|
|||||
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை |
|||||
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஆலங்குடியில் உள்ள ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை விழா நாளை (செப். 27-ந் தேதி) தொடங்குகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் நாளில் குரு பெயர்ச்சி விழா நடத்தப்படுகிறது. குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வருகிற 4.-ந் தேதியன்று பெயர்ச்சி ஆவதையொட்டி, அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் முதல்கட்ட லட்சார்ச்சனை விழா வருகிற 1- ஆம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை, குருபெயர்ச்சிக்கு பின்னர் அக்.8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த லட்சார்ச்சனையில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியினாலான 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
|
|||||
by Mani Bharathi on 26 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|