LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். எதிர்பாராத தனவரவும் உண்டு. தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்.
பரணி
இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்.  தொலை தூரப்பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும் நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். அரசுப் பணி புரிபவர்களுக்கு நேரம் அனுகூலமாகவும், அற்புதமாகவும் இருக்கும். ரோகிணி
இந்த வாரம் சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாகும்.  எதிர்பாராத தனவரவு ஏற்படும்.  புத்திர பாக்கியம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்படலாம்.  பண விஷயமான சிந்தனைகள் எழும். சிலர் காவல்துறைப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரலாம்.  செய்யும் தொழிலில் தடைகள் ஏற்படலாம். தந்தை வழி உறவுகளால் தொல்லை ஏற்படலாம்.  குழந்தைகளால் அவமானமும், மனக்கலக்கமும் ஏற்படலாம்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் ஆன்மீக வாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.  சுபவார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீர்கள்.  விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அரசுத் துறைகளில் பெண் ஊழியர்களின் கை ஓங்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும்.
திருவாதிரை
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். பூஜா வழிபாடுகளாலும், பெரியோர் ஆசிகளாலும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும்.  தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். வாக்கு வன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். பிரயாணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். வீட்டு விஷயங்களில் குடும்பத்தினரிடையே கருத்து மோதல்கள் ஏற்படலாம். அந்த நேரங்களில் ஒற்றுமையே பலம் தரும்.  ஆயினும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரம்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் பெரியோர்களின் ஆசிகள், ஆதரவு ஆகியவை எப்போதும் இருக்கும். கற்பனை வளம் பெருகும். சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வீர்கள். பக்தி மார்க்கத்தில் மனம் செல்வதால் உற்சாகம் பெருகும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தல  யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு. வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.  தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் நட்பு ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். வாழ்க்கையில் சுகானுபவங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி தாங்கமுடியாது. உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு குறையும். தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தித்திறன் அதிகரித்து இலாபம் பெருகும்.
பூசம்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். புத்தக வெளியீட்டாளர்களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றமான காலம். தீயநண்பர்களின் சவகாசத்தால் சிலரின் மனம் தீயவழிமுறைகளை நாடும். எனவே, கவனம் தேவை. சிலர் தேவையற்ற காரணங்களால் அரசுக்கு அபராதம் செலுத்த நேரலாம்.
ஆயில்யம்
இந்த வாரம் பெரியவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பூஜா வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவும் ஏற்படும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்.  வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை. புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  மனம் விரும்பிய பொருட்களை வாங்கக் கூடிய அளவுக்குத் திருப்திகரமான கையிருப்பு இருக்கும். புதிய தொழில் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் பணவரவு ஏற்படும். அரசுப் பணியாளர்களிடம் அதிகாரிகள் அனுகூலமாய் நடந்து கொள்வர். பங்குச்சந்தையில் இலாபமும், போட்டி பந்தயங்களில் ஆதாயமும் கிடைக்கும்.
பூரம்
இந்த வாரம் வாக்கு வன்மை ஓங்கும். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு. எனவே, கோபத்தை அடக்கி அவர்களுடன் ஒத்துப் போவது நல்லது. நண்பர்களுடன் சினிமா போன்ற கேளிகைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள். அரசுப் பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.
ஹஸ்தம்
இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் குடும்பத்தில் மிகமிக முக்கியமான பெரியோர்களின் சகாயத்தால் பெருவாழ்வுக்கான அஸ்திவாரம் அமையும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். நல்ல வக்கணையான உணவு வகைகளை உட்கொள்வீர்கள். டீக்காக உடையணிந்து ஆட்களை அசத்துவீர்கள்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் உங்கள் உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். தொழில், வேலை வாய்ப்புக்கள் பிரகாசாமாய் இருக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படலாம்.  பழைய நண்பர்களிடம் சுமுகமாக இருப்பது நல்லது. வீட்டில் பெண்களால் அதிக வீண் செலவுகள் ஏற்படும்.
சுவாதி
இந்த வாரம் பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள், வஸ்திர லாபம், சுகபோஜனம் ஆகியவை ஏற்படும். அரசுத்துறை மூலமாக எதிர்பார்த்த ஆதாயங்கள் அனைத்துமே விரைவில் கிடைக்கும்  உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது.  தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது.  நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும். விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்கப் பொழுதைக் கழிப்பீர்கள். அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.
அனுஷம்
இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் நிம்மதி ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  சிலருக்கு இடமாற்றங்கள், , அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும்.
கேட்டை
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர்பதவிகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும்.
பூராடம்
இந்த வாரம் சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்குப் பணமுடை காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம்  பெறுவீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் எல்லா நிகழ்வுகளும் மகிழ்ச்சியை வரவழைக்கும். புதிய தொழில் வாய்ப்புக்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். மாணவர்கள் அன்றன்றைக்குத் தங்கள் பாடங்களை அக்கறையுடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
திருவோணம்
இந்த வாரம் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். பெரியோர்களின் ஆசி, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஆகியவற்றால் நல்ல மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். கடின உழைப்பே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் சுக சௌகரியங்கள் கூடும். சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்திப் பெருக்கால் ஞானத் தன்மை எய்துவீர்கள். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.   அரசுப்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான நடவடிக்கைகள் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களிடம் சுமுகமாக இருக்க முயற்சியுங்கள். பணிபுரிவர்களுக்கு வேலையில் சிரத்தைஉண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்குப் பயன்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். சிலருக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது.  
சதயம்
இந்த வாரம் உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கலாம். தங்கள் பொருட்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் தாராளமான பணவரவு இருக்கும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடைபெறும்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.  எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பால் உள்ளம் மகிழும். தொழிற்சாலையில் புதிய எந்திரகளை நிர்மாணித்து, உற்பத்தியைப் பெருக்கி உன்னத நிலையை அடைவீர்கள். உங்கள் தொழில்வழி முன்னேற்றம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெறும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.
ரேவதி
இந்த வாரம் உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றை வாங்கி மகிழ்வீர்கள். புது வீடுகட்டிக் குடியேறும் பாக்கியம் ஏற்படும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.

by Swathi   on 10 May 2018  0 Comments
Tags: நட்சத்திர பலன்கள்   இந்த வார நட்சத்திர பலன்கள்   Natchathira Palangal   Intha vaara Palangal   Daily Rasi Palangal   ராசி பலன்கள்     
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.