கலாரசனையும் புன்சிரிப்பும் எதையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடைய உங்கள் ரிஷப லக்னத்திற்கு குரு பகவான் 8ம் இடத்திலும் கேது பகவான் 10ம் இடத்திலும் சஞ்சரிக்கும் காலங்கள் ஓரளவு நற்பலன் ஏற்படும் என்றுதான் சொல்ல வேண்டும். எதிலும் தலைமை தாங்கும் எண்ணம் மேலோங்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும்.
உடன் பிறந்தவர்களால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பும் அமையும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து சற்று விலகும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிரயாணங்களால் அலைச்சல் இருந்தாலும் நன்மைகளும் ஏற்படும்
உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் பரவக்கூடும். அதனால் எதிலும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். தாயாரின் அன்பும் அவர்களால் நன்மையும் ஏற்படும். ஒரு சிலருக்கு இடமாற்றம் வீடு மாற்றம் அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. வீட்டில் அடிக்கடி சுபகாரியங்கள் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு அமையும்.
காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தைபாக்யத்தில் எற்பட்டு வந்த தடைகள் நீங்கி ஒரு சிலருக்கு புத்ராப்தி உண்டாகும். விசா பாஸ்போர்ட்டில் இருந்து வந்த தடைகள் விலகும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும். அதே சமயம் எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். போக்குவரத்து வண்டிவாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அவர்களால் நன்மையேற்படும். தாய்மாமன் இருப்பின் அவர்களால் உதவி அமையும். மனைவியின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளால் நன்மையேற்படும். குடும்பத்தில் புது வரவுகள் அமையும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
உங்கள் லகனத்திற்கு குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்பார்த்த வேலை அமையும். கேது 10ம் இடத்தில் இருக்கும் வரை ஏதாவது ஒரு வேலை இருந்துவரும். 4ம் இட ராகு சஞ்சாரம் செய்வது வேலையில் திருப்தியற்ற ஒரு நிலையை உருவாக்கும். எப்படியாயினும் ஏதாவது வேலை இருந்து கொண்டேயிருக்கும். உயரதிகாரிகளால் எதிர்பாராத நன்மைகளும் அதே சமயம் அவர்களால் கெடுபலன்களும் கலந்தே நடந்தேறும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளியூர்இ வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுங்கள் அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பது நல்லது.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
4ம் இடத்து ராகு உற்பத்தி சார்ந்த தொழில்களில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவைக்கு மேல் பொருட்களை உற்பத்தி செய்தல் கூடாது. அவர் 3ம் இடத்தில் அடுத்து சஞ்சரிக்கும் பொழுது சிறுதொழில் தெருவோர வியாபாரங்கள் கமிஷன்இ ஏஜென்ஸிஇ கன்சல்டன்சிஇ போக்குவரத்து தகவல் தொடர்பு மிகவும் ஏற்றமுடன் விளங்கும். ஏற்றுமதி இறக்குமதி சற்று லாபகரமாக அமையும். பங்குச் சந்தையில் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டாலும். குருப்பெயர்ச்சிக்குப்பின் நல்ல லாபம் அமையும். இரும்பு எஃகு சிமெண்ட் இரசாயனம், மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் சாதகமாக அமையும். உணவு ஓட்டல், ஆடை,ஆபரணம் வங்கி இன்சூரன்ஸ் நிதி நன்கு அமையும். கல்வி ரியல் எஸ்டேட் கப்பல் மீன்பிடித் தொழில் வர்த்தகம் மின்சாதனப் பொருட்கள் சாதகமாக அமையும். புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குவதோ கடன் கொடுப்பதோ கூடாது.
விவசாயம்
விளைச்சல் சாதாரணமாக இருந்துவரும்இ பணப்புழக்கம் தாரளமாக அமையும். விவசாயக் கடன் கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். காய்கறிகள்இ பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும். லாபமும் ஓரளவு அமையும். பயிர்கள் இன்சூரன்ஸ் செய்வது நல்லது ஆகும். தேவையில்லாமல் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது. புதிய நவீன விஞ்ஞன உத்திகளை பயன்படுத்தி விளைச்சளை பெருக்குதல் வேண்டும். ஒரு சிலர் தங்களது நிலங்களை குத்தகைக்கு விட்டு கடனை அடைக்க வேண்டியது வரும்.
அரசியல்
அரசியல் சற்று ஏற்றமுடன் இருந்து வரும். குருப்பெயர்ச்சிக்குப்பின் சாதகமாக இருந்து வரும். வழக்குகள் இருப்பின் சாதகமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் கூடும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். அதனால் நன்மைகள் ஏற்படும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சற்று ஏற்றமான காலமாகும். குரு 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் புது ஒப்பந்தங்கள் ஏற்படும். அதனால் எதிர்பாராத பண வரவு அமையும். பட்டம் பதவிகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். புதிய நட்பால் எதிர்பாராத நன்மைகள் அமையும். பணப்புழக்கம் சற்று தாரளமாகவே அமையும்.
மாணவர்கள்
மதிப்பெண் கிடைத்தாலும் அதிக மதிப்பெண் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கல்விக்கடன் கிடைப்பதில் சற்று இழுபறியாகவே இருந்து வரும். விளையாட்டுகளில் ஆர்வம் கூடும். உயர்கல்வி படிக்க வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை.
பெண்கள்
அடிக்கடி பிரயாணங்கள் செய்ய வாய்ப்புகள் அமையும். அதனால் நன்மையேற்படும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராகவே இருந்துவரும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம்இ குழந்தை பாக்யம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். வீட்டில் சுபகாரியங்கள் அடிக்கடி நடக்க வாய்ப்புகள் வந்து அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்கவும் இதுவரை வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் அமையும். வீடு வாங்க சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் வந்து சேரும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் அமையும். அதே சமயம் அவர்களால் தேவையற்ற மன வருத்தங்களும் வந்து சேரும்.
உடல் ஆரோக்யம்
உடலில் சளித்தொல்லைகள் அலர்ஜிஇ வயிற்றில் வலி நெஞ்செரிச்சல் போன்ற உடல் உபாதைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். சர்க்கரை நோய் இருப்பின் உடலை நன்கு கவனித்துப் பேணவும். காதுஇ கழுத்துஇ புஜம்இ போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்ட எண் : 5, 8 அதிர்ஷட நிறம் : பச்சை, கருப்பு அதிர்ஷ்ட நாள் : புதன், சனி அதிர்ஷட இரத்னம் : மரகதப்பச்சை, கருநீலம்
பரிகாரம்
புதன் கிழமை தோறும் “பிரம்மதேவனை” வணங்கி வரவும். “சனிக்கிழமை” தோறும் “சனிபகவானுக்கு” வில்வ இலை மல்லிகைப்பூவால் அர்ச்சனை செய்து வரவும்.
|