாளினாய் 378
சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்
ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய
சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்
போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்
மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே 379
சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்
அம்மயி லனையவ டிறத்தி னாரியன்
செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்
மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்
பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான் 380
மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்
முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்
மன்னிய திருமொழி யகத்து மாதராள்
என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்
கன்னவ னாதிமா புராண மோதினான் 381
உலகங்கள் எண்ணிறந்தன என்றல்
மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்
தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்
ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை
ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே 382
உலக அமைப்பு உரைத்தல்
மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளிசினை நாவன் மாமரம்
அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே 383
உலகில் உள்ளன
குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்
கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்
வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே 384
மாற்றறு மண்டில மதனு ளூழியால்
ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்
தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது
பாற்றரும் புகழினாய் பரத கண்டமே 385
பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது
மற்றது மணிமய மாகிக் கற்பகம்
பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப்
பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார் 386
போக காலம் கழிதல்
வெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனி
அங்கதிர் வளையமு மாதி யாயின
இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே 387
அருகக் கடவுள் தோற்றம்
ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய் 388
உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது
ஆரரு டழழுவிய வாழிக் காதியாம்
பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே 389
அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்
அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்
குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான்
புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்
நலங்கிளர் திருமொழி நாத னென்பவே 390
பரதன் என்னும் அரசன்
ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய
வீங்கிய விரிதிரை வேலி காவலன்
ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்
பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே 391
பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்
ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்
ஊ ழியா னொளிமல ருருவச் சேவடி
சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான் 392
பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்
கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே 393
அருகக் கடவுள் கூறுதல்
என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே 394
முதல் வாசுதேவனை மொழிதல்
மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்
பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
கொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான்
அன்னவன் கேசவர்க் காதி யாகுமே 395
அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்
கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் கன்னி யேதுவால்
ஆசர வச்சுவக் கிரீவ னாவியும்
தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே 396
பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்
தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்
ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்
சீரணி திருமொழித் தெய்வத் தேவனே 397
அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்
ஆதியு மந்தமு நடுவு நம்மதே
ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ
காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது
போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே 398
மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்
அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய
கன்னவி விலங்குதோட் காளை யானவன்
மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர்
மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான் 399
இதுவுமது
திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்
பொருவரு போதன முடைய பூங்கழல்
செருவமர் தோளினான் சிறுவ ராகிய
இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே 400
அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்
கானுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே 401
திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்
ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
வீங்கிய வுவகையன் வேந்த னாயினான் 402
சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்
கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே 403
நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான்
உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
இமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்
சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான் 404
சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்
இருதிலத் தலைமக னியன்ற நூற்கடல்
திருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச்
சொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென்
றருநிதி வளங்கொணா டாள நல்கினான் 405
அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்
மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் னடையவட் கறியக் கூறினான் 406
மக்கட்பேற்றின் மாண்பு கூறல்
தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே 407
குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்
தலைமகள் றாடனக் காகச் சாகைய
நிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா முதியர் தேன்களாக்
குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே 408
நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்
சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்
காழிநீர் வையகத் தரிய தாவதே 409
நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்
தகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள்
நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே
துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்
மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள் 410
மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்
வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி
நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே 411
நீ சிறப்படைந்தாய் எனல்
மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்
றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்
நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்
செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய் 412
சுயம்பிரபையின் பெருமை
மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்
தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென
ஓவினூற் புரோகித னுணர வோதினான் 413
வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்
மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை
ஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக
முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்
தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள் 414
சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்
மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்
மன்னவ ரருளில ராயின் மக்களும்
பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே 415
இதுவும் அது
பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்பொன் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள் 416
அரசன் இன்புற்றிருத்தல்
திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான் 417
மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்
மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்
திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான் 418
சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்
வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்
கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார் 419
பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்
தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்
கையமே யொழிந்தன மனலும் வேலினாய்
செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்
வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே 420
மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்
கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக்
குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான்
மற்றவன் மருசியே யவனை நாம்விடச்
சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே 421
மரீசியைத் தூது அனுப்புதல்
காரியந் துணிந்தவர் மொழியக் காவலன்
மாரியந் தடக்கையான் வருக வென்றொரு
சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான் 422
மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்
மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்
துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய
பொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே 423
வண்டினம் களியாட்டயர்தல்
புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்
பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென
மதுமலர் பொழிதர மழலை வண்டினம்
கதுமல ரினையொடு கலவி யார்த்தவே.

5.மந்திரசாலைச் சருக்கம்
அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்ததுதஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியாரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடைநஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார் 233
மந்திரசாலையின் அமைப்பு
உள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப்புள்ளுமல் லாதவும் புகாத நீரதுவெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகைவள்ளறன் மந்திர சாலை வண்ணமே 234
அரசன் பேசத் தொடங்குதல்
ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிடவீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே 235
வேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்
மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப்புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்டநுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றாரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே 236
அமைச்சர் மாண்பு
வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர் 237
அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே
சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டிவெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனுமற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்புமற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே 238
அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்
வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலேதாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர்பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே 239
அரசன் முகமன் பொழிதல்
அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகுமற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்செற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே 240
அரசனும் அமைச்சர்களும்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறிஅறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார் 241
தோள்வலியும் சூழ்ச்சியும்
வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்கோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான் 242
சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்
ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ ன்று மன்றேயாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சிவாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே 243
சூழ்சியே அரசன் ஆற்றல்
ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்கஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே 244
இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்
வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க்கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கைகடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணாமடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே 245
சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்
சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கைதந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்துதந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே 246
அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்
எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனுமடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போலவடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சிகொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே 247
உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்
மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராயபன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னையென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றேயின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான் 248
அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்
கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்குநங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே 249
அமச்சர்கள் பதிலுரைத்தல்
இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தியறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறேநிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்றுமுறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார் 250
சச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்
பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்துணிந்துதன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்ல லுற்றான்இணந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்றஅணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே 251
சூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்
பொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந்தொழிற்கதிர்க் கடவு டோ ன்றச் சூரிய காந்தமென்னும்எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றேஅழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே 252
அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்
கோணைநூற் றடங்க மாட்டக் குணமிலார் குடர்க ணையஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலேபேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான் 253
திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்
சூழ்கதிர் தொழுதி மாலைச் சுடர்பிறைக் கடவு டோ ன்றித்நாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றேபோழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய் 254
நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்
கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டுதண்ணளித் தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலேமண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே 255
பொறுமையின் பெருமை
கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுந்தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே 256
அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்
நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ ?மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே 257
இதுவுமது
மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்தண்குளிர் கொள்ளு மேனுத் தாமிக வெதும்பு மன்றே 258
அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை
தீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலேவேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே 259
அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை
மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்டவிரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய் 260
ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலேதிருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கிஇருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே 261
உலகத்திற்குக் கண்கள் மூன்று
கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா 262
இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்
குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்படிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார்முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மிஅடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே 263
அரசர்களைப்போல மக்கள் இலர்
தண்சுடர் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமேவிண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போலமண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய்கண்சுடர் கனலச் சீறுங் கமழ்கடாக் களிற்று வேந்தே 264
அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்
அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மைவருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற்பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய் 265
விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்
அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டிஇந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான் 266
அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது
மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம்உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்அருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய்இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான் 267
சூழ்ச்சியின் மாண்பு
உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்துவிரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்எரிதவழ்ந் திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான் 268
இதுவுமது
பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்துமஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய் 269
செய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்
கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்துமுற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள்இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே 270
செவ்வி கேட்டல்
தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்தபான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்கும்வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனையான்மகிழ் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான் 271
வேறு - விஞ்சையர் சேடி வண்ணனை
மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலைவிஞ்சையர் வாழும் விழாவணி நல்லுலகஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்துஞ்சிய வில்லாத் துறக்க மனைத்தே 272
அது விண்ணுலகத்தைப் போன்றது
மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பதுபுண்ணிய மில்லார் புகுதற் கரியதுகண்ணிய கற்பகக் கானங் கலந்ததுவின்ணிய லின்பம் விரவிற் றினிதே 273
எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது
எல்லா விருதுவு மீனும் பொழிலின்தெல்லா நிதியு மியன்ற விடத்தினதெல்லா வமரர் கணமு மிராப்பகல்எல்லாப் புலமு நுகர்தற் கினிதே 274
பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பனபொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பனபொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பனபொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன 275
அந்நாட்டுப் பொழில் முதலியன
கானங்க ளாவன கற்பகங் காமுகர்தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்நானங்க ளாவன நாவி நருவிரைவானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ ? 276
மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்குணிக்கப் படாதன குளிர்புனல் நீத்தம்கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம்பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால் 277
வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்
ஆங்கதன் மேல வறுபது மாநகர்தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பனநீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்தோங்கிய சூளா மணியி னொளிர்வது 278
இரத்தின பல்லவம்
மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்திருத்தின வில்லது செம்பொ னுலகில்புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே 279
அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது
வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடிமுளைத்தெழு காம முடிவில ராகித்திளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம்களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே 280
அந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்
ஆடவர் கொம்பனை யாரிளை யாரவர்பாடக மெல்லோர் பரவிய சீறடிதோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோ யவைத்தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே 281
வருத்தமுள்ள நகர்
சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்தமலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார்முலைத்தடம் பாய முரிந்து முடவண்டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே 282
முரிவன பல
வனைத்தன போலும் வளர்ந்த முலையார்இனைந்துதங் காதல ரின்பக் கனிகள்கனிந்து களித்தகங் காமங் கலந்துணமுனிந்து புருவ முரிவ பலவே 283
அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்
செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரிமைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே 284
அந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது
வளர்வன போலு மருங்குல்க ணோவத்தளர்வன போல்பவர் தாமக் குழன்மேற்கிளர்வன போதிள வாசங் கிளைத்துண்டுளர்வன போதரு மூதை யுளதே 285
அந்நகரத்தே அஞ்சி மறைவன
பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்செங்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டுமஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்கஞ்சா வொளிக்கு மயல ததுவே 286
இன்றமிழியற்கை யின்பம்
பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்தூசினு ணின்று சொரிமணிக் கோவையும்பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடைமூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம் 287
காதல் தூது
காம விலேகையுங் கற்பக மாலையும்சேம மணிநகைச் செப்பினு ளேந்துபுதூமக் குழலவர் தூது திரிபவர்தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய் 288
காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்
தாமத் தொடையல் பரிந்து தமனியவாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்காமக் கடலைக் கலக்குங் கழலவர்தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே 289
வேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்
பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின்மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள்மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றாளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான் 290
அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது
அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்திமதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே 291
அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்
சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங்கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலுங்சுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே 292
அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்
தம்பியர் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன்வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய் 293
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார் அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்
படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தேவிடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும்நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான் 294
அமைச்சனும் நிமித்திகனும்
ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல்கோணை நூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான்பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்காணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய் 295
அச்சுவக்கிரீவன் தன்மை
தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான்பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமிமன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா 296
அச்சுவக்கண்டனது தோள்வன்மை
குளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னேகளிருநூ றெடுக்க லாகக் கற்றிரள் கடகக் கையால்ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றேவெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார் 297
அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்
முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம்மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னாசெற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றேநற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம் 298
சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்
ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித்தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லுமாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தேதீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான் 299
சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்
மற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடுமுற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும்வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான் 300
பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்
சுடர்மணி மருங்குற் பைங்கட் சுளிமுகக் களிதல் யானையடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித்தொடர்மணிப் பூணி னாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டேபடர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான் 301
வேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்
நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்மேலா ராயு மேதமை யாலு மிகநல்லான்தோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ 302
அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்
தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்!யானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதேமானங் கொண்ட மாரதர் போரே றனையாயோரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன் 303
பிறந்த நாட் குறிப்புக் கூறல்
மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணிநானக் கோதை நங்கை பிறந்த நாளானேவானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார் 304
காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன்மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயனால்ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள் 305
இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்
நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான்தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான்எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால்செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன் 306
என்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றால்குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய்நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால்நின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான் 307
சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்
ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கேஊழிக் கால மோடின வென்னு முரையாலும்தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோசூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய் 308
அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்
கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர்மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதின்றெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள்பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம் 309
இரத்தின கண்டன் இளவரசன்
வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான்ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய் 310
மன்னன் வினாதல்
அன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால்என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றேஅன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான் 311
சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்
மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதைமெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக்கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான் 312
வேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்: பவச்சுதன் கூற்று
பவனஞ்சன் மாண்பு
கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான் 313
அமிழ்தபதி நாட்டு வேகரதன்
அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும்வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார்விளங்கொளி யுருவத் திண்டோ ள் வேகமா ரதனை யன்றேஇளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான் 314
மேகபுரத்துப் பதுமரதன்
வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானைஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய் 315
இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்
இலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும்உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன்குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான் 316
கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்
நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும்திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல்அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய் 317
திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்
சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லாடேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன்காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான் 318
சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்
செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார்இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா 319
அச்சுவபுரத்துக் கனக சித்திரன்
அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றேஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான் 320
சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்
சீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும்காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்ததேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான்தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான் 321
கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது
கற்றவர் புகழுங் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்செற்றவர்ச் செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேதுமற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான் 322
இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்
இஞ்சிசூழ் ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச்சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா! 323
எங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க்கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளைஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான் 324
வேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்
மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளிதுன்னு சேவடி யாற்குச் சுருங்கவேபன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்அன்னதே யென்றெல் லார்களு மொட்டினார் 325
சுதசாகரன் என்பவன் சொல்லுதல்
அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்வல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய்மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவைசொல்லி னான்சுத சாகர னென்பவே 326
பவச்சுதன் கூறியது உண்மை என்றல்
ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்பாழி யாகின்ற திண்டோ ட் பவச்சுதன்சூழி யானையி னாய் சொலப் பட்டனஊழி யாருரை யும்மொத் துள கண்டாய் 327
பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்
ஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம்பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய் 328
அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்
வண்ட வாமுடி மன்னருண் மற்றவன்தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறிதுண்டி யானுரைப் பானுறு கின்றதுவிண்டு வாழுநர் மேனகு வேலினாய் 329
சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்
போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்கேக நாயக னாயினி தாள்பவன்மேக வாகன னென்றுளன் வீழ்மதவேக மால்களி றும்மிகு வேலினான் 330
மேகவாகனன் மனைவி மேகமாலினி
நாக மாலைகண் மேனகு வண்டினம்ஏக மாலைய வாயிசை கைவிடாத்தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்மேக மாலினி யென்றுரை மிக்குளாள் 331
அவர்களுடைய மகன் விச்சுவன்
தேவி மற்றவ டெய்வம் வழிபடமேவி வந்தனன் விச்சுவ னென்பவன்ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்ஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான் 332
விச்சுவன் பெருமை
மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்குய்யும் வாயி லாணுர்த்திய தோன்றியஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ்வைய மாயதெல் லாம்வளர் கின்றதே 333
இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்
மங்குல் வானுல காண்டு வரத்தினால்இங்கு வந்தென னீணண்டளி யீந்தபின்திங்கள் வானொளி யிற்றிகழ் சோதியாய்த்தங்கு வானுல கிற்றகை சான்றதே 334
தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த்தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோடன்ன னாதலி னாலவன் மேற்பிறர்என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார் 335
சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்
காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன்தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல்ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும்தாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ 336
விச்சுவன் தங்கை
நம்பி தங்கை நகைமலர்க் கற்பகக்கொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள்அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல்வம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள் 337
அவளுடைய பெயர் சோதிமாலை
கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழுகீத மாலைய கின்னர வண்டினம்ஊதி மாலைய வாயுறை யுங்குழல்சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள் 338
சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்
வெம்பு மால்களி யானை விலக்குநீர்நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணிஅம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்வம்பு சேர்முலை வாரி வளாகமே 339
சுதசாகரன் முடிவுரை
இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்என்ன வாறு மிகப்பவ ரின்மையால்அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்சொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய் 340
சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்
கொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம்அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறிநங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான்தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான் 341
எல்லோரையும் விலக்கிக் கூறுதல்
அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக்கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால்பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே 342
விச்சுவனை விலக்கிக் கூறுதல்
சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர மாளும்தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்யதாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய் 343
விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்
மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்திஅங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும்தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான் 344
விச்சுவன் இயல்பு
மண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும்பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான்விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய் 345
மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்
செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலைஇறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேரஉறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான் 346
அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்
பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவிசெங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளைவெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே 347
இதுவுமது
மந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும்தந்திரந் துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும்இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர்அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான் 348
ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம் 349
இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்
அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும்இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்குமெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே 350
சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்
வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத்தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும்ஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகாகாரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான் 351
ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்
ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானேகன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும்என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாய்இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான் 352
சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்
வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட்கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான்தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால்யாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான் 353
சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்
என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கிமின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன்நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான் 354
அமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்
இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டாமந்திர நீளு மாயின் வருவன வறிய லாகாசந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றிஅந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார் 355
அரசன் அரண்மனையை அடைதல்
மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்பவந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீசஅந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான் 356
வேறு - நண்பகலாதல்
மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந்துகுகதிர் மண்டப மொளிர வேறலும்தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளிநகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே 357
கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமாவெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டனவண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே 358
ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்கலிவிழாக் கழுமின கடவுட் டானமே 359
குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடுவண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே 360
பங்கயத் துகள்படு பழன நீர்த்திரைமங்கையர் முலையொடு பொருத வாவிகள்அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே 361
அங்கவள்வாய்க் கயம்வல ராம்ப றூம்புடைப்பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடுகொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டனதிங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே 362
மாயிரும் பனித்தடம் படிந்து மையழிசேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத்தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன்பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே 363
ஈரணிப்பள்ளி வண்ணனை
சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந்தந்தரத் தசைப்பன வால வட்டமுமெந்திரத் திவலையு மியற்றி யீர்மணல்பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார் 364
குருமணித் தாமரைக் கொட்டை சூடியதிருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலிஅருமணிக் கொம்பனா ரலர வூட்டினார் 365
பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்
அன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடைப்பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகைமன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார் 366
மன்னன் உண்ணுதல்
வாரணி முலையவர் பரவ மன்னவன்ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்தோரணி யின்னிய மிசைத்த வின்பமோடாரணி தெரியலா னமிர்த மேயினான் 367
அரசன் தெருவில் நடந்து செல்லுதல்
வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான்அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான் 368
அரசன் நடந்து செல்லுதல்
பொன்னலர் மணிக்கழல் புலம்பத் தேனினம்துள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழமன்னவன் னடத்தொறு மகர குண்டலம்மின்மலர்த் திலங்குவில் விலங்க விட்டவே 369
மெய்காவலர் வேந்தனைச் சூழ்தல்
நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்வையகங் காவலன் மருங்கு சுற்றினார் 370
அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்
சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழநிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடைஅரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான் 371
நிமித்திகன் அரசனை வரவேற்றல்
எங்குலம் விளங்கவிக் கருளி வந்தவெங்கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கெனமங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்கங்கலர் கேள்வியா னாசி கூறினான் 372
அரசன் மண்டபத்தை அடைதல்
கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்மண்டப மணித்தல மன்ன னெய்தினான் 373
அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்
தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மதுமழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்குழையவன் குமரிதன் கரும மென்னினான் 374
நிமித்திகன் பேசத் தொடங்குதல்
கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடியபனைத்திர ளனையதோட் படலை மாலையான்மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொலநினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான் 375
அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்
மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான் 376
தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்
வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனைமண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே 377
பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலைமின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்என்சொலா லின்றியா னியம்பு நீரதோமன்சுலா வகலநின் றலரும் வாளினாய் 378
சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்
ஆதிநா ளறக்கதி ராழி தாங்கியசோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே 379
சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்
அம்மயி லனையவ டிறத்தி னாரியன்செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான் 380
மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்
முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்மன்னிய திருமொழி யகத்து மாதராள்என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்கன்னவ னாதிமா புராண மோதினான் 381
உலகங்கள் எண்ணிறந்தன என்றல்
மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறைஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே 382
உலக அமைப்பு உரைத்தல்
மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்ததுசுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்ததுநந்திய நளிசினை நாவன் மாமரம்அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே 383
உலகில் உள்ளன
குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே 384
மாற்றறு மண்டில மதனு ளூழியால்ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்தேற்றிய விரண்டினுந் தென்மு கத்ததுபாற்றரும் புகழினாய் பரத கண்டமே 385
பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது
மற்றது மணிமய மாகிக் கற்பகம்பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப்பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார் 386
போக காலம் கழிதல்
வெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனிஅங்கதிர் வளையமு மாதி யாயினஇங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகைபொங்கிய புரவியாய் போக காலமே 387
அருகக் கடவுள் தோற்றம்
ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய் 388
உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது
ஆரரு டழழுவிய வாழிக் காதியாம்பேரருண் மருவிய பிரான்றன் சேவடிகாரிருள் கழிதரக் கண்க வின்றரோசீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே 389
அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்
அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான்புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்நலங்கிளர் திருமொழி நாத னென்பவே 390
பரதன் என்னும் அரசன்
ஆங்கவன் றிருவரு ளலரச் சூடியவீங்கிய விரிதிரை வேலி காவலன்ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே 391
பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்
ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்ஊ ழியா னொளிமல ருருவச் சேவடிசூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான் 392
பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்
கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்எதிரது வினவினா னிறைவன் செப்பினான்அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே 393
அருகக் கடவுள் கூறுதல்
என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்நின்முத லீரறு வகையர் நேமியர்மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே 394
முதல் வாசுதேவனை மொழிதல்
மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்பொன்னவிர் போதன முடைய பூங்கழல்கொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான்அன்னவன் கேசவர்க் காதி யாகுமே 395
அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்
கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலைகாசறு வனப்பினோர் கன்னி யேதுவால்ஆசர வச்சுவக் கிரீவ னாவியும்தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே 396
பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்
தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்ஆரணி யறக்கதி ராழி நாதனாம்பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்சீரணி திருமொழித் தெய்வத் தேவனே 397
அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்
ஆதியு மந்தமு நடுவு நம்மதேஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோகாதுவே லரசர்கோக் களிப்புற் றானிதுபோதுசே ரலங்கலாய் புராண நீர்மையே 398
மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்
அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றியகன்னவி விலங்குதோட் காளை யானவன்மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர்மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான் 399
இதுவுமது
திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்பொருவரு போதன முடைய பூங்கழல்செருவமர் தோளினான் சிறுவ ராகியஇருவரு ளிளையவ னீண்டந் நம்பியே 400
அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்
கானுடை விரிதிரை வையங் காக்கியமானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்தானடைந் தமர்வதற் குரிய டையலே 401
திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்
ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கியஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்வீங்கிய வுவகையன் வேந்த னாயினான் 402
சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்
கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறிஇங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொருசிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே 403
நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான்உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்இமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான் 404
சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்
இருதிலத் தலைமக னியன்ற நூற்கடல்திருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச்சொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென்றருநிதி வளங்கொணா டாள நல்கினான் 405
அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்
மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றதுகன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்அன்னமென் னடையவட் கறியக் கூறினான் 406
மக்கட்பேற்றின் மாண்பு கூறல்
தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்மக்களை யிலாததோர் மனையு மொக்குமே 407
குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்
தலைமகள் றாடனக் காகச் சாகையநிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர்நலமிகு மக்களா முதியர் தேன்களாக்குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே 408
நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்
சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடுமாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்காழிநீர் வையகத் தரிய தாவதே 409
நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்
தகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள்நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமேதுகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள் 410
மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்
வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணிநலம்புரி பவித்திர மாகு நாமநீர்பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடிகுலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே 411
நீ சிறப்படைந்தாய் எனல்
மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய் 412
சுயம்பிரபையின் பெருமை
மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமெனஓவினூற் புரோகித னுணர வோதினான் 413
வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்
மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவைஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிகமுத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள் 414
சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்
மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்மன்னவ ரருளில ராயின் மக்களும்பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே 415
இதுவும் அது
பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்அடிகள தருளினா லம்பொன் சாயலிக்கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள் 416
அரசன் இன்புற்றிருத்தல்
திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழிமருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்பருமணிப் பூண்முலை பாய மார்பிடைஅருமணித் தெரியறே னழிய வைகினான் 417
மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்
மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான் 418
சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்
வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார் 419
பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்
தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்கையமே யொழிந்தன மனலும் வேலினாய்செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே 420
மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்
கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக்குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான்மற்றவன் மருசியே யவனை நாம்விடச்சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே 421
மரீசியைத் தூது அனுப்புதல்
காரியந் துணிந்தவர் மொழியக் காவலன்மாரியந் தடக்கையான் வருக வென்றொருசீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான் 422
மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்
மன்னவன் பணியொடு மருசி வானிடைமின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்துன்னினன் சுரமைநாட் டகணி சூடியபொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே 423
வண்டினம் களியாட்டயர்தல்
புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மெனமதுமலர் பொழிதர மழலை வண்டினம்கதுமல ரினையொடு கலவி யார்த்தவே.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.