LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

விளாம்பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் அவசியமானது !!

வுட் ஆப்பிள்(Wood Apple) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. 


முரட்டு ஓட்டுடன் பார்வைக்கு சாதாரணமாக இருக்கிற விளாம் பழம், ஒரு அழகுக் கலை நிபுணருக்கு இணையானது. 


விளாம்பழத்தில் நிறைந்த அளவில் சிட்ரிக் அமிலமும் சிறு அளவில் பொட்டாஷியம், கால்ஷியம் மற்றும் இரும்பு போன்ற சில மணிச்சத்துக்களும் காணப்படுகின்றன. 


விளாம்பழத்தில் அமிலத்தன்மையும் பழுக்காத விளாங்காயில் துவர்ப்புத் தன்மையும் இருக்கிறது.


விளாம்பழத்தின் அழகு குறிப்புக்கள் :


முகம் பொலிவு பெற :


இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து மிச்சியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போடுங்கள்.  விளாம்பழ விழுது எவ்வளவு நேரமானாலும் உலராது என்பதால், சிறிது நேரத்தில் நீங்களாகவே கழுவி விடுங்கள்.  இந்த சிகிச்சையை தினமும் காலையில் செய்து வந்தால் இழந்த பொலிவு மீள்வதுடன், உங்கள் முகம் இன்னும் இளமையாக மாறும்.


பரு தொல்லை நீங்க :


பயத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், 


விளாங்காய் விழுது - 2 டீஸ்பூன், 


பாதாம்பருப்பு - 2.  


இவை அனைத்தையும் முந்தைய நாள் இரவே ஊறவைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.  


இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால் நாள்பட்ட பருக்கள் கூட மாயமாக மறைந்துவிடும்.  தழும்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இந்த கலவையில் உள்ள விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும்.  பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.


மென்மையான சருமத்திற்கு :


விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வையுங்கள்.  இதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ... எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.  இதை குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகளும் காணாமல் போகும்.


விளாம்பழத்தின் ஆரோக்கிய குறிப்புகள் :


விளாம்பழத்தை, வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.


பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.


தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.


ஒரு கப் தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.


விளாம்பழ மரத்தின் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.


விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடித்தால், நாள்பட்ட பேதியும் சரியாகும். 


சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசி எடுக்கும்.


குழந்தைகள் தினமும் விளாம்பழத்தை சாப்பிட்டு வர நினைவாற்றல் அதிகரிக்கும். 

by Swathi   on 06 Aug 2014  1 Comments
Tags: Wood Apple   Vilam Palam   Vilampazham   விளாம்பழம்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
விளாம்பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் அவசியமானது !! விளாம்பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் அவசியமானது !!
கருத்துகள்
31-Aug-2014 22:23:43 shankaran said : Report Abuse
உங்கள் செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இர்ருக்கிறது . சேவை தொடரட்டும் . வாழ்க .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.