ஜோதிட இமயம் அபிராமி சேகர் - 99948 11158
மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி இந்த வாரம் தனவிருத்தி உண்டாகும். வாகனங்களும், சொத்துக்களும் வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். மற்றவர்களுக்கும் சிறப்பான வாரமே. பதவியில் உள்ளவர்களின் பரிச்சியமும், அனுகூலமும் கிடைக்கும். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். பரணி இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சியமாக வெற்றி பெரும். விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். விவசாயிகளுக்குக் கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில் நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். கார்த்திகை 1 ஆம் பாதம் இந்த வாரம் தனவரவு அதிகமாவதால் தரும காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர். மனைவியிடம், நண்பர், மற்றும் உறவுகளிடம் கருத்து முரண்பாடுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உருவாகும். போக்குவரத்தில் விபத்துக்களைத் தவிர்க்க வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். தீய நட்பைத் தவிர்க்கவும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் ) கார்த்திகை 2,3,4 பாதங்கள் இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். மனக் கவலைகளை மனைவியின் அரவணைப்பு குறைக்கும். தாயின் சீரான ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் துடிப்பான செயல்பாடுகள் கண்டு, உங்கள் முகத்தில் புன்னகை தவழ்கிறதே ? சிலருக்குப் புதுவீடு கட்டுதல் பழைய வீட்டைப் புதுப்பித்தல் ஆகியவை ஏற்படும். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள். வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். ரோகிணி இந்த வாரம் உங்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். எறும்பையொத்த, உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளைக் கண்டு அனைவரும் பாராட்டுவர். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து, எதிர்பார்த்தபடி தனவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் தடங்கலின்றி வந்து சேரும். சினிமா, கேளிக்கை விடுதிகள் என ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். தெரிந்தவர்கள், நண்பர்களில் மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். சொல்புத்தியும், சுயபுத்தியும் இல்லாத பிள்ளைகளின் போக்கு கவலை அளிக்கலாம். ஆயினும், தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்) மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். இந்த வாரம் உங்களுக்கு கலப்பான பலன்களாய் இருக்கும். அரசு வகையில் வரி பாக்கிகளுக்காக, கட்டவேண்டிய பணத்தை உடனே கட்டவேண்டிய நிலை ஏற்படும். . அதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் நண்பர்கள் மூலமாகக் கிடைத்துச் சிக்கல்கள் தீரும். பெண்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உயர்திகாரிகளின் உத்தரவுகளை சிரமேற் கொண்டு, அவர்களின் ஆலோசனைப்படி நடந்தால், பணியில் பதவி உயர்வுகள், சகாயங்கள் எனப் பல முன்னேற்றங்கள் தேடி வரும். திருவாதிரை இந்த வாரம் தொடங்க நினைக்கும் எல்லாக் காரியங்களுமே, தடங்கலின்றி, தாமதமின்றி சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக வராத, அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் தவறாது, தடையின்றிக் கிடைப்பதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்குப் பேரின்பம் பெறும் விதமாக மனைவி கருவுற்றிருக்கும் நல்லசேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும். புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் தெய்வபக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும். எப்போதும் பணம்பற்றிய சிந்தனையாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து பண வருமானம் இருக்கும். உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளாலும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும்.
கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்) புனர்பூசம் – 4 ஆம் பாதம் இந்த வாரம் உங்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு பணி உத்தரவு கிடைக்கலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. கற்பனை வளம் பெருகும். தாய், மனைவி, தொழி எனப் பெண்களால் இலாபம் உண்டு. வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவதனால் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் அதிபர்கள் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். பூசம் இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் ஏமாறலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். உயர்வாகன வசதிகளும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவைக்காக அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும். சிலருக்குப் புதிய வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். ஆயில்யம் இந்த வாரம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். பணிபுரியும் பெண்கள் தற்போது உள்ள வேலையை விட்டு வேறு நல்ல வேலைக்கு முயற்சி செய்வர். பங்குச் சந்தை மூலமாகப் புதிய வருமானங்கள் கிடைக்கலாம். மற்றவர்கள் துயர் கண்டு அவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். சீரான பொருளாதார நிலை ஏற்படத் தொழிலில் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்) மகம் இந்த வாரம் உங்களுக்கு மகான்கள், பெரியோர்களின் ஆசிகள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் எதிர்பார்த்ததைவிட அதிக ஆதரவு பெற்றுப் பதவி உயர்வுகளும் பெறலாம். புதிய தோழமையால் நன்மை ஏற்படும். மாணவர்களுக்குக் கவனக் குறைவு காரணமாக தேர்வுகளில் மதிப்பெண்கள் குறையலாம். எனவே, விளையாட்டுத் தனங்களை விட்டு விவேகத்துடன் நடப்பது நல்லது. சிலருக்குப் பணி இடமாற்றங்கள் ஏற்படலாம். பூரம் இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். உத்திரம்- 1 பாதம் இந்த வாரம் உங்களுக்கு இனிப்பான செய்திகள் வரும். இல்லத்தில் சுபகாரியச் செலவுகளுக்குக் குறைவிருக்காது. அதிக உழைப்புக்குப் பிறகே எடுத்த காரியங்கள் ஈடேறி, அதன் காரணமாக இலாபங்கள் பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தான தருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கும் காரியங்களில் சிபாரிசு மூலமாக அனுகூலம் ஏற்படும். வாக்குவன்மை, வாகனயோகம் உண்டு. உத்தியோகம் மற்றும் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.
கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்) உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள் இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு அதிகாரம் மிக்க தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகளின் சேவைகள் மக்களால் அங்கீகரிக்கப்படும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். ஹஸ்தம் இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். பேச்சாளர்கள், வக்கீல்கள் ஆகியோருக்குத் தொழில் முன்னேற்றம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சித்திரை – 1,2 பாதங்கள் இந்த வாரம் உங்களுக்குப் பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர். தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சுயமுன்னேற்றுத்துக்கான திட்டங்களை தீட்டி அதில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு உடன்பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடுகள் எழலாம். தண்ணீர்ப் பழங்கள், பூக்கள் இரத்தினங்கள் ஆகிய பொருட்களின் வியாபாரம் ஆதயம் தரும். வாழ்வு சிறக்கும் பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். எல்லாவிதத்திலும் அனுகூலமான பலன்கள் நடைபெறும், உயர் பதவிகள் கிடைக்கும்.
துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்) சித்திரை-3,4 பாதங்கள் இந்த வாரம் திடீர்ப் பயணங்களால் செலவுகள் ஏற்படலாம். பல புண்ணியத் தலங்களுக்கு மேற்கொள்ளும் பயணம் சிறப்பாய் அமையும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். பணிபுரியும் இடத்தில் இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். அரசு உதவியுடன் புதிய தொழில் தொடங்கும் காலம் கனிந்து வரும். பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். சுவாதி இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். தொழிலில் உள்ளவர்கள் தொழிற்சாலை விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி அடைவார்கள். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பர். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். விசாகம்- 1,2,3 பாதங்கள் இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தொலைதூர சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அரசுப் பணியில் உள்ளோர் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான தகவல்கள் வந்து சேரும்.
விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் ) விசாகம்- 4 ஆம் பாதம் இந்த வாரம் அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். மேலதிகாரிகளின் உதவி மற்றும் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். அனுஷம் இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் விருப்பப்படி நல்ல கணவன் அமைந்து திருமணம் நடக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். சிலருக்கு சகோதரர்களின் ஆதரவால் பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை ஏற்படும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். சுயதொழில் புரிவோருக்கு அரசின் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கேட்டை இந்த வாரம் உங்களுக்குப் புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். திருப்திகரமான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். இளைஞர்களுக்குக் காதல் விவகாரங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.
தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்) மூலம் இந்த வாரம் செல்வத்துக்கு அதிபதியான அலைமகள் உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழமாட்டீர்களா ? தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். சிலருக்குத் தலைவலி/கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். பூராடம் இந்த வாரம் தனவரவு, கூட்டாளிகள் ஒத்துழைப்பு, எதிர்பாலரால் சந்தோஷம், புகழ், கௌரவம், திருமணம் மற்றும் பெரியவர்கள் ஆசி ஆகியவை ஏற்படும். இந்த வாரம் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே நல்ல ஊதியம் அளிக்கும். ஆயினும், வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் நடக்கும். உத்திராடம் –1 ஆம் பாதம் இந்த வாரம் நீங்கள் பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதன் காரணமாக இழப்பைத் தவிர்க்கலாம். திருமண வயது வந்து, திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும்.
மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் ) உத்திராடம்- 2,3,4- பாதங்கள் இந்த வாரம் புதிய சௌகரியங்கள் சேரும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் இலாபம் கிடைக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். நிறைவேறாது எனத் தெரிந்தும், வீண் ஆசைகளை மனதில் வளர்த்துக் கொள்ளாது, விலக்கி வைப்பது நல்லது. விவசாயிகளுக்கு வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிலவும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் திருவோணம் இந்த வாரம் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிலவும். கூட்டு வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புனித யாத்திரைகள் சென்று வருவீர்கள். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். அவிட்டம் 1,2 பாதங்கள் இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் தனவரவு அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களையும், பெரிய கௌரவத்தையும் அடைவீர்கள். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். சிலருக்குப் பேச்சே தொழில் மூலதனமாகும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.
கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்) அவிட்டம் – 3,4 பாதங்கள் இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். தம்பதிகளிடையே இருந்துவந்த மோதல்கள் குறைந்து, அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சதயம் இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். நெடுநாளாக வராத, வரவேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். பூரட்டாதி-1,2,3 பாதங்கள் இந்த வாரம் பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும்.
மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்) பூரட்டாதி – 4 ஆம் பாதம் இந்த வாரம் தாங்கள் எதிர்பார்த்தபடி தாராளமான தனவரவு இருக்கும். வேதம் அறிதல், பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம், நண்பர்களுடன் மிகுந்த உற்சாகத்துடன் உலா வருவீர்கள். மனதிற்குப் பிடித்த புத்தாடைகள், வாய்க்கு ருசியான உணவு வகைகள் ஆகியவற்றை அடைந்து மகிழ்வீர்கள். புத்திர பாக்கியம். புத்திரரால் உதவி ஆகியவை ஏற்படும். கோபத்தை அடக்கினால் குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். தீய குணம் உள்ளவர்களால் பயம் ஏற்படும். எனவே, அத்தகைய நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. உத்திரட்டாதி இந்த வாரம் குடும்ப உறவுகளின் பரிபூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். அவர்களோடு பொழுதுபோக்கான உடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். தனச்சேர்க்கை உண்டு. இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். அரசு வகை ஆதாயம் மற்றும் உதவிகளால் புதிதாகத் தொழில் தொடங்கும் நிலை ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது. பயண சுகம் ஏற்படும். ரேவதி இந்த வாரம் முதல் எதிர்காலத்தில் பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடனான உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். பங்குச் சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்வது இழப்பைக் குறைக்கும். தொழிலில் உங்கள் கூட்டாளிகளின் கடின உழைப்பு மெச்சத் தக்கதாகவும், திருப்தி கரமாகவும் இருக்கும்.
|