LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF

உலக தண்ணீர் தினம் - மார்ச் 22 !!

நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு.... நீரின்றி நம்மால் பூமியில் வாழ முடியாது என்பதே இதன் பொருளாகும்.....


நாம் வாழும் பூமியானது சுமார் 70 ‌விழு‌க்காடு நீர்பரப்பும், 30 ‌விழு‌க்காடு நிலப்பரப்பும் கொண்டது. 


பூமியில் 70 ‌விழு‌க்காடு பர‌ப்பளவு ‌‌நீ‌ர் இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் 97.5 ‌விழு‌க்காடு க‌ட‌லி‌ல் இரு‌க்கு‌ம் உ‌ப்பு ‌நீ‌ர்தா‌ன். ‌மீத‌ம் உள்ள 2.5 ‌விழு‌க்காடு அள‌வி‌ற்கு‌த்தா‌ன் ‌நில‌த்தடி ‌நீ‌ர் உ‌ள்ளது. இ‌தி‌லு‌ம் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  எ‌ஞ்‌சியு‌ள்ள 0.26 ‌விழு‌க்காடு ‌நீரை‌த்தா‌ன் உலக ம‌க்க‌ள் அனைவரு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வேண்டிய நிலை உள்ளது. 


நமது பூமியில் நாளுக்கு நாள் நன்னீர் பரப்பு அதிகரிக்கிறதோ இல்லையோ ஆனால் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருகிறது. அது மட்டும்மல்லாமல் சிலரின் சுய லாபத்திற்காக தொழிற்ச்சாலை கழிவுகள் நன்னீரில் கலக்கப்படுகிறது. இதன் காரணமாக தேவையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌நீரை‌க் குடி‌க்கு‌ம் ‌நிலை‌க்கு பல பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ன் ‌விளைவு கடுமையான நோ‌ய்க‌ள் மக்களை தாக்குகிறது. 


இதனை கருத்தில் கொண்டுதான் ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. 


நீர் ஆதாரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ?


ஆறுகளிலும், குளங்களிலும் தொழிற்ச்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.


அரசாங்கம் இலவசமாக டி.வி, மிக்சி போன்றவற்றை கொடுப்பதை நிறுத்தி விட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.


பொது குடிநீர் குழாய்களில் வீணாகும் நீரை, அருகில் ஒரு மரத்தையோ, செடியையோ வைத்து அதற்கு செல்லுமாறு வழிவகை செய்யவேண்டும்.


மரம் வளர்ப்பு, நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...


நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும் !! உற்பத்தி செய்வதற்கு சமம் !! 

by Swathi   on 02 Jan 2014  0 Comments
Tags: Water Day   World Water Day   Water   Save Water   தண்ணீர் தினம்   தண்ணீர் சேமிப்பு   உலக தண்ணீர் தினம்  
 தொடர்புடையவை-Related Articles
வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!! வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!!
தமிழ் இலக்கியங்களில் இத்தனை நீர்நிலைகளின் வகைகளா? தமிழ் இலக்கியங்களில் இத்தனை நீர்நிலைகளின் வகைகளா?
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது - ஹீலர் பாஸ்கர் !! தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது - ஹீலர் பாஸ்கர் !!
வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி - ஹீலர் பாஸ்கர் வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி - ஹீலர் பாஸ்கர்
கடல் நீர் குடிக்கலாமா ? ஹீலர் பாஸ்கர் கடல் நீர் குடிக்கலாமா ? ஹீலர் பாஸ்கர்
தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்கும் சிறந்த வடிகட்டி மண்பானை !! தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்கும் சிறந்த வடிகட்டி மண்பானை !!
நீங்கள் தினமும் குடிப்பது நல்ல தண்ணீரா ? நீங்கள் தினமும் குடிப்பது நல்ல தண்ணீரா ?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.